70 Billion Pixels…

அவனவன் 10 Mega Pixel 12.1 Mega Pixel என்று வைத்துக்கொண்டு படம் எடுத்து கலக்கும்போது நான் இன்னும் VGA camera வை வைத்துக்கொண்டு திரிவது ஒரு மாதிரியாகவே இருந்தது. நம்ம கவலையை போக்கும் முயற்சியாக Sony + Epson + Microsoft கூட்டணி சேர்ந்து புதுசா ஒரு சாதனை செய்திருக்காங்க.
sponcer
பெரிசா ஒண்ணுமில்ல…
70 பில்லியன் Pixel சைஸ்ல அகலப்படக்காட்சி(??!!) அதுதாங்க Panorama Picture எடுத்து அசத்தி இருக்காங்க..Smile with tongue out



ஒவ்வொரு படமும் சுமார் 590,000 Pixel அகலமும் 121,000 Pixel நீளமும் கொண்டவை. ஒவ்வொன்றும் நம்ம football Ground இனை விட பெரிதாக இருக்குமாம்.
Sony தயாரிப்பான A900 Minota 400mm f4.5 AO G lenses இரண்டு பாவித்து இருக்காங்கப்பா.. இதெல்லாம் நாம பார்த்ததே இல்ல போங்க…
sony
படம் பிடிக்க எடுத்த நேரம் என்னவோ மூன்று மணி நேரம்தானாம். ஆனால் அதனை இன்ன பிற வேலைகள் செய்து முடிப்பதற்கு இரண்டு முழு நாட்கள் எடுத்ததாம். இதற்காக Dell T750 Quad-Core Xeon Processer கொண்ட 24 GB RAM 6TB Hard disk கொண்ட கணினி பாவித்து இருக்கிறார்கள். முடியல….Confused smileConfused smile
Photo Capacity 200GB வந்ததாக மேலதிக தகவல்.
எடுத்த படங்களை அச்சிடுவதற்கு Epson கூட்டணி உதவியிருக்கிறது. முழுமையாக அச்சிட முடியாவிட்டாலும் 15m அளவில் wide Print செய்துள்ளார்கள்.

Microsoft தன் பங்கிற்கு Cloud Computing தொழிநுட்பம் மூலம் தேவையான real time storage உதவி மற்றும் வலைப்பக்க ஒப்பிசைவு உதவிகளை வழங்கியுள்ளார்கள்.  எனக்கு பிடித்த Silverlight பாவித்திருப்பது ஒரு Plus Point.. Winking smile
windows_azure_smallimagepyramidemicrosoft-silverlight
மொத்தத்தில் 70 Billion Pixel கொண்ட mobile phone சந்தைக்கு வரும்வரை இனி Phone  வாங்குவதாக இல்லை. Angel
நீங்களும் Budapest, Hungary  க்கு சென்று சாதனையில் இணைந்து மகிழலாம்Party smile

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME