Windows 7 One Year Anniversary

W7_Irfansky     கடந்த 22 ம் திகதியன்று Microsoft இன் புதிய இயங்கு தளமான Windows 7 தனது ஒரு வருட பூர்த்தியை கொண்டாடியது. இந்த ஒரு வருடத்தில் 240 மில்லியன் உரிமம் கொண்ட Windows 7 விற்கப்பட்டுள்ளதாக Microsoft பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. Microsoft இன் இயங்குதள விற்பனை வரலாற்றில் இதுவே மிக உயர்ந்த இயங்குதள விற்பனை என Microsoft சுட்டிக்காட்டுகிறது. கடந்த 90 நாட்களில் Windows 7 இன் விற்பனை வேகம் ஒரு செக்கனுக்கு 8.35 பிரதிகளாகும். 1.5 மில்லியன் மென்பொருட்கள் Windows 7 இல் இயங்குகின்றன.

இன்னும் சில தகவல்கள்…

ஒரு மாதத்தில்..

  • Windows 7 இன் Start Menu 14.1 பில்லியன் தடவைகள் திறக்கப்படுகிறது.
  • Aero Snap வசதி ஏறத்தாழ 151 மில்லியன் தடவைகள் பாவிக்கப்படுகின்றது.
  • Aero Shake வசதி 20.6 மில்லியன் தடவைகள் குலுக்கப்படுகின்றது.
  • Jumplist வசதி 339.1 மில்லியன் க்கு அதிகமாக பாவிக்கப்படுகின்றது.
  • 12643 வேறுபட்ட மென்பொருட்கள் Windows 7 Taskbar இல் ஒட்டப்படுகின்றன.

விண்டோஸ் 7 இன் முதலாவது சேவைப்பொதி (Service Pack 1) பரிசோதனை பதிப்பாக வெளியிடப்பட்டிருப்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

நன்றி: Yahoo செய்திகள்.

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME