எந்திரன் - சில Jot Points…
பொதுவாக தென்னிந்திய சினிமாக்களில் எனக்கு ஆர்வம் குறைவு. இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் CD களிலோ அல்லது யாராவது Download செய்து தந்தால் பார்ப்பது அவ்வளவுதான். தியேட்டர் எல்லாம் போய் அழுவது கிடையாது. எந்திரன் வெளியாவதற்கு முன்பே இங்கு நம் நண்பர்கள் சிலருக்கு லேசாக எந்திரன் காய்ச்சல் பிடித்து விட்டது. வந்தபின் என்னமோ பெரியதோர் கடமை ஒன்றை நிறைவேற்றுவது போல் அலைந்து திரிந்து டிக்கட் எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு வந்தார்கள். போதாததற்கு எந்திரன் பார்த்துட்டீங்களா? நம்மிடம் ஒரு நக்கல் கேள்வி வேறு. இல்லை என்றால் அவர்களது முகத்தில் வரும் பிரகாசம் பார்க்கணுமே… அது சொல்லில் அடங்காது. நான் சொன்ன பதிலெல்லாம் நான் பார்க்காட்டி ரஜனி என்ன கோவிச்சு கொள்ளப் போறாரா? என்றுதான்.
கடந்த வாரம் நம்ம De Ultimate ஒரு லிங்க் அனுப்பி இருந்தாப்ல. ப்ரீயா இருந்தா ப்ரீயா பாரு எண்டு. அது ஒரு சீன தளம். ஒருவாறு தட்டுத்தடுமாறி Translate எல்லாம் செஞ்சி பார்க்க உக்கார்ந்தா Buffering… மனசு சொல்லிச்சு நாளை தியேட்டரில் போய் பார்க்கலாம் என்று. நண்பரை அழைத்தால் அவர் சொன்னார் சும்மா காச வேஸ்ட் பண்ணாம வேற ஏதாவது படம் பார் எண்டு கம்யூனிசம் எல்லாம் பேசினார். கடைசியா தனியாத்தான் போய் பார்த்தேன். இனி நம்ம பாயிண்டுக்கு வருவோம். Scinece Ficton என்பதால நாம தாராளமா விமர்சிக்கலாம்…
- எந்திரன் நல்ல படம்
- இயக்குனர் சங்கருக்கு தைரியம் அதிகம்தான் உண்மையில் அவரை நினைத்துதான் மிகவும் கவலைப்பட்டேன் எப்புடிடா மக்களுக்கு Processer ஐயும் memoryயையும் கொண்டு சேர்க்க போகிறார் என்று. மசாலா எண்டொரு சமாச்சாரம் இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் சாத்தியம் என்பதை நிரூபித்து விட்டார். அவருக்கு ஒரு சல்யூட். ஆனால் இயக்குனர் சங்கரின் ஸ்டைல் பார்த்தால் நிச்சயமாக அவரால் ஒரு Holywood படம் எடுக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அல்ல.
- Super Star: உண்மையாக இந்த படத்தில் நிறைய கஷ்டப்பட்டிருப்பார். நிறைய வேலை வாங்கப்பட்டிருப்பார். நிறைய கற்றிருப்பார். உண்மையில் ரஜனி வில்லனாகவே நடிக்கலாம். அவ்வளவு அருமை. சும்மா விடலைப்பசங்கள் எல்லாம் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பாத்திரம் ஏற்று ரஜனி நடித்திருப்பது பெஸ்ட். நிஜ ரஜனி சண்டைக்கு பயந்து ஓடும் காட்சி சூப்பர். அவர் சூப்பர் ஸ்டார்தான். வசீ என்று கூப்பிட்டு ஆடு கத்தி காட்டுவார் சூப்பர் சீன் சூப்பர் ஸ்டாரா இப்படியெல்லாம்???
- ஐஸ்வர்யா பச்சன் : ஆண்டி உங்களை பத்தி சொல்ல என்ன இருக்கு? . ஜீன்ஸ் பட காலங்களில் நம்ம கனவுல வந்து தொல்லை தந்தீங்க ஓகே. பட் இப்பவும் வரணும் எண்டா எப்புடி அண்டீ? . தமன்னாவும் அனுஷ்காவும் கோவிச்சுக்க மாட்டாங்க??
- ARR : தல என்ன தல?? என்னத்த சொல்றது. முதல் முதலா பாட்டு பார்க்கும்போது ஒன்றுமே ஒட்டவில்ல. நேத்து கூட பஸ்சில் ஒரு வெங்காயம் ஒவ்வொரு பாட்டையும் மும்மூன்று முறை ரிபீட் செய்து வருது சூப்பர் சாங்ஸ். நமக்கு புடிச்சது காதல் அணுக்கள்.. அரிமா அரிமா… தியேட்டரில் உங்கள் இசைக்கு அந்த அகன்ற DTS திரை போதாது என்று என் மனம் சொல்லியது. நீங்க Music ல மட்டும்தான் உங்க Status இனை சொல்வீங்களோ?
- பிரமாண்டங்களின் கூட்டணி. எதிர்ப்பார்ப்பு. தரமான ஒலிப்பதிவு, அழகான ஒளிப்பதிவு, எல்லாமே… மொத்தத்தில் தமிழில் வெளியான ஒரு நேர்த்தியான Technical படைப்பு எந்திரன்.
