Happy Merdeka!!
இன்று மலேசிய மண்ணின் 53 வது சுதந்திர தினம். சரி இதில் நமக்கு என்ன இலாபம் என்று தோன்றலாம்.. ஒருநாள் விடுமுறை. ஒருநாள் விடுமுறை. அதனை விட என்ன வேண்டும் இங்கு. நேற்று இரவு வரை இந்த விடுமுறை என் மனதில் படவில்லை. வழக்கம் போல் நாளைய நாளுக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். திடீரென மனதில் பளிச்சிட்டது நாளைக்கு விடுமுறை. யப்பா உடைகள் கழுவத்தேவயில்லை, நேரத்தோடு தூங்க தேவையில்லை, இன்று நம் நண்பர்களோடு ஒரு அரசியல் வாக்குவாதம் போடலாம், அதைவிட இந்த Assignments சமர்ப்பிக்கும் தொல்லை ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கலாம். இவை தவிர நமக்கு என்ன சுதந்திரம் தேவை??.
இருப்பினும் நினைத்ததை விட 2 மணி நேரம் முன்பாகவே கண்கள் எழுந்து விட்டன. பூராவும் ஊர்க்கனவுகள் உம்மா, வாப்பா, நண்பர்கள் எல்லோரும் கனவில் வந்து சென்றார்கள். சஹர் முடித்து தொழுதுவிட்டு வந்து தூங்குவதென்பது ஒரு அலாதி சுகம். இன்று அந்த அலாதியை அனுபவித்தேன். கண் முழித்து பார்த்தபோது கடந்த ஒரு வாரமாக வாசித்து முடிக்காமல் திணறிகொண்டிருக்கும் ஆங்கில நாவல் அருகே குப்புறபடுத்திருந்தது. இரவு எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. சஹர் செய்யும்போது பயங்கர தலைவலி பின்னர் தூங்கி எழுந்தபின் மீண்டும் நாவல் பார்த்து சிரித்தது. இன்று இதனை முடிக்காமல் விடுவதில்லை என்று மனம் சொல்லியது. பதிவு எழுதும்போது நாவல் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. கதை சுவாரஷியமாகவே இல்லை. இருப்பினும் வாசிக்க வேண்டும் போல் இருந்தது. வழமை போன்று இன்றும் மழை , அடைமழை அழகாய் சிரிக்கத்தான் யாருமில்லை
மழை சற்று இடைவேளை எடுத்து இருந்தது. தூறல்கள் நம் நண்பர்களை அவர்களின் இன்றைய தொலைவுகளை ஞாபகப்படுத்துகின்றன. இன்றைய நாளும் மிக அழகாகவே சென்று கொண்டிருக்கிறது..
என் மலேசிய நண்பர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்…
Comments
Post a Comment