இனி நமது சொந்தக்காலில் நிற்போம்.
இனி நமது சொந்தக்காலில் நிற்போம்.
– யஹியா வாஸித்-
( பாகம் – 1 )
விமானநிலையத்தில் விமானம் கிறீச்சென்று கூவிக்கொண்டு நிறுத்தப்படுகின்றது.விமானப்பணி
ஏஸ் நான்தான் இந்நாட்டின் தலைவன்.நீங்கள் எல்லாம் எனது பிள்ளைகள். அவர் கண்களில் ஏக்கம் தெரிகிறது,ஏனைய தலைவர்கள் அவரை கட்டி முத்தமிடுகின்றார்கள்,ஆனால் அந்த முகத்தில் ஒரு ஆதங்கம் புரிகிறது, அமைச்சர்களும் அபிமானிகளும் சுற்றி வளைத்து பூக்கொத்துக்களையும்,அன்பையும் வாரிவழங்குகின்றனர்.ஆனால் அந்த உடம்பில் ஒரு ஆட்டம் தெரிகிறது. நாலுபிள்ளையை பெற்ற நாமே தடுமாறும் போது,ஒருகோடி 98லட்சம் மக்களையும் தத்தெடுத்த ஒருவனுக்கு எவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் மனதை வருடும் என நினைக்கும் போது அப்பப்பா சொல்லவே பயமாக இருக்கிறது.
ஆனால் ஒருநல்ல தகப்பனுக்கு தெரியும்.எப்படி தன் பிள்ளைகளை கண்ணடி, சொல்லடி, பொல்லடிகளிலிருந்து காப்பாற்றுவதென.அதை அவர் செய்வார்.செய்யவேண்டும். செய்யக்கூடிய ஆற்றலையும் திறனையும் இறைவன் அவருக்கு வழங்க வேண்டும் என பிரார்த்திற்போம். அதற்காக எல்லாவற்றையும் அவரிடமே கேற்பது ஒரு பிள்ளைக்கழகல்ல. சரியோ பிழையோ நாமும் நமக்குத் தெரிந்த குறும்புகளை செய்வோம், சொல்வோம். தப்புத்தண்டா இருந்தால் யாராவது மோதிரவிரல்காரர்கள் எம்மைகுட்டட்டும். இரத்தம் வராமல் குட்டட்டும்.அந்தச்சனியன் இனி வேண்டாம்.அந்த குட்டில் அன்பும் ஆரோக்கியமும் மலரட்டும்.
இன்று உலகமே மூக்கில் விரல்வைத்துக்கொண்டு இந்த குட்டித்தீவை பார்க்கின்றது.ஐ.நா.வில் 29 நாடுகள் இந்த நாட்டுக்கு உதவத்தான் வேண்டுமென பச்சைக்கொடி காட்டியுள்ளன.உதவிகள் பணமாக,பொருளாக,சேவைகளாக என பல ரூபத்தில் வரலாம்,வரும்.அப்போது நிறைய தேவைகள்,நிறைய வேலைகள்,நிறைய தொழில் சாலைகளுக்கு வழிகள் திறக்கப்படும்.அந்த முன்னேற்ற மழையில் ஒவ்வொரு சிறிலங்கனும் குளிர்காய வேண்டும்.எப்படி ?
ஒவ்வொரு மாவட்டத்தின் படங்களையும் தூக்கி மேசையில் வைத்து அலசவேண்டும். அலசியும் மண்டையில் ஏறாவிட்டால், அந்தப்பக்கத்தில் பிறந்த ஒருவரை தேடிப்பிடித்து உட்காரவைத்து அந்த மண்,அந்த மரம்,அந்த செடி,கொடி எனத்தொடங்கி நேற்று இரவு என்ன சாப்பிட்டாய் மகனே என்பது வரை கேட்க வேண்டும்.
அது வந்து தயிரும்,வாழைப்பழமும்,சீனியும் பழஞ்சோத்துக்குள்ள போட்டு கரைச்சி குடிச்சிப் போட்டு தூங்கினேன் என்பார்.அவ்விடத்தில் இருந்து உங்கள் பின் மூளைக்கு வேலையை கொடுக்க வேண்டும். இப்போது நீங்கள் இருக்கும் இடம் நுரைச்சோலை.ஏத்தாளைக்கு பிறகு போவோம்.இங்குதான் மன்னார்மாவட்டத்தில் இருந்து 1990 ஓகஸ்ட் 25ம் திகதி துண்டையும் துணியையும் விட்டு வெளியேறிய அந்த மனிதப்புனிதர்கள் 27ஆயிரம் போ் இருக்கின்றார்கள்.
வேப்பங்குளம், பொற்கேணி, பிச்சறுணியங்குளம், பூணச்சி, பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், மதம்பட்டமுசலி ,அகத்திமுறிப்பு ,கொண்டச்சி ,வண்ணாங்கும்
,கரடிக்குளி ,பாலைக்குளி ,மறிச்சிக்கட்டி, முள்ளிக்குளம் ,அரிப்பு, கொக்குப்படையான் என கருவாகி,உருவாகி ,பிஞ்சாகி,காயாகி.......மொத்தத்
அந்த மண் சிறிலங்காவுக்கே படியளந்த மண். இந்த இருபத்திமூன்று கிராமங்களிலும் இல்லாதது இல்லை.இனி இங்கு கட்டுமானப்பணிகளும், வயல்வேலைகளும், சேனைப்பயிர்ச்செய்கைகளும் தொடங்கலாம். சிலாபத்துறை மீன் கொழும்பு மாழுகடையை நிரப்பலாம்.அரபுநாடுகளிலும்,ஐரோ
இப்படி கொஞ்சம் ஆரோக்கியமாக பார்ப்போம். மன்னார் மாவட்டம் என்றில்லாமல் மொத்த சிறிலங்காவையும் ஒரு கலக்கு கலக்குவோம். அச்சுவேலி, ஆவரங்கால், இடைக்காடு எனத்தொடங்கி, கீரிமலையில் குளித்து,ஜப்னா ஹிந்து கொளேஜ் புதிய மாணவார்களையும் தட்டிக்கொடுத்து, யாழ்ப்பாண எரிந்த லைப்ரரியில் மிச்ச சொச்சம் இருக்கின்ற புத்தகங்களை படித்து அந்த மண்ணை ஜவ்வாது வாசனை வர வைத்து, அந்த மூளைகளுக்கு ஒரு சல்யூட் அடித்து, அப்படியே கிளிநொச்சிக்குள்ளால ஒரு மௌனப் பொருளாதாரப் புரட்சி செய்து (ரொம்ப சைலன்டாக, இந்த மனித தெய்வங்களின் மனங்களில் ஒரு துளி கீறலும் இல்லாமல்) மதவாச்சி,அனுராதபுரம் என கொத்திப்புரட்டி, கண்டி,கொழும்பு அரச, தனியார் நிறுவனங்களை கேள்விமேல் கேள்வியாக கேட்டு எங்கள் காலில் நாங்களே நிற்போம். அப்ப அரசியல் செய்யப் போவதில்லையா ? தற் இஸ் நொட் அவர் வேக். வீ ஆர் சிறிலங்கன்.திஸ் இஸ் அவர் பாஸ்ட் டெவலப்பிங் கன்றி. வீ ஆர் த பார்ட் ஒப் திஸ் டெலப் மென்ற்.தட்ஸ்ஆள்.
அப்படியானால் சிறிலங்காவுக்குள்ள மட்டும்தான் வியாபாரம் செய்யலாமா ? வெளிநாடுகளுக்கு எற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள், முதலீடுகள், உல்லாசப்பிரயாணிகளை அழைப்பது என கொஞ்சம் தூரப்பார்வை பார்க்க முடியாதா ? ஏன் முடியாது.
36ரூபாட சீனியை 95 ரூபாக்கொடுத்து வாங்கிற முட்டாள்தனத்தை தகர்ப்போம்.அப்படியே பிறேஸில் சீனி உற்பத்தியாளர்களின் பெக்டரிக்குள்ள போய் மெட்டிக் தொன் ( 1000கிலோ) சீனி 385 யு.எஸ்.டொலருக்கு வாங்குவோம். மொறோக்கோ போய் கோதுமை மாவை 287 யு.எஸ்.டொலருக்கும் வாங்கிக் கொண்டு, அப்படியே தன்ஸானியா தாருஸ்ஸலாம் விமான நிலையத்தில் இறங்கி தன்சினைட் (உலகின் அதி விலை உயர்ந்த மாணிக்கக்கல்) கல் வாங்கலாம். ஒரு கரட் 285 யு.எஸ்.டொலர். உலக மார்கட் விலை ஒரு கரட் 650 யு.எஸ்.டொலர்.அதை கொண்டுவந்து பேங்கொக் வியாபாரிகளுக்கு ஹில்டன் ஹோட்டலில் லொபியில் இருந்துகொண்டு விலைபேசலாம். பெல்ஜியம் அரசாங்கத்தையே வன்னிக்கும்,யாழ்ப்பாணத்துக்கு
புலம்பெயர் நாடுகளில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மீண்டும் ஒரு சுற்று வரவும்,என்.ஜீ.ஓக்கள் பதியவும் திட்டம் தீட்டுவதாக செய்திகள் கசிகின்றன. ரொம்ப ஜாக்கிரதை.அது உங்கள் மண்.நீங்கள்தான் அந்நாட்டின் ஒரிஜினல் பிரஜைகள்.எதுவும் யாருக்கும் போகக்கூடாது. நீங்கள்பட்ட கஸ்டங்களுக்குரிய பயனை நீங்கள்தான் அடைய வேண்டும். இப்போதே திட்டங்களை தீட்டத்தயாராகுங்கள்.சிறிலங்கா
Thanks www.thenee.com
Comments
Post a Comment