சரி இனி Jot களுக்கு வருவோம்…
எந்திரன் பார்க்கையில் முழுமையாக என்னால் நினைவுகூரப்பட்ட நபர் Isaac Asimov மற்றும் அவரது விஞ்ஞான கட்டுக்கதைகள். அவர் கதைகள் இல்லாமல் எந்திரன் என்கிற படம் இல்லை. குறிப்பாக அவரது I , Robot நாவலும் Will Smith நடித்த அதன் சினிமா வடிவமும். அவரது பெயர் படத்தில் ஒரு இடத்தில் வந்தது எனக்கு சந்தோசம். நிச்சயமாக சங்கர் I , Robot படத்தை 25 தடவைக்கு மேலாகவாவது பார்த்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அல்லது படத்தில் சம்பந்தப்பட்ட யாராவது I, Robot இன் தீவிர ரசிகராக இருக்கக்கூடும். நானே 50 தடவைகளுக்கு மேல் அந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
I , Robot இல் வரும் இந்த காட்சி மாதிரி எந்திரனில் வருகிறது சில மசாலைகளுடன். மற்றும் சிட்டி கோபப்படும் காட்சி. இன்னும் பல கூர்ந்து அவதானித்தால் புரியும். I, Robot பார்க்காதவர்கள் கட்டாயம் எந்திரன் சூட்டோடு சூடாய் பார்த்து விடுங்கள். என்ன கொஞ்சம் விளங்கினா தேவல…
எந்திரன் படத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் லொஜிக் பிழைகள். இது சம்பந்தமாக பேச நான் விரும்பவில்லை ஏனெனில் தமிழ் சினிமாவில் இது தவிர்க்க முடியாதது இவை இல்லாவிட்டால் நம்மாலும் தமிழ் சினிமாக்களை ரசிக்க முடியாது.
முக்கியமான பாயிண்ட்…
சன்டிவி பலபேர் வயித்தில் அடித்து விட்டதாக பலபேர் கொதித்துப் போய் இருக்கிறார்கள் அதாவது வியாபாரத்தில் தான் ஏகாதிபத்தியத்தை காட்டியிருக்கிரார்களாம்.
நிறைய பேர் ரோபோட் சம்பந்தமாக படிக்க தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் காலேஜ் இல் ரெண்டு மூணு கேஸ் I am robot எண்டு சொல்லிக்கொண்டு திரியிதுகள்.
நேற்று ஊரிலுள்ள ஒரு சகோதரரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவரை சுகம் விசாரித்தேன். மிக விரக்தியில் பேசினார். ஏன் எனக்கேட்டபோது காதல் அணுக்கள் என்று சிம்பிள் ஆக சொன்னார்.
பிறகு என் காதலை பற்றி கேட்டார். எனக்கு அது தெரியாது எங்காவது கோஸ் இருந்தால் சொல்லுங்க முடிப்போம் என்றேன்.
சிரித்த அவர் “இப்ப ரோபோட்களுக்கெல்லாம் காதல் வருது உங்களுக்கு மட்டும் ஏன் வருவதில்லை” என்று கேட்டார் .எந்திரன் பல பேரை இப்படியெல்லாம் கொடூரமாக பேச வைக்கிறது.
நான் சொன்னேன் “வசீகரன் பெண் ரோபோட் ஒன்று செய்யாதவரை சிட்டிக்கு இரும்பிலே இருதயம் முளைப்பதில் அதிசயம் இல்லை. பெண் ரோபோட் ஒன்றிருந்தால் சிட்டி வாலை சுருட்டிக்கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று நாடு கடந்துபோய் Blog எழுதிக்கொண்டு இருந்திருக்கும் என்னைப்போல் ” என்று..
பிறகு பார்ட் 4 வரை எந்திரன் நீண்டு போயிருக்கும் என்றார். வந்தாலும் வரலாம் பார்ப்போம் என்றேன்.
இறுதியாக முக்கியமான கொசுறு: செயற்கை உயிரணுக்கள் உருவாகத்தெரிந்த சிட்டிக்கும் சிட்டியை உருவாக்கிய Dr. வசீகரனுக்கும் Battery க்கு மாற்று வழி சிந்திக்க தெரியவில்லை. ஒரு Smart machine க்கு ஒரு backup power source வைத்திருந்தால் இவ்வளவு குழப்பம் இரு தரப்புக்கும் வந்திருக்காது. இல்லாவிட்டால் நமது டீமை அழைத்திருந்தால் ஒரு Solar Power, Nuclear energy , Glucose Power இல்லாவிட்டால் ஒளித்தொகுப்பு மூலமாவது சிட்டிக்கு கரண்டு குடுத்திருப்பம். கதையே மாறியிருக்கும்.
மொத்தத்தில் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு அலாதிப்படம் இந்த எந்திரன் .. மீண்டும் திரைவிமர்சனம் நிகழ்ச்சில சந்திக்கலாம்….
goog job.continue thala
ReplyDelete(u know I,ROBOT the filim)
Thanks Mohamed everybody know I,Robot is the film and I,Robot 2 on making process u can watch the film with your wife in 2012 lol..
ReplyDeletenalla thirai vimarsana seiytigal.....
ReplyDeleteagamothathil enthiran oru aangila padathin nillal endru sollalam endru irfan solgirirgal....aamava?....
anyway i like your comments....
Thanks Anony on 26/10/2010 11:33
ReplyDelete