Type in Tamil - Google IME
தமிழிலும் பல்வேறுபட்ட மொழிகளிலும் type செய்வதற்கு google IME பெரிதும் உதவுகிறது. உண்மையில் இது ஒரு பழைய சரக்கு. இருப்பினும் நம் நண்பர்கள் இன்னும் தமிழில் தட்டச்சு செய்வதற்கு சிரமப்படுவதாகவே தோன்றுகிறது. அதற்காக இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணமாகட்டும்.
முன்னொரு காலத்தில் தமிழ் type செய்வதானால் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துக்களை ஞாபகம் வைத்தல் வேண்டும். இது எவ்வளவு சிரமம் என்று நம் அச்சக நண்பர்கள் அறிவார்கள். இது நேரத்தை வீணடிப்பத்துடன் ஆங்கில typing வேகத்தையும் பாதிக்கும். இதன்பிறகு வந்த யுனிகோட் சமாச்சாரம் நமக்கு சுத்தமாக பிடிபடவில்லை.
இதற்க்கு தீர்வாக translitaration முறையையும் அதுதாங்க நம்ம மொபைலில sms டைப் பண்ணுற மாதிரி Unicode முறையையும் சேர்த்து நம்ம Google பசங்க வெளியிட்ட சமாச்சாரம் தான் இந்த Google IME.
Google IME பல சிறப்பமிசங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
- UNICODE Support
- Offline Support. டைப் செய்ய இன்டர்நெட் தொடர்பு தேவையில்லை.
- Word Completion சொல்லை முழுமையாக டைப் செய்ய வேண்டியதில்லை.
- Virtual Keyboard
- Search
- Customization
அறுக்காமல் விடயத்துக்கு வருகிறேன். Google IME எவ்வாறு Install செய்வது என்று பார்ப்போம்.
முதலில் இந்த லிங்க் க்கு செல்லுங்கள்.
இங்கு தோன்றும் பதிவிறக்க தெரிவில் உங்களுக்கு வேண்டிய மொழியை தெரிவு செய்யுங்கள்.
பிறகென்ன டவுன்லோட் செய்து நிறுவியதன் பின் அனுபவியுங்கள். உங்கள் Notification Area க்கு அருகில் Language Option தோன்றும்.
தேவையான இடத்தில் Cursor இனை நிறுத்தி டைப் செய்து மகிழலாம்.
Windows XP பாவனையாளர்கள் IME இனை நிறுவும் முன் உங்கள் கணினியில் East Asian Language Support நிறுவப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதனை
Control Panel - Region and Language Option இல் Language tab இல் சரி பார்க்க முடியும்.
மேலதிக உதவிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை Install செய்ய விரும்பும் திறமைசாலிகள் மீண்டும் மேற்சொன்ன முறையில் வேறு மொழிகளை டவுன்லோட் செய்து மகிழலாம். தமிழில் கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன.
Comments
Post a Comment