Lock off
சமீபகாலமாக எனது Laptop இன் screen ஒற்றைக்காலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒருநாள் தவறுதலாக அடிபட்டுவிட்டது. எனது project முடியும்வரை screen கண்ணை மூடக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இப்போது screen இனை மடித்து வைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. மடித்து வைத்தால் மட்டுமே screen soft off ஆக வாய்ப்புள்ளது அல்லது windows power plan க்காக காத்திருக்க வேண்டும். எனக்கு திரையை மடிக்காமல் soft off செய்வதற்கு ஒரு மென்பொருள் தேவைப்பட்டது. இணையத்தில் தேடியபோது nircmd சிக்கியது. இருப்பினும் இது console mode இல் இயங்குவதாலும் Desktop இல் shortcut போட விருப்பமின்மையாலும் இதற்கு மாற்றுவழி தேடிக்கொண்டிருந்தேன். சரி ஒரு முயற்சிதானே என்று நினைத்து nircmd.exe இன் உதவியுடன் C#.net பாவித்து உருவாக்கியதே இந்த Lock off tool.
சும்மா இரண்டே இரண்டு button கள்தான் வேலை முடிந்தது. soft off செய்வது மாத்திரமன்றி கணினியை lock செய்யவும் முடிகிறது. இதனை install செய்வதற்கு Microsoft .net framework 4 அவசியம்.
நீங்கள் Developer ஆயின் nircmd.exe இனை பாவித்து Lock off இனை இன்னும் மெருகூட்டலாம்.
Download Lock off
Download Lock off Source Code (Visual Studio 2010)
Download nircmd and help file
Download Microsoft .net framework 4.0
Comments
Post a Comment