மீண்டும் ஒரு புனித மாதத்தில்…
Selamat menyambut bulan Ramadan!!
இவ்வாறுதான் மலேசியாவில் ரமழான் வாழ்த்து பரிமாறப்படுகிறது. எனக்கு இங்கு மூன்றாவது ரமழான். வழமை போலன்றி நிறைய எதிர்பார்ப்புகளுடன் இம்முறை ரமழான் வரவேற்கப்படுகிறது. சென்ற ஆண்டுகளை விடவும் சிறப்பான ரமழானாக அமைந்திருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. ஊரில் இல்லாத குறை தவிர மற்றபடி இங்கும் சமமான வாழ்க்கைதான். இருப்பினும் வேலைப்பழுக்களுக்கிடையில் நோன்பு நோற்க பழக்கித்தந்தது மலேசியாதான். போதாக்குறைக்கு நமது இறுதியாண்டு Project வேறு. இருப்பினும் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. இம்மாதத்தின் முழுமையான பயனை அடையவேண்டும் என்ற ஒரு சிறு இலட்சியம். இனம் மொழி பண்பாடு கலாசாரம் என எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் ரமழான் காலங்களில் முஸ்லிம்களுக்கிடையில் ஒரே வகையான இயல்புகளை உற்று அவதானிக்க முடியும். அது எங்கிருந்தாலும் நமது ஊரையும் பண்பாடுகளையும் ஞாபகப்படுத்தும். பேரீச்சம் பழங்களும் சிறப்பான உணவுகளும் ஒற்றுமையும் விட்டுக்கொடுப்பும் சிறந்த பண்பாடுகளும் இந்த இயந்திர உலகத்திலும் காண முடிகிறது.
பேரீச்சம் பழங்கள் வகை வகையாக இங்குள்ள ரமழான் சிறப்பு அங்காடிகளில் கிடைக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் நம் நண்பர்கள் தவிர யாரும் இதனை அனுபவிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் இங்கும் கிடைப்பது அருமை. இலங்கையில் தேடித்தான் பார்த்து சொல்ல வேண்டும்.
சஹர் இம்முறை நம்ம சாஜகான் அண்ணன் கடையில் இந்திய சாப்பாடுகள் செய்து ஒவ்வொரு நாளையும் அசத்துகிறார். அவர்தான் இந்திய பள்ளிவாயல் இமாமை சஹருக்கு எழுப்பி விடுகிறார். இல்லாவிட்டால் இமாம் நோன்பு வைப்பதும் ஜமாஅத் நடத்துவதும் சிரமம். சஹர் முடித்துக்கொண்டு பள்ளிக்கு வருவோம். முதல் நோன்பன்று முஅத்தினார் “அஸ்ஸலாத்து ஹைரும்…..” மறந்து விட்டார் “அல்லாஹு அக்பர்" சொல்லி மீண்டும் ஞாபகப்படுத்தியவராக மீண்டும் சொன்னார். பின்பு மீண்டும் “அல்லாஹு அக்பர்” சொல்லி அதானை முடித்தார். .
நிறைய விடயங்கள் “ஹிஜ்ரத்" இன் பின்னரே எனக்கு சரியாக புரிகிறது… யார் யாரெல்லாம் மார்க்கத்தையோ மக்களையோ ஏன்? மனிதர்களை புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் கட்டாயம் தான் வசிக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஒரு வருட காலம் “ஹிஜ்ரத்" செல்ல வேண்டும். நமதூர் மார்க்க அறிஞர்களும் அரசியல்வாதிகளும் கட்டாயம் இதில் பங்கேற்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.
அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள். இறைவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!.
நோன்பு காலங்களில் அரபு கற்க விரும்புவர்கள் இதனையும் முயற்சித்து பார்க்கலாம்.
நோன்பு காலங்களில் அரபு கற்க விரும்புவர்கள் இதனையும் முயற்சித்து பார்க்கலாம்.
பட உதவி: Google
Comments
Post a Comment