நானும் இலங்கையும் ஒரு அலாதிப்பயணமும்….

என்னதான் சொல்லுங்கள் ஊரில் பெருநாள் கொண்டாடுவது என்பது ஒரு அலாதிதான்.சென்ற நோன்புப் பெருநாள் வெளிநாட்டில் எனக்கு அலுத்தேவிட்டது. ஒரு சிறிய திட்டம் தீட்டி பத்து நாள் விடுமுறையில் இலங்கை பயணிக்கிறேன். ஊருக்கு வந்து விட்டால் நான் உலகத்திலிருந்து காணாமல் போய் விடுவேன். ஏனெனில் காத்தான்குடி ஒரு உலகம், ஒரு நாடு. நாங்கள் Republic of kattankudy என அழைப்பதுமுண்டு. வழமையை விட இம்முறை இலங்கைக்குள் நுழையும் போது ஏதோவோர் எதிர் பார்ப்பு, மாற்றம், மாற்றம், மாற்றம் என்று இணையத் தளங்கள் மார் தட்டிய விடயங்களை பார்க்க வேண்டிய ஆர்வம் வேறு. " மச்சான் மன்னம்பிட்டி check point உம் இல்லடா இப்ப. " அது வேறு சந்தோசம். ஒரு காலத்தில் மன்னம்பிட்டியில் பெரிய கருப்பு நாய் ஒன்றை பஸ்ஸில் வைத்து சோதனை செய்வார்கள். அக்காலங்களில் சோதனை என்றால் ஒரு தனி பிரியம் எனக்கு. பிற்பட்ட காலங்களில் மூட்டை தூக்கத் தொடங்கிய பருவங்களில் இருந்து எனக்கும் check point கள் வெறுத்துப் போனது. More...இம்முறை செலவுச்சுருக்கம் கருதி பயணம் வடை விற்கும் பிளைட்டில் தான். அதாவது இந்த பிளைட் சேவையில் (பெயர் சொன்னால் கேமை கேட்பார்கள். ) வடை, வடை என்று கூவி விற்று வருவார்களாம். காசு கொடுத்து வாங்க வேண்டுமாம் நண்பன் சொன்னான். அப்படி வடை விற்கா விட்டாலும் சாப்பாடு கூவி விற்று வந்தார்கள். நினைத்ததை விட அரை மணித்தியாலங்கள் முன் கூட்டியே நம் நாட்டின் "குவன் தொட்டு பொல" வந்துட்டு வழமை போன்று இம்முறை நம்மை மீட்க நம் மீட்பர்…. அதுதாங்க நம்ம தூதுவர் வரவில்லை. இம்முறை நண்பர் வந்து இருந்தார். ஒன்றரை மணி நேரம் wait பண்ண வைத்து வந்தார். நோன்பு 27 . அதுவும் இரண்டரை மணி நேரம் அதிக நோன்பு. எட்டரை மணிக்கே கண்ணைக் கட்டியது. சலாம் சொல்லி அளவளாவிக் கொண்டோம். உதவி செய்வதில் நம் நண்பர்களை மிஞ்ச முடியாது. அவர்தம் வீட்டுக்கு புறப்பட்டோம். பாதை வழியே பல விடயங்கள். நம் நாடு நம் நாடுதான். பஸ்சின் தரம் மிக பரிதாபமாக இருந்தது.
“நண்பரே! என்னதான் வெளிநாடு என்றாலும் நம் பஸ்சின் கிடுகிடுப்பும் புழுதியும், உடைந்த வீதிகளும் அனுபவிப்பதற்கு உகந்தவை, ஒரு மகிழ்ச்சிதான்”.
நண்பர் சிரித்துக் கொண்டார். நம்மை மாடு என்றும் நம் நாட்டை இக்கரை என்றும் நினைத்துக் கொண்டார் போலும்.அந்தக் கடகடப்பிலும் வாய்க்கு அவல் தந்தார்.
”வித்தி…”
”என்னடா? ”
”கமலாவை பிறகு எப்போதாவது சந்தித்தாயா?”
” ம்….சென்ற முறை வந்த போது கண்டேன், தனியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருந்தாள். மனதில் சிறு வருத்தம் அவளின் தனிமைதான். என்ன செய்வது, ஆனால் என்னைக் கண்டதும் அவள் நற நற வென்று பல்லைக் கடித்தாள்" என்றேன்.
" நான் ஒரு வருடத்திற்கு முன் சந்தித்தேன். என்னைப் பார்த்து நண்பிகளிடம் ஏதோ சொல்லி சிரித்தாள்" என்றார்.
ஒரு மௌனப்புன்னகை உதிர்த்தேன்.
