இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்
VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது. பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல். Tor போன்ற சமூக ஆர்வலர்களால் பராமரிக்கப்படும் சேவைகளிலதொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் நுழைந்து விடுவதும் உண்டு. .. பிறகு நமது அனானிமிட்டி அம்பேல். NSA எப்போதும் TOR சேவையில் ஒரு கண்வைத்திருக்கிறது. எமது சாதாரண இணையப் பாவனையின்போது இணையத்தளங்களால் பாவனையாளரின் இலகுக்காக Cookie கள் உருவாக்கப்பட்டு நிரந்தரமாக எமது கணினிகளில் விட்டுவிடப்படுகின்றன. நாம் VPN களுக்கூடாக இணையத்தை பயன்படுத்தும்போது கூட இவ்வகையான Cookie கள் நமது உண்மையான அடையாளத்தை குறிப்பிட்ட தளங்களுக்கு வழங்கும் ஆ...
http://theoatmeal.com/comics/apple
ReplyDelete