அல்நாசர் நினைவுகள்
அல்நாசர் புரோஸ்டேட் சிக்கன் ரெஸ்டாரன்ட்க்கு முன்னால் காரை பார்க் செய்துவிட்டு அல்-நாசரின் அழகிய நினைவுகளை அசைபோட்டவனாக கண்மூடி தியானித்திருந்தேன்... பீப் பீப்... விண்டோஸ் போன் தியானம் கலைத்து ஓய்ந்தது. “டியர் கஸ்டமர், அல்நாசர் இஸ்லாமிக் வங்கி தானியங்கி பணவழங்கியில் தாங்கள் பெற முயன்ற பணத்தொகை உங்கள் கணக்கில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. நன்றி” இப்பிடியொரு நோட்டிபிக்கேசன் தேவையா? மாதக்கடைசியின் வங்குரோத்து நிலை மனதில் தோன்றி மறைந்தது. அல்நாசர் முன்புபோல் இல்லை. முன்னைய கலகலப்பில்லை. அல்நாசர் மட்டுமல்ல முழுக் கட்டாரும் அப்படித்தான் இருக்கிறது. ஏலவே அனுமானித்துவிட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க தன்னை முடிந்த வரையில் மட்டுப்படுத்திக்கொண்டு மெல்லமே நகர்கிறது கட்டார். பெருநாள் நாட்களில் கூட ஷோப்பிங் மோல்கள் தூங்கி வழிந்தாலும் அல்நாசர் வீதி விழாக்கோலம் பூண்டிருக்கும். இப்போது ஒன்பது மணிக்கே வெறிச்சோடுகிறது. கட்டாரில் சாப்பாட்டுக் கடைகளுக்கு பெயர்போன இடம் அல்நா...





Comments
Post a Comment