Nasi Lemak–Farewell 2010

           என்ன இர்பான் ப்ளாக் பக்கம் ஆளையே காணல?? நம்ம நண்பர் கேட்டார்.. என்ன செய்வது வேலை அதிகம் . வாழ்வில் நேரம் என்பது நமக்கு கிடைக்கவே கிடைக்கப் போவதில்லை.  வேலைகளை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டாலேயொழிய. இன்றும் பிளாக் பக்கம் வரும் எண்ணம் இருக்கவில்லை. திடீரென வந்து விழுந்தது இன்றைய விடுமுறை.  கேள்விப்பட்டளவில் மலேசிய Football அணியினர் ஏதோவோர் போட்டியில் வெற்றி பெற்றார்களாம். நமக்கு விபரம் தேவையில்லை. விடுமுறை நாள்தான் முக்கியம். இந்த விடயத்தை நண்பரிடம் பேசும்போது சொன்னேன்.  அவர் சொன்னார் “இந்த கட்டார் அரசாங்கம் உலகக்கிண்ண போட்டி நடத்தும் வாய்ப்பு கிடச்சும் ஒரு நாள் கூட லீவு தரலை” என்று கறுவினார்.

இன்றைய விடுமுறை நாளை இந்த நிமிடம் வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன் போல. சப்ரி எனக்குத் தெரியாமல் Nasi Lemak பொதியொன்ருடன் அலுவலகம் செல்வது தெரிந்தது.. இந்த Nasi Lemak 2010 இனை வழியனுப்பும் விதமாக அமையட்டும்.

 

பாடசாலை காலங்களை கடந்த பிறகு புதுவருடங்கள் என்ற ஒரு விடயத்தில் பிடிப்பே இல்லாமல் போய்விட்டது. அப்போதெல்லாம் புது Bag, shoe, books, brownpaper, sticker, uniform புது வகுப்பு “கதிர மேசை அடுக்குற வேல"  இதிலெல்லாம் ஒரு பிடிப்பு இருந்தது. 2010 வந்ததும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை. ஆனால் என்னை அல்லது எனது சக வயதினரை பொறுத்தளவில் இந்த 2010 யின் முடிவு ஒரு தசாப்தத்தின் முடிவு. 2001 – 2010 காலப்பகுதிகள் எங்களது வாழ்வின் ஓட்டங்களை மிகவும் தீர்மானித்த ஒரு காலப்பகுதி. அடைவுகள், வெற்றிகள், தோல்விகள் , ஏமாற்றங்கள் , அவமானங்கள், ஆச்சரியங்கள் என்று சொந்த வாழ்வினை புடம் போடவைத்த காலப்பகுதி இது. இவையெல்லாம் சாத்தியமா? என்று நினைத்த விடயங்கள் மூக்கின் மேல் விரல் வைக்குமளவில் சாத்தியமாகிப்போன தசாப்தம் இது. உதாரணத்திற்கு இந்த Mobile Phone சமாச்சாரம்.. Coverage என்கிற விடயம் வர முன்னே கேம்ஸ் விளையாடலாம் என்று phone வாங்கி பின்னர் Radio,color screen, GPRS,MMS, 3G என்று ஆதிக்கமாய் போய் விட்ட காலம் windows98 கணினிக்கு Infra Red மூலம் போட்டோ transfer செய்ய நாங்கள் பட்ட பாடு இருக்கே.. ஒரு படம் எடுக்க வேண்டிய கதை அது... அதே போன்று இலங்கையில் இரத்த ஆறு நிறுத்தப் படுமா? என்ற ஆமை பறக்கும் முயற்சியை, பறத்தல் என்ன? பின்னோக்கி பறத்தலும் சாத்தியம் என்று செய்து காட்டிய தசாப்தம் இது.. (இலங்கையில் இரத்த ஆறு இப்போது இல்லை என்பதை எந்தத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு தற்போது தேவையாய் இருந்தது அது மட்டுமே)

 

இந்த தசாப்தத்தில் மிக அதிகமாக என்னை பாதித்த விடயம் நண்பர்களின் சிதறலே.. எண்ணி சில வருடங்களில் திசை தெரியாமல் ஆளுக்காள் தூக்கி வீசப்பட்டோம்.  சிங்கள மற்றும் ஆங்கில வகுப்புகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய நாங்கள், இன்று அரபு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கொரியன், மலாய்.. ஒரு படி மேலே போய் சீனம் மண்டரின் எல்லாம் பேசி அசத்திக் கொண்டிருக்கிறோம். மட்டுமன்றி கொள்கைகளில்(இது எங்களுக்குள் இருக்கும் மூட நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் பிடிவாதங்கள்… வேறு எதனையும் குறிப்பிடுபவை அல்ல ) நம்மை மிஞ்சிய சில நண்பர்கள் அடியோடு மாறிப்போன கதையும் இந்த தசாப்தத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நமது வெற்றிகளையும் தோல்விகளையும் சில நண்பர்களிடமே பகிர்வோம் அவர்கள் அருகில் இல்லாதது இந்த தசாப்தத்தின் துரதிஷ்டம்.  இனி வரும் நமது வாழ்வு எவ்வாறு அமையப் போகிறது என்பதை தீர்மானித்ததாலோ என்னவோ இந்த தசாப்தம் எம்மை பலதரப்பட்ட மனிதர்களை, மனங்களை சந்திக்க வைத்திருக்கிறது.  ஒரு தசாப்தம் இலகுவாக இருந்தால் அடுத்ததும் இலகுவாக இருக்கும் அல்லது இப்படி இருந்தால் மட்டுமே இப்படி இருக்கலாம் என்ற எனது மடமையை மாற்றிக் காட்டிய தசாப்தம் இது..

இந்த தசாப்தத்தில் நான் சந்தித்த ஆச்சரியம் நிறைந்த மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு இருக்க முடியும்?  ஏன் நம் வாழ்வில் இவர்களை சந்தித்தோம் ஆனால் இந்த தசாப்தத்தின் முடிவில் நமது வாழ்வின் தடங்களில் இந்த மனிதர்கள்  எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பது இப்போது புன்னகையுடன் மீட்டத் தோன்றுகிறது. இதில் எனது நண்பர்கள், ஆசிரியர்கள்,  ஏமாற்றுபவர்கள், காரியவாதிகள், நான் சந்தித்த வாழ்வில் பழுத்த அனுபவசாலிகள், என்றும் பாடம் கற்றுகொள்ள வேண்டிய குழந்தைகள் என்று எவ்வளவு ரகங்கள்…? இந்த ரகங்களில் தீங்கான ஒரு கூட்டம் இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவர்களுக்கும் சேர்த்து நன்றி சொல்லவே தோன்றுகிறது.

உள்ளத்தால் உடைந்து நொறுங்கிப்போய்  உலகத்திடம் இருந்து காணாமல் போய் , உள்ளமும் உடலும் வெவ்வேறு துருவங்களாக பயணித்துக் கொண்டிருந்த என்னை, தேடிப்பிடித்து கடந்த கால ஏமாற்றங்களை வெறும் நகைச்சுவைகளாக மட்டுமே உணரவைத்து அவற்றை நினைத்து அழும்வரை சிரிக்கவைத்து  என்னை மீண்டும் புதிய உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கைகளுடனும்  பயணிக்க வைத்து பின்  தொலைந்து போன ஒரு நபரை (வால் இல்லாமையால் நபர் என்று அழைப்பதே பொருத்தம்)  நன்றி சொல்ல தேடிக் கொண்டிருக்கிறேன்..

அந்த நபரை ஞாபகமூட்டும் சில வரிகள்…

If you hear a voice,
It the middle of the night,
Saying it'll be all right,
It will be me.

If you feel a hand,
Guiding you along,
When the path seems wrong,
It will be me.

There is no mountain that I can't climb,
For you I'd swim through the rivers of time,
As you go your way, and I go mine,
A light will shine, and It will be me.

If there is a key that goes to your heart,
A special part, it will be me.
If you need a friend, call out to the wind,
To hold you again, it will be me.

Oh, how the world seems so unfair,
Creating a love that cannot be shared,
As you go your way, and I go mine.
A light will shine And it will be me.

I see ever after,
There's a place for two,
In your tears and laughter,
I'll be there for you.

In the sun and the moon,
In the land and the sea,
Look all around you,
It will be me.

There is no mountain that I can't climb,
For you I'd swim through the rivers of time,
As you go your way, and I go mine,
A light will shine, and It will be me.

It will be me... it will be me.

Farewell Nasi Lemak தொடரும்…

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME