அழகிய அந்திப் பொழுதுகளிடம் - நான்

அடைவு காணமுடியா வாழ்க்கைப் பயணங்களில்...
அர்த்தம் தெரியா அழகிய அந்திப் பொழுதுகள்...
எவற்றை என்மனதில் திணிக்க நாடுகின்றன?
ஏதோ சொல்லவும்
ஏதோ எழுதவும்
ஏதோ சிரிக்கவும்கூட தோன்றுகிறது...
முன்பெல்லாம் தனிமைக்காக தவம் கிடந்ததுண்டு...
அந்திகளே! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?
முக்தியின் முதிர்ச்சியோ இன்று?
தனிமையே என்னிடம் தவம் இருக்கிறதே!
அந்திகளே! எவற்றில் மாறுபட்ட ரசிகன் நான்?
பொறுமையை பொறுமையாக சோதிக்கும் வாகனங்களின் நெரிசல்களினதா?
பூமியில் நீண்டு பரந்து விரிந்து வாழ்க்கைத்தத்துவம் சொல்லும் நெடுஞ்சாலைகளினதா?
வெளியிருந்து சுடாமல் உள்ளிருந்து புளுங்கவைக்கும் ஊமை வெயிலினதா?
முகம் தெரியாத காதலியின் நினைவை மனதில் மீட்டும்....
சில்லென்ற..
ஜன்னலோர கண்ணாடி மழையினதா?
சகபாடியை விடவும் என்னிடம்
ஒட்டியுறவாடும் நான் இன்றுவரை நேசிக்கும்
அழகிய தனிமையினதா?
அந்திகளே! என் வாழ்வில் நான் அழும்போது புன்னகைக்கவும்...
புன்னகைக்கும்போது கண்ணீர் சிந்தவும் ....
யார் எனக்கு கற்றுக் கொடுத்தது?
வரிகளுடன் மிஞ்சியும்...
கவிகளுடன் தோற்றுப்போயுமுள்ள..
இந்தப்பிதற்றல்களின்
உண்மை அர்த்தம்தான் என்ன?
good irfan sanjee and arvin
ReplyDeleteThanks Guys
ReplyDeleteமுகம் தெரியாத காதலியின் நினைவை..... என்றால் என்ன அர்த்தம் அண்ணா?
ReplyDeleteசிலநேரம் மழை இல்லாமலேயே குளிர்வதில்லையா அது மாதிரித்தான். நமக்கு காதலி இல்லாவிட்டாலும் சிலநேரம் மனசு உருவாக்கி அவவ மிஸ் பண்ற மாதிரி பீல் பண்ணும். இதுக்கெல்லாம் பட்டி மன்றம் வைக்காதீங்க சஞ்சீ..
ReplyDeletenice keep it up
ReplyDeletenice
ReplyDeletewarihaludan minjiyum kawihaludanthotrup poyumulla inda pizatral halukku unmayana artham than enna?
ippo theriyuma?
இதுவரை தெரியவேயில்லை...
Delete