Microsoft Security Essential - Some Common Problems and Tips


MSE வெளியான நேரத்தில் அது சம்பந்தமாக சிறிது அலசியிருந்தோம் ஆரம்ப காலங்களில் எனக்கும் இது நன்றாக செயற்படுமா ? என்ற ஐயம் இருந்தது. எதிர்பார்த்ததை விட நன்றாகவே செயற்படுகிறது. இருப்பினும் MSE இனை install செய்யும்போது அல்லது அதனை update செய்யும்போது சில சிக்கல்களை அவதானிக்க முடிகிறது. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட கணினி களுக்கு இன்ஸ்டால் செய்த அனுபவத்தில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.(நான் install செய்த 98% ஆன கணினிகள் windows original copy license கொண்டவை என்பதை கவனத்தில் கொள்க.)
சிக்கல்  #1.

MSE யை நிறுவும்போது இவ்வகையான Error Message தோன்றினால் முதலில் restart செய்து இற்றைப்படுத்தப்பட்ட windows installer இனை Install செய்துவிட்டு அதன் பின்னர் MSE இனை install செய்யவும். (பொதுவாக இப்பிரச்சினை XP O/S கே தோன்றும்)

சிக்கல் #2.

 இது மகா பெரிய சிக்கல் அதாவது Windows Genuine Software Checkup. இதற்கு தீர்வு தயவு செய்து original copy வாங்கி பாவியுங்கள். அல்லது நான் online இல் இருக்கும் நேரம் பார்த்து என்னை வம்புக்கு இழுங்கள். உங்கள் வருமானத்தை எனக்கு உறுதி செய்தால் (??!!) இவ்விடயத்தில் உங்களுக்கு என்னால் நிச்சயமாக உதவ முடியும். இப்படித்தான் பில் கேட்ஸ் கூட நம்மைப்போன்றவர்களுக்கு Crack செய்ய கற்றுக்கொடுத்தார்.  (எப்படி என்று இங்குசொன்னால்நம்  வலைப்பூஇன்றோடு   முடிந்தது.)

கொசுறு: சிலவேளை நீங்கள் Original Software பாவிப்பவராக இருப்பினும் உங்களை திருடர் என கூறி Windows பல் இளிக்கும் .. மன்னியுங்கள் அவர்களும் ஒவ்வொன்றையும் படித்து படித்துதான் தயாரிக்கிறார்கள். இவ்வாறு நேர்ந்தால் உங்கள் கணினியின் நேரத்தை சற்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். இந்த அனுபவம் எனக்கும் நேர்ந்த்தது. )


சிக்கல் #3: MSE இனை update செய்யும்போது நீண்ட நேரத்தின் பின் கீழ்க்கண்டவாறு ஒரு எரிச்சலூட்டும் message தோன்றும்.

 
இவ்வாறு தோன்றினால் நீங்கள் Manual ஆக Update செய்ய வேண்டி வரும். இங்கு கிளிக் செய்து latest virus definition file இனை download செய்து install  செய்யுங்கள்.  அடுத்த தடவை இப்பிரச்சினை எழாது.

MSE எளிமையானதும் இலகுவாக மேலாண்மை செய்யக்கூடியதுமான Anti Virus ஆகும்.கடந்த ஆண்டு எனக்கும் அகில உலகுக்கும் சவாலாக இருந்த Conficker Worm இனை இலகுவாக கண்டுபிடித்து அழித்து மேலதிகமாக இவர் மாமியார் மாமனார் பேரன் பேத்தி எல்லாவற்றையும் கண்டறிந்து என் வேலையை காப்பாற்றிக்கொடுத்த Microsoft Security Essential க்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME