நம்ம எலேச்சனுக்கு Google Home Page இனை மாற்றுவார்கள் என்றால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தனை. யார் மனதையும் புண்படுத்தவோ கேலி செய்யவோ அல்ல. காமெண்டுகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழிலும் பல்வேறுபட்ட மொழிகளிலும் type செய்வதற்கு google IME பெரிதும் உதவுகிறது. உண்மையில் இது ஒரு பழைய சரக்கு. இருப்பினும் நம் நண்பர்கள் இன்னும் தமிழில் தட்டச்சு செய்வதற்கு சிரமப்படுவதாகவே தோன்றுகிறது. அதற்காக இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணமாகட்டும்.
அல்நாசர் புரோஸ்டேட் சிக்கன் ரெஸ்டாரன்ட்க்கு முன்னால் காரை பார்க் செய்துவிட்டு அல்-நாசரின் அழகிய நினைவுகளை அசைபோட்டவனாக கண்மூடி தியானித்திருந்தேன்... பீப் பீப்... விண்டோஸ் போன் தியானம் கலைத்து ஓய்ந்தது. “டியர் கஸ்டமர், அல்நாசர் இஸ்லாமிக் வங்கி தானியங்கி பணவழங்கியில் தாங்கள் பெற முயன்ற பணத்தொகை உங்கள் கணக்கில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. நன்றி” இப்பிடியொரு நோட்டிபிக்கேசன் தேவையா? மாதக்கடைசியின் வங்குரோத்து நிலை மனதில் தோன்றி மறைந்தது. அல்நாசர் முன்புபோல் இல்லை. முன்னைய கலகலப்பில்லை. அல்நாசர் மட்டுமல்ல முழுக் கட்டாரும் அப்படித்தான் இருக்கிறது. ஏலவே அனுமானித்துவிட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க தன்னை முடிந்த வரையில் மட்டுப்படுத்திக்கொண்டு மெல்லமே நகர்கிறது கட்டார். பெருநாள் நாட்களில் கூட ஷோப்பிங் மோல்கள் தூங்கி வழிந்தாலும் அல்நாசர் வீதி விழாக்கோலம் பூண்டிருக்கும். இப்போது ஒன்பது மணிக்கே வெறிச்சோடுகிறது. கட்டாரில் சாப்பாட்டுக் கடைகளுக்கு பெயர்போன இடம் அல்நா...
Flutter 2.10 வின்டோஸ் இற்கான stable (நிலைத்த) பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஆன்ரொயிட், iOS, வெப் என்பவற்றையும் தாண்டி Flutter இனை பயன்படுத்தி Windows இற்கான டெஸ்க்டாப் ஆப்களை விருத்திசெய்துகொள்ள முடியும். முன்னைய காலங்களில் ஒவ்வொரு இயங்குதளத்துக்குமான ஆப்களை ஒவ்வொரு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. அதாவது வின்டோசுக்கான ஆப் இனை C#, ஆன்ரொயிட் இற்கு Kotlin, iOS இற்கு Swift இலும் நிரலாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதிலுள்ள சிக்கல் என்னவெனில் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் தேர்ச்சிபெற்ற நிரலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருப்பதும் வெவ்வேறு பதிப்புகளை வெவ்வேறு கோட்தளங்களில் மேலாண்மை செய்ய வேண்டியும் இருப்பதுவுமாகும். பேஸ்புக்கின் React Native, கூகிளின் Flutter போன்ற ப்ரேம்வேர்க்குகள் இந்த சிக்கலை இல்லாமலாக்கி ஒரே நிரலாக்கத்தில் பல்வகை இயங்குதளத்தில் ஒத்திசைவாக்கும் ஆப்களை எழுதும் சுதந்திரத்தை தந்தன. Flutter ஒரு படி மேலே போய் டெஸ்க்டாப் க்குமான நிலைத்த பதிப்பினை வெளியிட்டிருப்பது வின்டோஸ் உலகுக்கு இன்னும் அதிகளவான திறன்வாய்ந்த மென்பொருட்களை வடிவமைப்பதில் ப...
Comments
Post a Comment