கமலா எங்களுக்கோர் பேசு பொருள், அன்றிலிருந்து இன்று வரை. தூதுவரிலிருந்து புகழப் பட்டவர் வரை. இருப்பினும் நான் சற்று வித்தியாசமாக இருந்தேன் என்பதை நாடே அறியும். இருப்பினும் நண்பர் துளாவினார். இப்போது பழைய விளக்கம் சொல்லுமளவிற்கு அவகாசம் இல்லை.
”நீ அறிவாயா நண்பனே, எனக்கும் கமலாவிற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை”. நண்பர் நம்பத் தயாரில்லை. இருப்பினும் அவருக்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததாக சொன்னார். (ஈர்ப்பு... யாருக்குத்தான் இருந்ததில்லை எல்லாப் பொருட்களிலும் இருக்கிறதே..)
”நீ என்னிடம் சொல்லலியே?” என்றேன்.
” நீ எங்க சொல்ல விட்டாய்? ”
”அதுவும் சரிதான். ஆனாலும் அந்தக்காலங்களில் நீ கொஞ்சம் என்னிடம் அழுத்தி சொல்லி இருக்கலாம்” (சொல்லியிருந்தால் மட்டும் என்னத்த கிழித்து இருக்கப்போறன் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.)
“வித்தி! அவள் என் காதலுக்கு எதிர்ப்பே சொல்லவில்லயே அதுதான் எனக்கு புரிய வில்லை.”
“ அது பெண்களின் இயல்பு. அங்குதான் நிறைய ஆண்கள் தோற்றுப் போகிறார்கள்.”
”டேய்வித்தி! முதன் முறையாக அவள் வித்தி என்றால் யார் என என்னையே கேட்டாள் library இல் வைத்து.”
“ சொன்னீங்களோ?”
“ ம் சொன்னேன்.”
“ ஆனால் உன்னை அடையாளம் காட்டியது நானல்ல” என்றார்.
" நீ அறிவாயா நண்பனே! எனக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை".
………….கொழும்பில் நண்பரின் வீடு வந்து விட்டது. தூதுவரும் மாண்பு மிக்கவரின் அடிமையும் call பண்ணினார்கள். வீட்டில் எப்போது தூங்கினேனோ தெரியாது. எழும்பிப் பார்த்தேன். 12.15 இலங்கை நேரம் தூக்கி வாரிப் போட்டது. நேற்றிலிருந்து ஒரு சொட்டு தண்ணீரும் அருந்தவில்லை. ஒருவாராக பகல் கழிந்து நோன்பு திறந்தோம். நோன்புக்கஞ்சும், சமுசாவும் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன. அவைதானே நம் ரமழான் உறவுகள். வெளியே வந்தோம்.
அதிகமாக ராஜாக் கட்சி சகோதரர்களினதும், அவர் தம் சகபாடிகளினதும் போஸ்டர்கள்தான் தலை நகரை அலங்கரித்தன. புகைவண்டி(இன்னும் புகை வண்டிதான்) இல் வீட்டிற்கு புறப்பட்டோம். நானும் நண்பரும் இரு முதியவர்களும், கூடவே ஒரு பல்கலை அல்ல அல்ல வணிக மாணவன். இன்னொரு இளைஞனுக்கு நண்பர் இடம் ஒதுக்கி கொடுத்தார். ஒவ்வொரு சக பயணிகளும் இரண்டு இரண்டு சீட்கள் பிடித்து வைத்திருந்தனர். அந்த வணிக மாணவன் நன்றாக உரையாடினான். தன்னை வித்தியார்த்தி என அறிமுகப்புடுத்தினான். நானும் சொன்னேன், நானும் வித்தியார்த்தி என்று. அது காலத்தால் அழியாத பெயர் என்றான். நண்பர் தம் பங்கிற்கு அது ”மலிஞ்ச பெயர்” என்றார். தம் பெயர் ஒரு ஸஹாபிக்கு இருந்ததாக சொன்னார். என்னை அறிமுகப்படுத்துகையில் தன் எதிரி என்று குறிப்பிட்டார். முதன் முறையாக என்னை எதிரி என்று சொல்லி இருக்கிறார். வேறு எதற்கு - அவர் காதலுக்குத்தான். மீண்டும் கமலா புராணம்.
”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்று சிணுங்கினார்.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் ஒரு phone call வந்தது. தனியாக எழுந்துசென்று அட்டெண்ட் பண்ணினார். எனக்கு பொறி தட்டியது. கமலா நீ புத்திசாலிதான். இவரிடமிருந்து "நாசூக்காக" தப்பி இருக்கிறாய் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
”இந்த கருமத்ததானே பார்த்து பார்த்து அலுத்து விட்டது.” என்றேன்
”ஏன் உனக்கு போன் வாரலயா? ” ஆர்வமாக கேட்டார்.
”எனக்கா? நம் தத்துவ வாழ்க்கை இதுவரை எந்த பெண்ணுக்கும் பிடிக்கவில்லை. ஆகவே எனக்கு உபகாரமோ, ப்ளாஸ்டரோ தேவை இல்லை.”
நண்பர் ஒரு மாதிரியாக பார்த்தார்.
சீட்டிலிருந்து மெல்ல எழுந்து வெளியேறினோம். ஜன்னல் வழியே, இருள் சூழ்ந்த இலங்கை அழகாக இருந்தது. Bolt cartoon பார்த்த effect இல் தலையை வெளியே போட்டு நாக்கை நீட்டி கொண்டேன். நம் தத்துவப் பாடலும் நண்பரின் முன்தினம் பார்த்த பாட்டும் இடத்திற்கு பொருந்தினாலும் குரலுக்கு பொருந்தவில்லை. வாங்கிய உணவுகளை எல்லாம் எல்லோரிடமும் பறிமாறினோம்.
வண்டி ஓடிக்கொண்டே இருந்தது.
அதிகாலை மூன்று மணி, என்னைத் தவிர எல்லோருமேஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விட்டார்கள்..நான் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நண்பரை பார்க்கையில் கமலாவின் ஞாபகம். ..
நான் என்ன செய்வது?.
நான் என்ன செய்தது.?
ஜன்னலின் வெளியே புன்னகைத்த நட்சத்திரங்கள் pride land ஐ அண்மிப்பதை தெரிவித்தன. அடுத்த ஸ்டேசனில் 15 காவல் படையினர் வண்டியில் ஏறினர். மனம் ஒரு தடவை identity ஐ தேடியது. எங்கு வைத்தேன் என்று ஞாபகம் வரவில்லை. ஏறிய போலிஸ் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் சிரித்துக்கொண்டேன். இப்பவே சிரித்து முடித்து விடாதீர்கள். சிரிப்பு போலிஸ் ஆக நாள் இருக்கிறது என்று மனதில் சொல்லி சிரித்துக் கொண்டேன். ஒருவாறு அன்றைய ஸஹரும் புகைவண்டி இலேயே முடிந்தது. பயணத்தின் முடிவில் நண்பர் அரசியல் பேசினார்.
“வித்தி! இன்னும் 2 வருடங்களின் பின் நீ வந்தால் 2 மணி நேரத்தில் வீடு போய்ச் சேரலாம்” என்றவரை ஆச்சரியமாக பார்த்தேன்.
தொழிநுட்ப வேகத்தில் எனக்கு அபார நம்பிக்கை. அரசியல் தலைவர்களில் எனக்கு நம்பிக்கை மிகக் குறைவு. இன்னும் சில வருடங்களில் மாட்டு வண்டியில் போய்ச் சேர வேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனது அவ நம்பிக்கையை புரிந்து கொண்டார் போலும்.
“வித்தி இலங்கை ஒரு பறக்கத் பொருந்திய நாடு” என்றார்.
எனக்கு இரண்டாவது பெரிய வியப்பு.
நண்பனே! கடந்த 30 வருடங்களில் விலை உயர்வு, இயற்கை அழிவு, தீவிரவாதம் என்று எவ்வளவோ விடயங்கள் இலங்கையில் நடந்தாலும் நம் மக்கள் பட்டினியால் இறக்கவே இல்லை”
என்றார்.
"அது என்னமோ உண்மைதான் பொறுத்திருந்து பார்ப்போம். நம் ராஜாக்கட்சி சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று" என்றேன்.
இலங்கையில் யுத்தம் முடிந்து+இருந்தது. ..
கிழக்கும் வெளுக்கத் தொடங்கியது. இருப்பினும் கமலா விடயத்தில் பயண இறுதி வரை நண்பர் என்னுடன் உடன்படவே இல்லை.
இனியென்ன!
அன்புடன் வரவேற்கிறோம் - காத்தான்குடி –
உடைந்த கடைகள் …
அகன்ற வீதிகள் …
கிழங்கு….
பாபத் …
சூப்…
சாரன் ….
மகிழ்ச்சி….
அன்பு……
கமலா........ ஈத் முபாரக்
பிற்குறிப்பு: ஊரிலிருந்து திரும்பிய பயணம் சுவாரசியமாக இருக்கவில்லை. வரும்போது புதிதாக முளைத்த பல புத்தர் சிலைகளை காண முடிந்தது.ஒரு ஓட்டோவின் பின்புறத்தில் படித்த வாசகம் திக்குமுக்காடச் செய்தது.பெரிதாக ஒன்றுமில்லை “மே புதுன்கே தேசய” என்றிருந்தது. எங்கோ பிசகுகிறது என்று மட்டும் மனம் சொல்லியது.மீண்டும் வரும்போது பார்க்கலாம் என்று நமது ”வந்தபின் தீர்வு தேடும்” புத்தி சொல்ல…… புறப்பட்டேன் மீண்டும் இயந்திர வாழ்க்கையை நோக்கி…..
நன்றிகள்: பெயருக்கு ஏற்றால் போல் பொறுமையாக தட்டச்சு செய்து தந்த எனது நண்பர் பொறுமையாளருக்கு...
 
karumam da....... nagalumtan porom sri lankavukku ipadiallatoddala loosooooo...... sari ethutan karumam anda photo ondu "edil naan anga? kandupidital parisa tarapporadu" tayvaya.......
ReplyDeletepoisollatayvallay.............
பாராட்டுக்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த பயணங்கள் இறுதியில் பல தத்துவங்களையும், எதார்த்தங்களையும் சொல்லிச் செல்லாமல் இருப்பதில்லை.
ReplyDeleteoru saathaaranamaana vidayathai cooda viththiyaasamaha matravarhal
ReplyDeleterasikkumpadi solvadil ungal adaiyaalathai niroopiththu
irukkireerhal.vry nice..
பழைய புத்தி இன்னும் போகலயாடா உனக்கு. அதே வீம்பு. அதுசரி கமலா என்றால் யார் என்று எனக்கு விளங்கவில்லை. மச்சான் நீ சொன்ன மாதிரி ஊரில ஒரு புத்தர் சிலை ஊர்வலம் ஒன்று நடந்தடா. நாங்க யாரும் கண்டுக்கல.நீ சொல்ற மாதிரி பிரச்சினை வந்த பிறகு பார்க்கலாம் எண்டு விட்டு விட்டோம்.நாம ஸ்கூல் ல எனது பயணம் கட்டுர எழுதுற மாதிரி எழுதி இருக்கிறாய். நாசூக்காக நீ சொன்ன விஷயம் எல்லாம் அருமை..
ReplyDeleteஅவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததாக சொன்னார். (ஈர்ப்பு... யாருக்குத்தான் இருந்ததில்லை எல்லாப் பொருட்களிலும் இருக்கிறதே..)
“ அது பெண்களின் இயல்பு. அங்குதான் நிறைய ஆண்கள் தோற்றுப் போகிறார்கள்.”
அதிகமாக ராஜாக் கட்சி சகோதரர்களினதும், அவர் தம் சகபாடிகளினதும் போஸ்டர்கள்தான் தலை நகரை அலங்கரித்தன.
”எனக்கா? நம் தத்துவ வாழ்க்கை இதுவரை எந்த பெண்ணுக்கும் பிடிக்கவில்லை. ஆகவே எனக்கு உபகாரமோ, ப்ளாஸ்டரோ தேவை இல்லை.” மச்சான் இது சூப்பர்டா ஊர்ல இந்த பக்கேஜ் சீடீதன் இப்ப ஓடுது.
இன்னும் சில வருடங்களில் மாட்டு வண்டியில் போய்ச் சேர வேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கையில் யுத்தம் முடிந்து+இருந்தது. ..
நமது ”வந்தபின் தீர்வு தேடும்” புத்தி சொல்ல……
உண்ட கதைய வாசிச்சிட்டு உங்கட பிரென்ட் விழுந்து விழுந்து சிரிச்சா. அவரு இன்னும் திருந்தலையா எண்டு கேட்டா. ஓவரா விடாத டீ புறகு எல்லாம் கஷ்டம்டா..
Kamala is well known person to you too, although she is not an important person to this comment anyhow thanks for your comment Sabry. I tried to reply in tamil but I can not load google indic in comment field. thanks.
ReplyDeleteநல்ல எழுத்து இர்பான்... பயணங்கள் பதிவுகளாவது ஒரு இனிமையான பெயர்ச்சி.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...
ReplyDeletemachan its very nice im very happy i shared in this story
ReplyDeleteungaludaiya anubavangal migavum inimaiyaanavai... thodarungal ungal payanangalai irfanskyyil....tc.
ReplyDeleteits nice machan. but antha kamala yaruda? innum marakalayo(both)????????????????
ReplyDeleteHi, Faizal. Kamala unakku therincha aalthaan. naan ninaikkave illaye marakkirathukku. naan sonna maathiri ”நீ அறிவாயா நண்பனே, எனக்கும் கமலாவிற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை”. Thanks to following my blog and comment. keep it up...
ReplyDeleteஇர்பான், நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய உன் "பிற் குறிப்பு" இப்போது பல உண்மைகைளை பதிவு செய்து விட்டது.........
ReplyDelete:D
Delete