Feed Reader–RSS Feed களை கையாளுதல்
அருகில் காணப்படும் RSS படத்தினை நம்மில் பலர் பல இணையத்தளங்களில் பார்த்திருப்போம். இருப்பினும் இது எதற்காக உள்ளது என்பது எம்மில் பலருக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம். Really Simple Syndication என்பதன் சுருக்கமே இந்த RSS. அதாவது இணையத்தளங்கள் தமது பதிவுகளை அல்லது மேம்படுத்தப்பட்ட தகவல்களை XML கோப்பு வடிவில் பரிமாற்றம் செய்கின்றன. இது வெவ்வேறு பட்ட தொழிநுட்பங்களில் ஒத்திசைவதால் இணையத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. உதாரணமாக இந்த தொழிநுட்பம் மூலம் சிறிய செய்திகள் அல்லது காலநிலை தகவல்களை உடனுக்குடன் எமது தளங்களில் அல்லது எமது மென்பொருட்களில் பதித்துக்கொள்ள முடியும். இந்த பதிவு RSS அல்லது xml சம்பந்தமாக சொல்லப்போவதில்லை. மாறாக அதன் மற்றுமோர் பயனான எமக்கு பிடித்த rss வசதி கொண்ட இணையத்தளங்களில் இருந்து தளங்களுக்கு செல்லாமலேயே உடனுக்குடன் அவற்றின் இற்றைப்படுத்தப்பட்ட பதிவுகளை எவ்வாறு கணனியில் பார்ப்பது என்பது பற்றியதேயாகும். எமக்கு பிடித்த இணையத்தளங்களின் செய்திகளை அவற்றை திறக்காமலேயே உடனுக்குடன் பார்ப்பதற்கும் இணையத்தொடர்பு இல்லாத நிலையிலும் (Offline) பதிவுகளை படிப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
RSS இடுகைகளை கணினியில் பார்ப்பதற்கு அதிகமான மென்பொருட்கள் இருப்பினும் எனக்கு மிகவும் விருப்பமான மென்பொருள் Feed Reader ஆகும் இது ஒரு Open Source மென்பொருளாகும். எழுத்து வடிவங்கள் மட்டுமன்றி படங்கள் வீடியோ மற்றும் ஓடியோ கோப்புகளையும் இலகுவாக கையாள்கிறது. ஒரு தளத்தில் இருந்து எவ்வாறு rss இடுகைகளை நமது கணினியில் பார்ப்பது என்று பார்ப்போம்.
முதலில் Feed Reder மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
இங்கு download feedreader பதிவிறக்கலாம்.
பின்னர் அதனை வழமைபோல் கணினியில் நிறுவிக்கொள்ள (Install) முடியும்.
Feed Reader இடைமுகப்பு இவ்வாறு தோன்றும்.
உதாரணத்திற்கு எனது வலைப்பூவினை எவ்வாறு feed reader உடன் இணைப்பது என்று பார்ப்போம்.
முதலில் http://irfansky.blogspot.com சென்று முகப்பில் காணப்படும் RSS Button இனை click செய்தால் அது feedburner பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
சிலவேளை XML feed ஆக இருப்பின் நேரடியாக தளத்தின் அனைத்து பதிவுகளும் XML வடிவில் தோன்றும். எனது வலைப்பூவின் feedburner பக்கம் இவ்வாறு காட்சியளிக்கும்.
அங்கு address bar இல் காணப்படும் url இனை copy செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Feed Reader இடை முகப்பினை திறந்து அங்கு தென்படும் new button அல்லது F3 key இனை அழுத்தி அங்கு நீங்கள் ஏற்கனவே copy செய்த url இனை paste செய்யுங்கள். இது பெரும்பாலும் தானாகவே நிகழும். பின்னர் ok செய்யுங்கள்
இற்றைப்படுத்தப்பட்டபின் உங்களால் பதிவுகளை உடனுக்குடன் பார்வையிட முடியும்.
http://www.cnet.com/4520-6022_1-5115040-1.html?tag=ftr
http://english.aljazeera.net/Services/Rss/?PostingId=2007731105943979989
http://www.bbc.co.uk/tamil/index.xml
http://feeds2.feedburner.com/islamkalvi
http://feeds.feedburner.com/blogspot/MKuf
மேலதிக இணைப்புகள்
RSS சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு
கொசுறு: “ஹி ஹி …. நாங்களும் எழுதுவமில்ல..” என்று தொடங்கி 100 வது பதிவும் வந்துவிட்டது. வழமை போன்று அன்பர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் வாடிக்கையாளர்கள் காமெண்ட்ஸ் அடிப்பவர்கள் பின்தொடர்பவர்கள் மெயில் அனுப்புபவர்கள் திட்டித்தீர்ப்பவர்கள் பயங்கரமாக விமர்சிப்பவர்கள் நலன்விரும்பிகள் போட்டோ எடுக்க கேமரா தருபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் அவரவர் அவரவரது பங்களிப்புகளை அதே நிலையில் பேணுமாறும் வேண்டிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
nanrikal undakuka
ReplyDelete