Nasi Lemak
மலேசியாவின் பலவகையான உணவு வகைகளில் மிக இலகுவாகவும் மலிவாகவும் “உண்கிறோம்” என்கிற உணர்வுடனும் உண்ணக்கூடிய பல வகையான சமாச்சாரங்களின் சேர்வையே இந்த Nasi Lemak.சோறு, நெய்த்தோலி, கறி, வெள்ளரிக்காய்த் துண்டுகள், முட்டை என பல வேரைட்டிகள் அசத்தும். விலை சாதாரணமாக RM 1. நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு அருகில் கிடைப்பதால் எனக்கும் சப்ரிக்கும் இது விரைவு காலை உணவு. இதிலும் வசதிக்கேற்ப பல Plug-inகள் Addon கள் கிடைக்கின்றன கோழி, ஆடு, மாடு, முட்டைப்பொரியல் என்று இன்னும் பல. எனக்கு வழமையில் Biasa (Normal) தான். இது விற்கும் நபர்களிடம் பேசத்தொடங்கித்தான் மலாய் மொழி பழகினோம் என்பது கொசுறு. திடீர் என என்னடா சாப்பாடு சமாச்சாரங்கள் வருகின்றன என தோன்றுகிறதா? ஒன்றுமில்லை நமக்கு பிடித்த ஏதாவது ஒரு பெயரில் சம்பவங்களை வம்பளப்பதற்கு பதிவர்கள் உபயோகிக்கும் முறைதான் இது. புரியாவிட்டால் பின்னாடி புரியும். “சரி அத நீங்க ஏன் செய்யிறீங்க?” என்று யாருக்காவது கேள்வி எழுந்தால் “வேறு ஒண்டுமில்ல சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல” என்கிற கவலைதான். எல்லாம் நாம இஷ்டப்பட்டா செய்யிறம் ? அதுவா நடக்குது…
சரி விசயத்துக்கு வருவம்…
“மரணங்களால் மட்டுமே…” என்று தலைப்பிட்டு நான் எழுதிய தாவியை* (பார்க்க http://irfansky.blogspot.com/2010/10/blog-post.html) படித்த பல நண்பர்கள் பலவாறாக என்னை கேள்வி கேட்டும் விமர்சித்தும் துளைத்து எடுத்துவிட்டார்கள். இதில் நல்ல கமெண்ட்கள் எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்… பட் உங்க ரசனைகளை சரிபார்ப்பது கொஞ்சம் நல்லது!!!
“உனக்கேண்டா இந்த வேலை..வேலையப்பாருடா..” இது ஒரு அணியினர்… “என்ன வேலைடா?” என்று கேட்டால் “கவிதை எழுதுறதுதான்" என்கிறார்கள்… என்ன கொடுமை சூர்யா இது… நமக்கும் அதுக்கும் வெகுதூரம் நண்பர்களே… அதுக்கு எத்தனையோ பஞ்சாயத்துகள்,அரசுகள் சிற்றரசுகள்,பேரரசுகள்,தமிழ் அகராதி மனனமிடுபவர்கள்(அவங்களுக்கு மட்டுமே புரியும் அவங்க என்ன எழுதுறாங்க எண்டு) அதையும்மீறி இந்த “லவ் பண்ணித் திரியிற" ஒரு கூட்டமே இருக்கே.. அவை பாக்குற வேலை இந்த கவிதை எழுதுற எல்லாம்.. சார் நான் எழுதினது அதுவல்ல. கவிதைக்கும் நான் எழுதியதுக்கும் வேணுமெண்டா சில தாவிகளும்(Enter Keys) சில குத்துகளும் (அதாங்க முற்றுப்புள்ளி மூணு மூணா கவிதைகளில் இருக்குமே)பொது இயல்பு இருக்கலாம்..
“மச்சான் எந்த நன்பேண்டா உனக்கு அதில் அட்வைஸ் சொன்னவன்?" இதில் அவர்கள் கொலம்பஸ் வேலை பார்த்து எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் பெயரை suggest வேற பண்றாங்க.. அவனுக்கு தெரிஞ்சா செருப்பு பிஞ்சிடும்…
இன்னொருவர் “அவள்" கதாபாத்திரத்தை guess செய்து 3 பேர்களை கண்டுபிடித்தார்.. இது மகா கொடுமை.. நம்மள விவகாரத்தில் மாட்டி விடுற வேலை இது..
இதில் ஒருவர் படித்து விட்டு தேம்பி தேம்பி அழுததாகவும் என்னிடம் சொன்னார்.. “எதற்கு அழுதாய்?” என்று கேட்டு பதிலுக்கு அவர் “உண்ட கொடும தாங்காமத்தான்" என்று சொல்லிடுவாரோ என்று பயந்து நான் அப்படி கேட்கவில்லை..
இன்னொருவருக்கு மகா மகிழ்ச்சியாம்.. ஏன் எண்டா எனக்கு “லவ் பெயிலியராம்” அது அவருக்கு மகிழ்ச்சியாம்… நேரடியாகவே சொன்னார். இதிலென்ன உனக்கு சந்தோசம் என்று கேட்டா… “நீ மட்டும் எப்புடி பெரிய பருப்பு மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கிற..அதான்..” எண்டார். இதுக்கு என்ன சொல்ற என்று எனக்கேண்டா ஒண்டும தோணல…
இதில நம்மளோட கல்லூரில குப்ப கொட்டுற நம் நெருங்கிய “டேக்கினிக்கள் நண்பர்" சொன்னது கேட்டு நான் அசந்து போனேன்.. என்னை Nasi Lemak எழுத தூண்டியவரும் அவர்தான்…
அவர் சொன்னது இதுதான்… “Hard Disk இலிருந்து Data வை அழிப்பது மாதிரித்தான் காதலை மறப்பதும்" என்றார்…
“அப்ப right Click பண்ணி Delete குடுத்தா அழிஞ்சிடுமா? Recycle Bin ல இருக்காது?” என்று கேட்டேன்…
“நீ Shift + Delete பாவிக்கலாம்… “என்றார்
“நீ ஒரு புத்திசாலி… என்னவோ சொல்றாய் எண்டு பாத்தா.. லூசு மாதிரி சொல்றாய்.. அதுக்குத்தான் நிறைய software தான் இருக்கே திருப்பி Recover பண்ணிடுவாங்களே?” என்றேன்…
“அடேய் முட்டாள் இலங்கையனே!! “Hard Disk இலிருந்து Data வை அழிப்பது மாதிரித்தான் காதலை மறப்பதும்" என்று நான் சொன்னது உனக்கு சரியாக புரியவில்லை” என்றார்.
“சத்தியமாக புரியலடா" என்றேன்…
“Hard Disk இலிருக்கும் DATA வை ஆக்கவோ அழிக்கவோ முடியாது பட் ஒரு DATA வை இன்னொரு DATA வாக மாற்ற முடியும்" என்றார்..
மீண்டும் தலையசைத்தேன்…
“நண்பனே!! Heart இல் இருக்கும் காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது பட் அந்த காதலை இன்னொரு காதல் Overwrite பண்ணிடும்" என்றார்..
……….அசந்து போனேன் நான்!!!
“எப்புடிடா இப்படியெல்லாம் யோசிக்கிறாய்” என்றேன்… “இது தெரியாம நம்ம பயலுக Dubaiக்கு நாலஞ்சு தடவ டிக்கட் எடுத்துட்டாங்கப்பா” என்றேன் வடிவேல் style யில்…
“இந்த வழிய நீயும் பாவிக்கலாம் சும்மா போக்கத்தவன்ட போய் அட்வைஸ் கேட்க தேவயுமில்ல பகிரத்தேவையுமில்ல” எண்டார்.
“மஸ்ஸுனா மார்ரீங்களா? அது என்னை குறிப்பிடும் தாவியே அல்ல… என் அன்பு நண்பனுக்காக அவன் நினைவாக எழுதியது… நமக்கு இந்த Love மற்றும் இன்னபிற பீலிங்க்ஸ் எல்லாம் Heart Disk இல் save பண்ற பழக்கமே இல்ல.. எல்லாம் RAM இல் தான்… நாமெல்லாம் Auto garbage collection enabled மனத்தைக் கொண்டவர்கள் தவிரவும் கரண்டு போய் வந்தாலே போதும். நாம பழைய நிலைக்கு வந்துடுவம். பிறகு தேடினாலும் என்னில் இந்த காதல் கருமாந்திரம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது” என்று பதிலுக்கு ஒரு போடு போட்டேன்..
இது அவருக்கு மட்டுமல்ல என் blog ஐ அடியாளமே தெரியாம விசிட் அடிப்பவர்களுக்கும்… follower ஆகாமலே நம்மள follow பண்ணுபவர்களுக்கும் குதர்க்கமாக யோசிச்சு நம்மளை மாட்டிவிடும் ஆசாமிகளுக்கும் கொடுக்கும் Nasi Lemak dan Ayam தான் இது… மீண்டும் இன்னொரு Nasi Lemak இல் சந்திப்போம்…
Comments
Post a Comment