Cartoon - கார்டூன்

tomjerry           ஒருவாறு இன்றுடன் EXAM முடிந்தது. Advanced Maths தவிர்ந்த மற்ற அனைத்து பாடங்களும் சுகம். Maths தான் சற்று Advance ஆக போய் விட்டது. Download செய்துவைத்த அனைத்து Cartoon களையும் பார்த்து முடித்து விட வேண்டும் என்று மனது சொல்லியது. அதில் அப்படியொரு சந்தோசம் எனக்கு. பரிட்சை முடிந்தால் பலபேர் பலவாறு கொண்டாடுவார்கள். எனக்கு Cartoon Cartoon Cartoon. அதுவும் புதிதாக ஏதாவது ரிலீஸ் ஆனால் நமக்கு கொண்டாட்டம் தான். நமக்கு Rating இல் முதல் இருப்பது 3D Animation Cartoons இரண்டாவது Science Fictons ஆங்கில படங்கள் மூன்றாவது நம்மை தேம்பி தேம்பி அழ வைக்கும் தமிழ் படங்கள் எந்திரன் வகையறாக்கள். அவைகளில் தான் நம்ம கேப்டன் மீடியா ப்ளேயரில் தட்டச்சு செய்யும் அதிசயம் எல்லாம் பார்க்கலாம் பார்க்க.

 

        இந்த Cartoon மோகம் எந்த வயதில் என்னுள் நுழைந்ததோ தெரியாது. நினைவு தெரிந்த நாள் முதல் இப்பழக்கம் என்னும் இருந்து வருகிறது. Woody Wood Packer, Bugs Bunny , Tom & Jerry , Spiff and Hercules, Postman pat, BirdMan, BatMan, Toon Tamasa collections  எத்தனை எத்தனை. இன்னும் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. சிறுவயதில் வழக்கமான பழக்கம்தான் இது. ஆனால் இந்த கழுதை வயதிலும் இந்த பழக்கம் தொடர்வதும் அதனை அதே சிறுவயது ரசனையில் ரசிப்பதும் ஆச்சரியமே. நேற்று பஸ்ஸில் வரும்போது Tom & Jerry பார்த்து சிரித்துக் கொண்டு வந்ததை முன் இருக்கையில் எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண் சந்தேகமாக என்னை நோட்டம் விட்டுக்கொண்டு வந்தாள். அடிக்கடி ஆடைகளையும் சரிப்படுத்திக்கொண்டாள்.

woody_irfansky

 

     விடுமுறையில் வீடு போனபோது கூட தெரண அலைவரிசையில் ஒவ்வொரு நாளும் காலை 6.30 தொடக்கம் 7.00 மணிவரை நான் Looney Tunes பார்த்துக் கொண்டிருந்ததை உம்மாவும் வாப்பாவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். நானா வீட்டுக்கு வந்தால் அந்த நாட்களில் உம்மா நம்மள Complaint பண்ணுவாங்க.. “பாருடா இவன.. எந்த நேரமும் Cartoon Cartoon எண்டு சாகிறான் எண்டு”. நானா சொன்னாரு அவன் வளர்ந்தா சரியாகி விடுவான் எண்டு. அன்று நானும் நானாவும் இருந்து மணிக்கணக்கில் Cartoon பார்த்தோம். அந்த நேரத்தில் அவர் ஒரு பிள்ளைக்கு தந்தையாய் இருந்தார். கார்டூன் முழுமையாக பார்த்துட்டு நாளை TV Game விளையாடுவோம் என்று சொல்லி சென்றார். அவரிடம் பார்த்த கார்ட்டூன் பெயர்களை கேட்டு நானே ஆச்சரியப்பட்டு போனேன். உம்மாவிடம் சொன்னேன். “அவன் உன்னை விட கார்டூன் பைத்தியம்” என்று சொன்னார். இப்ப நம்மிடம் நமது தம்பியை பற்றி நிறைய Complain வருகிறது. TV Game இல் நான் மிக சிரமப்பட்டு முடித்த Stage எல்லாம் சில நிமிடங்களில் Clear செய்து விடுகிறான் அவன் என்ன Algorithm என்று எனக்கு தெரியவில்லை.

 

   மலேசியாவில் எனக்கு பிடித்த Cartoon, Upin Ipin dan Kawan Kawan இங்குள்ள பல்வேறு இன சிறார்களின் வாழ்வை எண்ணங்களை அவர்களின் பேச்சு மற்றும் நடத்தை பாணிகளை தத்ரூபமாக உயிரூட்டி இருக்கிறார்கள். முன்பு மொழி பிரச்சினையால் சிறிது சிரமப்பட்டேன். இப்போது பரவாயில்லை. Google Translate இதற்கும் கைகொடுக்கிறது. Upin-dan-Ipin

 

         3D Animation படங்கள் நம் சிந்தனைகளில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எளிதாக நிறைய விடயங்களை கற்பிக்கின்றன. நான் பேசுற பாதி இங்கிலிஸ் அவைகளில் இருந்து உருவியவைதான். இன்று ஒரு சிந்தனை தோன்றியது. நாம் மட்டுமே பார்த்து மகிழும் படங்களை நம் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டால் என்னவென்று. Download செய்வது சற்று சிரமம்தான். இருப்பினும் சிறந்த பொழுது போக்குதானே. யாரையும் துன்புறுத்தாமல் புண்படுத்தாமல்...

இந்த பதிவு நம்ம கார்ட்டூன் மற்றும் TV game நண்பர்களான MRM Irsath(Dragon Ninja), AS Abdul Jaleel(Captain America) , MFM Fanoos (Konami Sports Play Station சிங்கம்) , MI Mohamed(All in All) , MSM Sihar(Damn Duck Hunt) , AM Anfas & CM Fawas (Street Fighters) இவர்களுடன் சேர்ந்து நாள் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த வரலாறுகளும் உண்டு. இங்கு சந்தித்த ஒரு அதிசய நண்பர் நம்ம சகபாடி அட்வைசர் ப்ராஜெக்ட் மனேஜர் Ethelbert Dickson அவருக்கும் உரித்தாகட்டும்.  சில 3D Animation படங்களுடன் சந்திப்போம் சிந்திப்போம்…

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME