Dropbox
சில வேளைகளில் எமது வீட்டுக்கணினியில் இருந்து அலுவலக கணினிக்கு அல்லது நண்பர்களின் கணினிக்கு கோப்புகளை கொண்டு செல்ல வேண்டி ஏற்படும். இதற்கு சாதாரணமாக pendrive களை நம்மில் பலர் பாவிப்போம் என்னைப்போன்றோர் pendrive இல் கோப்பினை நகல் எடுத்துவிட்டு pendrive இனை வீட்டில் விட்டபடியே அலுவலகத்திற்கு வந்து பல் இளித்துக் கொண்டிருப்போம். இதிலும் கொஞ்சம் மேலாக சிலபேர் தாங்கள் பாவிக்கும் கணினிகளுக்கெல்லாம் தங்கள் pendrive இனை பரிசாக வழங்கிக் கொண்டு கைவீசியபடி வீடுபோய் சேர்வார்கள். பிறகென்ன.. அவ்வளவு கோப்புகளும் அம்பேல்தான். நாம் செல்லும் இடமெல்லாம் நம் கோப்புகளை எடுக்க முடிந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும் என்று அலசியதில் முதலாவது கிடைத்தது ADrive ,ஆனால் இதில் நிபந்தனைகள் அதிகம் என்பதால் Windows Live SkyDrive இனை பாவித்துக் கொண்டிருந்தேன். இதில் 25GB சேமிப்பு நினைவகம் நமக்கு கிடைக்கிறது. இருப்பினும் ஒரே தடவையில் 50 MB வரையான கோப்புகளையே upload செய்ய முடிகிறது. மற்றும் skydrive இல் எனக்கு பிடிக்காத சில சமாச்சாரங்கள் உள்ளன.எனது வலைப்பூவில் download கோப்புகள் அனைத்தும் எனது skydrive இல் உள்ளன என்பது Hacker களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
கோப்புகளை செல்லுமிடங்களில் எல்லாம் எடுத்து பயன்படுத்தக்கூடிய வகையில் சமீப கால தேடலில் கிடைத்த மிக அருமையான மென்பொருள் வலைமென்பொ (web apps) Dropbox ஆகும்.
படத்தில் உள்ளவாறு எமது கோப்புகளை ஒரே நேரத்தில் Desktop , Laptop, Smartphones என synchronize செய்து கொள்ள முடிகிறது.
Mac, Windows, Linux என பல்வேறுபட்ட இயங்குதளங்களில் ஒத்திசைவாக்கப்பட்ட Cross Platform வசதி என்பதும் இதன் சிறப்பம்சம்.
மற்றும் கோப்புகளை இணையத்திலோ அல்லது நண்பர்களிடத்திலோ பகிர்ந்து கொள்ளும் வசதி நம்மைப் போன்றவர்களுக்கு போனஸ் வசதி. இனி நமது வலைப்பூ Dropbox சேவையினை ஆதரிக்கும்.
வீட்டிலிருந்து செல்லும் போது எமது கோப்புகளை Dropbox folder இனுள் இழுத்துவிட (Drag and drop) வேண்டியதுதான். பிறகு உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது கோப்புகள் பாவனைக்கு தயார்!!!
எமது பாவனைக்கு ஏற்றது போல் வெவ்வேறு நினைவகம் கொண்ட Package களை உபயோகிக்கலாம். 2GB வரையிலாலான நினைவகம் இலவசமாக வழங்கப்படுகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை பதிவு செய்து மென்பொருளை நமது கணினிகளில் நிறுவ வேண்டியதுதான்.
இங்கு பதிவிறக்கலாம்.. Download Dropbox .
கொசுறு: எனது iPod இல் Dropbox இனை access செய்ய முடிவதுடன் PDF மற்றும் word கோப்புகளை படிக்கவும் முடிகிறது. Dropbox Save the day!!!
Comments
Post a Comment