
தன் முயற்சியில் சற்றும் தளராத மைக்ரோசாப்ட் இன் புதிய தயாரிப்பு Microsoft Security Essentials(MSE) பீட்டா பதிப்பில் Morro என்று இந்த Antivirus வெளியானது. இறுதியாக இதன் இறுதி பதிப்பு இப்பொழுது மைக்ரோசாப்ட் வெப்சைட் இல் கிடைக்கிறது.XP Vista Windows 7 எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய வகையில் கிடைத்தாலும் நாம் Geniue பாவனையாளராக இருக்க வேண்டும் என்பது நமக்கு கொஞ்சம் இடிக்கிறது. 7 பாவனையாளர்கள் இலகுவாக நிறுவ முடியும். Real time Protection இருப்பதுடன் update வசதிகளும் உண்டு. MSE, Antivirus தயாரிப்பாளர் களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று மகான்கள் சொல்கிறார்கள் கிட்டத்தட்ட 68% ஆன வைரஸ் களை அகற்றுவதாக மேலதிக தகவல். இலங்கைக்கு போனபோது எனது portable pidgin யை வைரஸ் பதம் பார்த்து exe file யை நாசம் பண்ணி விட்டது. MSE அழகாக அந்த file யை clean செய்து மீண்டும் icon உடன் மீட்டுத்தந்தது ஆகவே ஒரு ஓ போடலாம்.வைரஸ் என்பது விண்டோஸ் க்கான மிகப்பெரும் சவால். இதனை முறியடித்தால் விண்டோஸ் ஆல் ஆப்பிளை உண்ண முடியும் என்று நம்புகிறேன்.மற்றும் அண்டி வைரஸ் க்கான செலவும் தேவையில்லை பார்ப்போம்.
Download MSE
Comments
Post a Comment