Boot Firefox Faster Using Firefox preloader


Open source community தந்த அற்புதமான Browser Firefox என்றால் அது மிகையல்ல. உலகில் Internet Explorer க்கு அடுத்தபடியாக அதிக பாவனையாளர்களை கொண்டது. Plug-Ins, Add-Ons, Personas என்று பல பாவனையார் விருப்பங்களை தன்னகத்தே உள்ளடக்கியது. இருப்பினும் Firefox startup ஆவதற்கு தாமதமாவது இதிலுள்ள பிரச்சினை. அதுவும் Firefox Default Browser ஆகவிருந்தால் வாழ்க்கை வெறுத்து விடும். எனது Secondary Browser கூடFirefox தான். இதனை தீர்ப்பதற்கு ஒரு சிறிய சாப்ட்வேர் உதவுகிறது. 840KB அளவிலான சாப்ட்வேர். இது Firefox இனை standby யில் வைத்து தேவையான நேரத்தில் இலகுவில் Load செய்கிறது. 

Firefox preloader இங்கு கிடைக்கிறது.

டவுன்லோட் செய்து நிறுவிய பின்னர் உங்கள் Firefox Install Path இனை மட்டும் preloader க்கு காண்பித்து விடுங்கள். உங்கள் Firefox C Drive இல் இருந்தால் தேவையில்லை.
உங்கள் RAM இல் 30MB இனை preloader பிடித்துக்கொள்ளும் என்பது ஆன்றோர் வாக்கு.  

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME