Putrajaya Visit
எனக்கு மிக வேண்டிய சகோதரர் மலேசியா வந்திருந்தார். வந்தாலும் வந்தார் நம்ம எக்ஸாம் டைம் பார்த்து விசிட் அடிச்சார். இம்முறை சோதனை பெரும் சோதனையாக மாறிவிட்டது. இருப்பினும் நம்மூரிலிருந்து அதுவும் நமக்கு தெரிந்தவர்கள் வந்தால் எக்ஸாம் எல்லாம் சிம்பிளாக போய்விடும். அவரோடு சேர்ந்து Putrajaya செல்ல நேரிட்டது. வழமை போன்று நம் கூட வந்தவர்களை ப்ளாக் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.
Putrajaya மலேசியாவின் நிர்வாக நகரம் என அழைக்கப்படுகிறது. மலேசிய அரசுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிர்வாக அலுவலகங்களும் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள தெருவிளக்குகள் ஒவ்வொரு அலுவலகத்தையும் வேறுபடுத்துவதாக என்கூட வந்த சகோதரர் சொன்னார் உண்மையில் எனக்கு தெரியாது. ஆனால் நிர்வாகத்துக்காக திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இங்கு உள்ள ஆறும் கூட.
படத்திலுள்ள பள்ளிவாயல் (உட்புறம்) சுற்றிவர சிறிய குளம் போன்ற அமைப்பை கொண்டது. சுற்றிவர சுவர் இல்லாததால் குளிர்ந்த காற்று இதமாக இருந்தது பிளஸ் அங்கு A/C மற்றும் மின்விசிறிகள் இல்லை.
Sallam,
ReplyDeleteDear irfan.
pls.add our web in you are blog
www.kky30100.wordpress.com
Vasslam.
Kattankudy web admin.