மிதப்புப் படலம்


     வழக்கம் போலவே இன்றும் சிறிய Application ஒன்றினை Deploy செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.என்ன தொழிலோ என்ன துறையோ? அதுசரி! நம் வமிசத்திலேயே நாம்தான் இந்த அறிமுகமில்லாத கோதாவில் முதலில் கால்வைத்தவன். நியூட்டனும் அப்பிள் பழமும் மாதிரி. ஆதமிடம் இருந்து தொடங்கினாலும் நியூட்டனுக்குத்தான் ஆப்பிளில் பெருமை கிடைத்தது. சாப்பிட்டதற்காக அல்ல. வளமாக மண்டையில் வாங்கிக்கட்டியமைக்காக. சலித்துக்கொண்டே நம்ம Queen உடன் Student Lounge இல் அமர்ந்தேன்.கல்லூரி Lounge யில் இருப்பதென்றால் கட்டாயம் ஒரு Girl அருகில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரும்படிக்கும் இடத்தில் சிக்கிய நாயின் நிலைமைதான் நமக்கும். பல இளம் ஜோடிகள் தங்களுக்குள் பேசிக்குலாவிக் கொண்டிருந்தன.  நான் வருவதை பல கண்கள் நோட்டமிட்டாலும் யாரும் என்னுடன் பேசவில்லை. மொழி ஒன்றாக இருந்தாலும் Protocol ஒத்துவருவதில்லை. அதனால் எந்த Transmission உம் என்னோடு இருப்பதில்லை.


      நானும் Queen உம் வேலையில் மூழ்கிப்போயிருந்தோம். நம்ம களிமண் கட்டியும் அதன் Processer உம் நிரம்பல் நிலையை எட்டியிருந்தன. இடையிடையே மயங்கி விழுகிற உணர்வும் எனக்கு ஏற்பட்டது.நம்ம Group members எல்லாம் ஓடி ஒழித்து விட்டார்கள். எல்லாப்பழியும் நம்மையே வந்து பாதிக்கும். KL யின் சில்லென்ற மழை போதாக்குறைக்கு கட்டுப்படுத்தியற்ற A/C வேறு.. நான் மட்டும் தனிமையிலும் குளிரும் உறைந்து போயிருந்தேன். மற்றவர்களுக்கு எப்படிக்குளிரும்??

ஹாய்!……………
………………………………………………..
Hai!…
சட்டென்று திரும்பி நிமிர்ந்தேன்.
ஜம்மென்று அருகில் உட்கார்ந்தாள்….
கையில் Mega Size Coffee Cup. ஆவி பறந்த காபியை பார்த்ததும் நாவில் எச்சில் ஊறியது.
May I sit here?
புன்னகைத்தேன்…
ofcoz you’ve sat already!! என்றேன்..
சிரித்தாள்.
Coffee?
வாங்கிக்குடிக்க மனம் மன்றாடினாலும் ஒரு பம்மாத்துக்கு Thanks! என்றேன்.
மாயா…! நம்ம ஜூனியர்…….. புதுசு……. தன்னையும் College Rating List இல் புதிதாக இணைத்துக்கொண்டவள்.
என்னைத்தவிர எல்லோரிடமும் அறிமுகமாகியிருந்தாள்.
எனக்கும் எப்படியோ பெயர்தெரிந்து போயிருந்தது.
I am Maya!
மண்டையை அசைத்தேன்.என் நாமத்தை சொல்ல விரும்பவில்லை.
நீங்க? ………….தொடங்குகிறாள்… என் பெயரை சொன்னால் இது எங்கே போய் முடியும் என்று எனக்குத்தெரியும். இருப்பினும் சொன்னேன்..
Are you mixed?? Indian?? Malay??
Neither I am Sri Lankan.
Are you Ceylonist?
சிலோனிஸ்ட்டா?
…………என்னடா இது கம்யூனிஸ்ட் மாதிரி புதுசா?
No I am Sri Lankan என்றேன்.
Do you know Tamil??
கிழிஞ்சிது போ..
தெரியும் ஆனால் என் தமிழ் உங்களுக்கு புரியாது என்றேன்.
புரீது.
எது?
உங்கள் தமிழ்.
Oh that’s fine.
இங்கே படிக்கிறீங்களா?
ம்..
IT???
IT.
Semester?
Almost Final.
அதென்ன almost? ரொம்ப Resit வைப்பீங்களோ?
அதெல்லாம் இல்லை.
மீண்டும் எனது வேலையில் மூழ்க தொடங்கினேன்.
……………………………………………..
…………………………………………………………….
நீங்க முஸ்லிம்?
Queen என்னை பரிதாபமாக பார்த்தது.
தலையை நிமிர்ந்தது ஆமோதித்தேன்.
நம்ப முடியவில்லை.
ஏன் ?
உங்கள்ள அந்த சாயல் காணல..
இனத்தையும் மதத்தையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்..
அவளுக்கு புரியவில்லை என்று புரிந்தது.

என்னா செய்யிறீங்க?
Project இரு துருவங்களை இணைக்கும் வேலை. ஆனால் இதுவரை முடியவில்லை.
நா Help பண்ணட்டுமா?
ஜோக் அடிக்காதீங்க.
இல்ல எங்களுக்கும் கொஞ்சம் தெரியும்..
என்ன facebook Chatting செய்யவா???
சிரித்தாள்..
இந்த வேலை என்னுடனேயே போகட்டும்.
………………………………………………………………………..
Girl friend இருக்கா உங்களுக்கு?
சுத்தம்!
எதிரே அமர்ந்திருந்த விமல் என்னை பார்த்து சிரித்தான். வாங்கி கட்ட போகிறாள் என்று நினைத்திருப்பான்.
இல்லை! இம்முறை பதில் சற்று இறுக்கமாக இருந்தது.
பொய்!  என்றாள்.
ஏன்?
நா உன்கள ரொம்ப நாளா watch பண்றன். நிறைய பெண்கள் ஒங்களோட பேசுறாங்க.
அதுக்கு?
I am sure you have a GF.
நான் யாரிடமாவது போய் பேசியதை பார்த்து இருக்கிறீர்களா?
இல்லை.
பிறகு எப்படி சொல்றீங்க?
சும்மா ஒரு Doubt தான்.
உங்கள் Doubt ல மண் விழுக!.
எனக்கு Girl உம் இல்லை Friend உம் இல்லை அதற்கு அவசியமும் இல்லை.
………………………..
ஒங்க தமிழ் அழகா இருக்கு But சில வேர்ட்ஸ் புரில.
Thank You!
எனக்கும் Boy இல்ல.
சரி.
இப்பல்லாம் யாரயும் நம்ப முடீல.
சரி.
என்னா சரி. என்னா பண்றீங்க?
சொன்னேனே.
எங்க Stay பண்றீங்க?
இம்முறை நான் பொறுமை இழந்தேன்.
பாருங்க மாயா! எனக்கு அதிகம் கேள்வி கேட்பவர்களை பிடிக்காது. வேறு ஏதாவது topic பேசுங்கள். நான் கொஞ்சம் busy என்றேன்.

இல்ல இதெல்லாம் நானா கேட்கல……
புரிகிறது.
ஏன் friend கேட்க சொன்ன.
அதுவும் தெரியும்.
எப்டீ?
நேற்று Restaurant யில் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் உங்கள் அருகால் சென்றேன்.
பாத்தீங்களா நேத்தூ..?
நீங்கள் என்ன சாப்பிட்டீங்க என்று கூட எனக்கு தெரியும்.
நாங்க உங்கள பாத்தம். But நீங்க பாக்கல எண்டு நெனச்சோம்.
ஏன் Reply சொல்லல?
என்ன பதில் சொல்றது? எனக்கு அவசியமில்லாத ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
She need an answer.
I don’t have any answer to her.
What is your problem Irfan?
I don’t have any problem.
மாயாவிடம் சில விடயங்கள் பகிரலாம் போல இருந்தது. அவள் விரும்பாவிட்டாலும் கூட..
மாயா! உங்களுக்கே தெரியும் நான் பிறிதொரு நாட்டுப் பிரஜை. அதனை விடவும் பிறிதொரு கலாசார பண்பாடுகளில் மூழ்கிப்போனவன் என் பண்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் அதனை விட்டு விலகிப்போக நான் விரும்புவதில்லை.நான் வந்த வேலை முடிந்ததும் உங்களை விட்டும் பிரிந்துவிடுவேன்.
என்னை கொன்று போட்டாலும் உங்கள் கலாசாரம் எனக்கு ஒத்துவராது. என் ஊரில் என் உலகம் விரிந்தது. வியாபித்தது. உங்கள் நாட்டில் என் உலகம் சுருங்கியது மிகவுமே. நான் அதனை விரித்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆண்கள் நீள்முடி வைத்துக்கொள்வதும் காப்பும் கடுக்கணும் மாலையும் எனக்கு ஒத்து வராது. நீங்கள் என்னுடன் அன்பாக இருக்கிறீர்கள். நானும் உங்களுடன் அப்படித்தான் இருக்கிறேன். இது இறுதிவரை தொடரட்டும்.தொடர வேண்டும்.
உங்கள் கலாசாரம் உயர்ந்தது என்கிறீர்களா?
அப்படி சொல்லவில்லை அவரவருக்கு அவரவரது Better ஆக தோணலாம் உயர்ந்தது என்று எதுவுமே இல்லை. நாங்கள் இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கிறது. நீங்களும்தான்.
So, உங்கள் பிரச்சினை இரு வேறுபட்ட கலாசாரங்கள் அப்படித்தானே? வேறுபட்ட கலாசாரங்களை உடையவர்கள் காதலிக்கக் கூடாதா? அல்லது சேர்ந்து வாழ முடியாதா?
நான் காதலினதோ நாடு கடந்த காதலினதோ எதிரியல்ல. இந்த விடயத்தில் என்னை Exception List யில் சேர்த்து விடுங்கள்.
நான் உங்கள் வயதை தாண்டி வந்தவன்.எல்லா வகையான காதலையும் பார்த்தவன். என்னை பொறுத்தளவில் காதலுக்கு வேறு அர்த்தம் கற்பிக்க முயல்பவன் நான்.
என்ன அர்த்தம்?
தயவுசெய்து  கேட்காதீர்கள் அது உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது.சொன்னாலும் உங்கள் விமர்சனம் காதைப்பிளக்கும்.
ஏன் இர்பான் இவ்வளவு Reserved ஆக இருக்கிறீர்கள்?
ஏன் இருக்கக்கூடாது? எனக்கென்று இவ்விடயங்களுக்காக அழகிய உலகம் காத்திருக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் நாட்டை பொறுத்தவரை நான் reserved தான். மர மண்டைதான் Tube Light தான். எதுவாக இருந்தாலும் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. இந்த விடயத்தை யாருக்கும் Recommend பண்ணுவதுமில்லை. இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதுவுமில்லை. இப்படி இருப்பது எனக்கு நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.
இந்த வாழ்க்கைக்கு பெயர் மிதத்தல். இரு வேறுபட்ட நிலைகளுக்குள் ஒட்டியிருப்பினும் கலக்காமல் வாழ்வது. எதாவது ஒரு முடிவில் வாழ்வதிலும் ஒரு சந்தோசம் இருக்கிறது. முடிந்தால் நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்றேன்.
இறுதியாக நடந்த Deployment 100% Success எனக்காட்டியது. Program Compile ஆகிவிட்டது. Queen சூடாகி இருந்தாலும் அழகாகவே இருந்தது.
அவளது மௌனத்தை கலைத்தேன்….
ஒரு விடயம் கவனித்தீர்களா மாயா?
என்ன?
நீங்கள் Connect செய்ய வந்தது Failure ஆகிவிட்டது. நான் இணைக்க நினைத்த துருவங்கள் இணைந்து விட்டன.
தனது Coffee யின் இறுதிச்சொட்டையும் சுவை பார்த்தவள்…
ஒருவித பிரகாசத்துடன் சொன்னாள்…
Nice to meet you Irfan…
Queen Hibernate ஆனது.  நமது மிதப்பு வாழக்கையை உயிர்ப்பில் வைத்திருக்கும் நிமித்தம் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தேன்…
(  யாவும் கற்பனையல்ல….)
வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் சந்தர்ப்பவசத்தால் ஒட்டி வாழ்ந்தாலும் கலந்து வாழாமல் சீவிக்கும் அனைத்து சீவராசிகளுக்கும் உரித்தாகட்டும்…

Comments

  1. «îºÄ¡Ó«¨ÄÌõ

    ¦ÂýÉ þ÷·Àý þôÀÊ ¦À¡ÄõÀ¢¡¢í¸.¦ÂýÉ ¬îÍ
    from abdul

    ReplyDelete
  2. thala! padam super kandeppa 100 days odom

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME