இனி நமது சொந்தக்காலில் நிற்போம். ( பாகம் – 3)
– யஹியா வாஸித் -
என்ன இருந்தாலும் இந்த சூரனை வதைக்க யாரும் பிறக்கவில்லை. ஹஹ் ஹஹ்ஹா என ஓங்காரமிட்டுக் கொண்டு அசோகன்( சூரன்) ராஜசபையை கலக்கிக் கொண்டிருப்பார். வந்து விட்டான் ஒருவன் என ஒரு அசரீரி கேட்கும்.யாரவன் என கூறிக்கொண்டு அசோகன் உதடுகள் துடி துடிக்க ஏக்காளமிடுவார். கந்தன் என்பார், கடம்பன் என்பார், கார்த்திகேயன் என்பார், குகன் என்பார். சண்முகன் என்பார், உன்னையும் வதைத்தபின் சூரனை வதைத்த வீரனுமென்பார் என்று கூறிக்கொண்டு நம்ம சிம்மக்குரலோன் சிவாஜிகணேசன் (வீரன்)மலைபோல் வந்து நின்று, வில்லன் அசோகனுக்கு சேதி(செய்தி) சொல்லுவார். இது கல்தோன்றி மண்தோன்றுவதற்கு முந்திய தெய்வீக காலம்.
More...
புறா ஒன்று பறந்து வந்து அரசவையில் விழும். மன்னரின் உதவியாள், அந்தப் புறாவின் காலில் கட்டப்பட்டுள்ள சின்னதொரு காகிதத்தை பிரித்து, மன்னா அண்டைநாட்டு மன்னன் தூது அனுப்பியுள்ளான் என அரசனுக்கு விளக்கம் சொல்வார். இது ராஜாதி ராஜர்கள் காலம்.
வீரபாண்டிய கட்டபொம்மனை சங்கிலியால் பிணைத்துக்கட்டி இழுத்துவரச் செய்து, நாங்கள் நாயைக்கொல்வதானாலும் நீதி விசாரணை செய்துவிட்டுத்தான் கொல்வோம் என ஜாக்சன் துரை ஒரு உறுமு உறுமிவிட்டு, எலிசபேத் மகாராணிக்கு ஓலை அனுப்பிய காலம்.அது கடற்கொள்ளையர்கள் நம்மை ஏமாற்றி நாடுபிடித்த காலம்.
மூன்றடி அகல இரண்டடி நீள றேடியோ பெட்டியைக் கொண்டுவந்து, முழுகிராமமும் சுற்றி நின்று செய்தி கேட்டு பிரமித்த அந்த நாட்கள் வாழ்க்கையின் வசந்த காலம். யாழ்ப்பாண தபால் நிலையத்துக்கு மூன்றுதினங்களுக்கு முன் போய் கொழும்புக்கு கோள் எடுக்க புக்பண்ணி, மூன்று தினத்தின் பின் கூஎன்று கத்தி உறவினரின் சுகம் விசாரித்தது எங்களின் பாடசாலைக்காலம்.
பூநகரியை பிடித்து விட்டோம், கிளிநொச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம் என, சரத் பொன்சேகா கொழும்பிலிருந்து சொல்லி வாய்மூடுவதற்கிடையில், அது பொட்டல் காடு, அந்தப்பிரதேசத்தில் எவ்வித அரசியல் நலனுமில்லை கிளிநொச்சியில் சிங்களத்துக்கு இருக்கிறது ஆப்பு என, ஜிரிவியில் அந்த ஆய்வாளர் ஆராய்ந்து சொன்னது நம்மவர்களின் போதாத காலம்.
ஆம்.தகவல்கள், தலைதெறித்த விஞ்ஞானிகளின் கையில் சிக்கி,அவர்களது மூளைகளில் சின்னாபின்னப்பட்டு, தொழில் நுற்பங்களுக்குட்பட்டு, தவழ்ந்து, நடந்து, ஓடி, பறந்து, விரிந்து இன்று கையில் மொபைல் போன், காதில் வோக்மேன், தெருவுக்குத்தெரு இன்டர்நெட் கபே, வீட்டுக்கு மூன்று கொம்பியூட்டர், ஹேன்ட் பேக்கில் லெப்டொப் என உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துள்ளது. இது உலகிற்கே நல்லகாலம்.
இன்று உலகமே இந்த தகவல் தொழில் நுற்பத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. நமது இளைஞர்கள் இத்துறையில் கைதேர்ந்தவர்களாக இருந்தும், இத்துறையில் முதலிட்டு, இதை அபிவிருத்தி செய்து நமது நாட்டுக்கு அந்நியச்செலாவணியை தருவிக்க ஏன் இளைஞர்கள் சிந்திக்கவில்லை என்பதுதான் கைகெட்டியும் வாய்க்கெட்டாத நவீன காலம்.
இன்று இந்தியாவில் இத்துறை கொடிகொட்டிப்பறக்கின்றது. கல்கத்தா, பெங்களூர், மெட்ராஸ் என இளைஞர்கள் கூடி பாரிய அளவில் பணம் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய அரசு 50வீதம்தான் இதில் உழைக்கிறது. ஆனால் பல இந்திய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கோள் சென்டர், டேடா புறோஸஸிங் சென்டர், கெட் டிசைனிங் என தினமும் பல மில்லியன் டொலர்களை உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று உலகம் முழுக்க குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, சைனா போன்ற நாடுகளில் தினமும் ஐ.ரி.எக்ஸிபிஸன், கோள் சென்டர் எக்ஸிபிஸன் என நடந்து கொண்டிருக்கின்றது. ஐரி துறையில் நன்கு கற்றுத் தேர்ந்த இந்திய இளைஞர்கள் ஐவர் அல்லது ஆறுபேர் ஒன்று சேர்ந்து ஒரு கம்பனி பதிவு செய்து, இந்த பொருட்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய ஓடர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒரு ஐரி எக்ஸிபிஸனில் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் குழு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கம்பனியிடம் டேற்றா என்றி புறோஸஸிங் வேலையை பாரமெடுத்தது. அதாவது அந்த அமெரிக்க கம்பனியிடம் 60 கன்டய்னர் (ஒரு கன்டய்னர் 40 அடி நீளம் 12 அடி உயரம் 10 அடி அகலம்) ஏ4 சைஸ் பேப்பரில் டொக்கியுமென்ட்கள் இருந்தது. அதாவது இந்த 60 கன்டய்னர் தஸ்தாவேஜூகளும் இடத்தை நிரப்பிக் கொண்டு எங்களைப் பாடாய்ப்படுத்துகின்றது. இவை அனைத்தையும் கொம்பியுட்டரில் டைப் செய்து சீடி போர்மெற்றில் தர முடியுமா எனக் கேட்டனர். அடித்தது சாண்ஸ்.பேரம் பேசப்பட்டது.ஒரு பக்கத்துக்கு 28 யுஎஸ் சென்ற்ஸ். ( நமது ரூபாவில். ஒருபக்கத்துக்கு 28 ரூபா)பல மில்லியன் பக்க பேப்பர்கள். ஆறு மாதத்தில்அனைத்து வேலையையும் முடித்துக் கொடுத்தார்கள். இன்று கல்கத்தாவில் இந்த ஆறு இளைஞர்களும்ஒரு பாரிய கோள் சென்டர் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதே போல் மெட்ராஸ் பெரம்பூரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து,ஒரு கம்பனி ரெஜிஸ்டர் பண்ணி, ஜேர்மனியில் 2008ல் நடந்த ஒரு ஐரி எக்ஸிபிஸனில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஓட்டோ கெட் டிசைனிங் செய்வதில் பழம் தின்று கொட்டை போட்ட இளைஞர்கள். அமெரிக்ககா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள பாரிய பில்டிங்குகளுக்கு டிசைன் வரைந்து கொடுக்கும் ஒரு ஜேர்மன் கம்பனி, இவர்களை கெட்டியாகப்பிடித்துக் கொண்டது. இப்போது இவர்களது கம்பனி தமிழ்நாட்டிலேயே நம்பர் வண். ஒரு மனித்தியால வேலைக்கு 84 யூரோ வசூலிக்கின்றார்கள். எட்டு மனிநேரத்துக்கு 672யூரோ. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 45 ஆயிரம் இந்திய ரூபா.ஆனால் இவர்கள் ஊழியர்களுக்கு கொடுப்பதோ மாதத்துக்கு 60ஆயிரம் ரூபா. ஒரு நபர் மூலம் மாதத்துக்கு 10 லட்ச ரூபா நெட் புறபிற். 30 பேர் இவர்களிடம் வேலை செய்கின்றார்கள். இவர்களது மாத வருமானம் 3கோடி இந்திய ரூபா.முதலீடோ வெறும் 30 லட்ச ரூபா மட்டுமே.
இன்று நமது இளைஞர்கள், அதுவும் ஐரி துறையில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து, தமது உழைப்பையும், சேவைகளையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் நமது அரசிடம் ஐரி துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் இல்லை என்பதுடன், இத்துறையில் நன்கு கற்றவர்களும் இது சம்பந்தமாக சிந்திப்பதில்லை. இந்தியா, சைனா போன்று வீதிக்கு ஒரு கோள் சென்டர் இல்லாவிட்டாலும், ஊருக்கு ஒரு கோள்சென்டர் அமைத்து நமது அன்னியச்செலாவணி வருமானத்தை பல ஆயிரம் மடங்கு கூட்டலாம். கொழும்பில்வேர்ல்ட் ட்ரேட் சென்டரிலும், எக்ஸ்போ லங்கா நிறுவனமும், டயலொக் நிறுவனமும் சில கோள் சென்டர்களை அமைத்து அவுட் சோசிங் வழங்கினாலும் அது போதுமான அளவுக்கு வெளிநாடுகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை.
இதற்கு பிரதான காரணம் சிறிலங்காவில் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு ஐரி பற்றிய பூரண அறிவு இல்லை. கட்டிடங்களும், காணியும்,ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரங்களின் மூலமும்தான் பணம் உழைக்கலாம் என ஒரு தப்புக் கணக்கு போட்டுக்கொண்டு, தினமும் அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு சாண் ஏறி முழம் சறுக்குகின்றார்கள். உதாரணமாக வெங்காயம் இறக்குமதி செய்வதானால்,பாரிய வெயார்ஹவுஸ் (களஞ்சியம்), வெங்காயத்தை ஹாபரில் (துறைமுகம்) இருந்து கொண்டுவர லொறிகள், கொழும்பில் இரண்டாம் குறுக்குத்தெரு, டாம்ஸ்ரிட்களில் காட்சியறை என செலவிட்டு உரிய நேரத்துக்கு வெங்காயம் விற்காமல் போய்விட்டால், முழு வெங்காயமும் அழுகி வரவு எட்டணா செலவு பத்தணா என இறுதியில் கையைக்கடிக்கும்.
தகவல் தொழில்நுட்பத் துறையை எவ்வாறு வருமானம் தரக்கூடிய தொழிலாக மாற்றலாம்.
இன்று நமது நாட்டில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், தொழில்களுக்கான தொலைதூரச் சேவைகள் போன்ற துறைகள் கொழும்பு நகரங்களில் நன்கு வளர்ந்துள்ள அளவுக்கு ஏனைய பகுதிகளில் வளரவில்லை. இதனால் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் அன்னியச் செலவாணி ஆண்டு தோறும் கிடைக்கும் வாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு தமது சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், நம் ஊரின் ஆயிரக்கணக்கான இளம் பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் தரமான சேவைகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் வாய்ப்பு இல்லை.
.ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையும், கணினித் துறையில் வல்லமையும் உள்ள இளம் பட்டதாரிகளுக்கு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் உலகம் முழுதும் பெருகியுள்ளது. ஆனால் அதை ஊக்குவிற்பதற்கான எந்த முயற்சியும் அரசால் செய்யப்படவில்லை.
அமெரிக்க ஐரோப்பியத் தொடர்புகள் இல்லாமல், ஆனால் தொழில் துறையில் திறமையுடைய தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தத் துறையில் என்ன வாய்ப்புகள் உள்ளன ? ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாத, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் படித்த திறமையான பட்டதாரிகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கு குறைவாகவே உள்ளது.
நம் ஊர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, நம் ஊர்த் தொழில்களுக்கு உதவக்கூடியவாறு தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, அவற்றை எப்படி அணுகலாம் என்பதை அரசும், உழைக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களும் ஆராய வேண்டும்.
மென்பொருள் (சொப்ட்வெயார்) சேவைகளுக்கான இலக்குச் சந்தைகள் (விற்கக் கூடிய இடங்கள்) நமது நாடு முழுதும் விரிந்து கிடக்கின்றது.
1. அரசின் கணினி மூலம் அரசாளும் திட்டங்களுக்கான மென் பொருட்கள். அதாவது அரச நிர்வாகம் சம்பந்தப்பட்ட சொப்ட்வெயார்.
2. பெரிய தொழில் நிறுவனங்களில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, அலசல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.
3. பாடசாலை,பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கட்டணங்கள், பாடத்திட்டங்கள் பற்றிய தகவல்களை கையாளும் மென்பொருட்கள்.
4. மத ஆலயங்கள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவர்கள், கட்டிடம் கட்டித் தருபவர்கள் போன்ற சேவைத் துறைகளுக்கான மென்பொருட்கள்.
5. அரச,தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு மற்றும் கடிதப் போக்குவரத்து நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான மென்பொருட்கள்.
6. சில்லறைக் கடை, மருந்துக் கடை, துணிக்கடை, காய்கறிக் கடைகளுக்கான மென்பொருட்கள்.
7. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலான தோல் துறை, பிளாஸ்டிக் பொருட்கள் துறை, இயந்திரப் பாகங்கள் துறை, வாகனப் பாகங்கள் துறை போன்றவற்றில் தகவல் கையாளுதல் மற்றும் அத் துறை தழுவிய தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.
இதுவரை யாரும் இந்த மென்பொருட்கள் செய்யவில்லையா? ஏன் அவை பிரபலமாகவில்லை? பெரிய,பாரிய நிறுவனங்களிலும், வங்கிகளிலும், ரயில்வேயிலும், சில மருந்துக் கடைகளிலும், மென்பொருட்கள் பயன்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இவை யாவும் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து மேற்கத்திய மேலாண்மை முறைகளையே பின்பற்றுகின்றன. உண்மையிலேயே உள்நாட்டுத் தொழில்களின் மென்பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:
1. பயன்பாட்டு மொழி
இப்போது கிடைக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அவற்றில் சில தமிழிலும்,சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சிங்களத்தில் அல்லது தமிழில் சிந்தித்து நமது மொழி பேசுபவர் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே சிறிலங்காவில் உள்ளன.
2. மென்பொருள் வடிவமைப்பு
ஏற்கனவே சொன்ன மாதிரி சந்தையில் கிடைக்கும் அனைத்து மென்பொருட்களும் மேல்நாட்டு பழக்கங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை. நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு, நமது புரிதலுக்குச் சரியான வண்ணம் மென்பொருட்கள் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது
3. விலை
மென்பொருட்கள் மற்றும் கணினிகளின் விலை அமெரிக்கப் பொருளாதரத்துக்கு ஏற்றவாறே உள்ளன. ஒரு கணினியில் பயன்படுத்த முப்பதாயிரம் ரூபாய் என்று தொடங்கும் விலைப் பட்டியல்கள் பல லட்சம் ரூபாய் விலைக்குக் கூட விற்கப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மென்பொருட்கள் கிடைக்காததும் மென்பொருள் பயன்பாடு பரவலாகாமல் இருக்க ஒரு காரணமாகும்.
4. உரிமக் கட்டுப்பாடுகள்
வாங்கிய மென்பொருளை மற்றொரு கணினியில் நகல்(பிரதி) செய்யக் கூடாது, அதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, பழுது நீக்க வசதியாக மூலநிரல் கொடுக்க மாட்டோம், புதிய வசதிகளைச் செய்து கொள்ள மூல நிரல் கொடுக்க மாட்டோம் என்று மென்பொருள் விற்பனையாளர்கள் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பதால், கணினியாக்கத்தின் பலன்களை நம் தொழில்கள் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.
5. துறை சார் நுணுக்கங்கள் இல்லாமை
மருந்துக் கடையில் பொருட்கள் கையாளப் பயன்படும் மென்பொருள், சில்லறைக்கடையில் அப்படியே கொண்டுபோய் பயன்படுத்த முடியாது. பலசரக்கு கடைகளில் பல்லாண்டு செயல் முறை அனுபவம் உள்ள ஒருவர்தான் அந்தத் துறைக்குத் தேவையான நுணுக்கங்களை மென்பொருளில் வடிவமைக்க முடியும். கணினித் துறையில் மட்டுமே தேர்ந்த கணினி வல்லுநர்கள் செய்யும் மென்பொருட்கள் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விடுகின்றன.
இந்தக் குறைகளை எல்லாம் களைந்து குறைந்த விலையில், சிங்களத்திலும்,தமிழிலும் , நமக்குப் வசதியான வடிவமைப்பில், பயன்படுத்துபவருக்கு எல்லா உரிமைகளையும் அளித்து துறை சார்ந்த நெளிவுசுளிவுகளையும் உள்ளடக்கி மென்பொருள் செய்து விற்று பாரிய இலாபம் ஈட்டவும் முடியும். இத்தகையத் தொழிலில் வேலை வாய்ப்புகளையும் பாரிய அளவில் பெருக்க வும் முடியும்
சில்லறை,மொத்த வியாபார விபரங்களைக் கையாளும் மென்பொருள் விற்பனையை எடுத்துக் கொண்டால்,நமது நாட்டில் வியாபரங்களைக் கையாளும் பொதுப் பழக்கங்களையும், கணக்கியல் விதிகளையும் நன்கு தெரிந்த ஒருவர், அனைத்துக்கும் பொருந்தும் வண்ணம் ஒரு மென்பொருள் வரைவு ஆவணத்தை உருவாக்கலாம்.
அதை அறிவு சார் சொத்து,எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று பூட்டி வைக்காமல், வெவ்வேறு துறைகளில் (பலசரக்கு, காய்கறி, மருந்து வியாபாரம்) அனுபவம் நிறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் முழு உரிமைகளுடன் பயன்படுத்த விற்கலாம். அவர்கள் தமது துறைக்குத் தேவையான நெளிவுசுளுவுகளைச் சேர்த்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அந்தத் துறையில் மூல நிரலுடன் விற்கலாம்.
ஒவ்வொரு கடையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் மாறுதல்களை செய்தல், கடைப் பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி அளித்தல் போன்றவற்றிற்குச் சேவை அடிப்படையில் தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம் வசூலித்து செய்து கொடுக்க ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் சிறு நிறுவனங்களை உருவாக்கலாம்.
இந்தச் சேவைகளை அளிக்க பெரிய அளவில் முதலீடு தேவையில்லை.கணிணிப் பட்டதாரிகள் பலர் சேர்ந்து,இவற்றை தொடங்கலாம்.இந்திய அரசு கணிணி சம்பந்தமாக உயர் கல்வியை தொடர விரும்புபவர்களுக்கும்,தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கும்,எவ்வித பேங் கரண்டியும் இல்லாமல்,பாரிய கடன்களை வழங்குகின்றது.அந்த ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, அவர்களது கணிணி அறிவைப் பொறுத்து கடன்களை வழங்குகின்றது.ஏன் இதை பற்றி எமது அமைச்சர்களும், நாட்டை பொன்கொழிக்கும் பூமியாக்குவோம் என சிந்திக்கும் பெரியவர்களும் சிந்திக்கக்கூடாது.
(தொடருவேன்.....)

Thanks www.thenee.com
Comments
Post a Comment