Nasi Lemak–Farewell 2010 Part 3
2001 – 2010 இடைப்பட்ட காலங்களில் தொழிநுட்ப வளர்ச்சி அதுவும் தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி அபாரமானது அதீதமானதுவும் கூட. ஒருபக்கம் அறிவு, தொடர்பாடல் விடயங்களில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் மறுபக்கம் கலாசார விழுமியங்களில் சிறிது தடம் புரள்வுகள் ஏற்பட்டிருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. தகவல் தொழிநுட்பம் கட்டுப்படுத்துதல் என்ற விதிகளை மிஞ்சி தன்னை வியாபித்து நிற்றல் என்பதுவும் இதற்க்கான முக்கிய காரணி.உதாரணமாக சமீபத்தில் பலநாடுகளின் மடியில் கைவைத்த Wikileaks ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 10 வருடங்களுக்கு முன்னுள்ள நபர்கள் தமக்குள்ளே பேசிக்கொள்ளும் ஒழுங்கும் இப்போது பேசிக்கொள்ளும் ஒழுங்கும் வித்தியாசம் இருப்பினும் சில விடயங்கள் அதாவது தொடரும் பரம்பரைகள் நம்மை விடவும் புத்திக் கூர்மையில் கூடுதலாக இருக்கும் என்பது தவிர்க்க முடியாதது. இங்கு இவை பேசப்படுவதன் காரணம் அடுத்த 10 வருடங்களில் உலகம் காணப்போகும் மாற்றங்கள் கற்பனைக்கு எட்டாதவை என்றே எனக்குத் தோன்றுகிறது..
2011 இல் தகவல் தொழிநுட்பம் அல்லது இணையம் சார் சேவைகள் எவ்வாறு நகரலாம் என்பது குறித்து சற்று அலசுவோம்.. இது ஒரு அலசலே அன்றி இப்படித்தான் இருக்கும் என்பதல்ல..
2011 இல் பொதுவாக பேசப்படும் நிறையவே எதிர்பார்க்கப்படும் விடயம் Mobile Computing. Laptop ஒன்ரை தூக்கிக் கொண்டு கழுதை மாதிரி சுத்திக் கொண்டிருக்கும் காலம் மலையேறப்போகிறது. இப்போது மடிக் கணினிகளுக்கு இணையாக இயங்கக்கூடிய Tablet PC களும் Smart Phone களும் சந்தையில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதில் Apple நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான iPad உம் அதனைத் தொடர்ந்து அதனை தழுவிவந்த தயாரிப்புகளும் குறிப்பாக Google இன் Android மென்பொருளுடன் வெளியாகும் அனைத்து வெளியீடுகளும் அசத்திக்கொண்டிருக்கின்றன. கணினிகளை தவிர்த்து மக்கள் விரும்பி பயன்படுத்தும் சாதனமாக Apple iPad இருப்பதாக படித்த ஞாபகம். ipad மற்றும் android வெளியீடுகள் வெறும் trailer தானாம். main picture இனித்தான் வரும் என்கிறார்கள்.
இதில் பெரும்பாலும் எதிர்பார்ப்பது….
4G ரக 24X7 இடையறா தொடர்பு… சும்மா லோலோலா ஸ்பீட் இல்ல.. 100Mb/s வாகனங்களிலும் 1Gb/s சாதாரண வேகமாகவும் இருக்குமாம். உங்க யாரிடமாவது Connexter 55Kb மோடம் driver இருந்தா எனக்கு அனுப்புங்கப்பா.. ஒரு தடவை பழைய கால இணைய சுகம் அனுபவிக்க ஆசையாக இருக்கு.
Smart touch Experience.. இது ஏற்கனவே Apple தயாரிப்புகளால் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது.
இவ்வகையான சாதனங்கள் start செய்வதற்கு சிறிது நேரமே எடுத்துக் கொள்ளும். Zero time booting என்று ஏதோ வரப்போகுதாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
அடுத்து Online Marketing , Add களில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதாவது இணையத்தில் விளம்பரம் செய்பவர்களின் எண்ணிக்கை மற்ற ஊடகங்களை விட அதிகரிக்கலாம்.இவை நமது அன்றாட நடவடிக்கைகளை விளம்பரங்கள் மூலம் ஆக்கிரமிக்கலாம். தனிமனித சுதந்திரம் தொடர்பான சிக்கல்கள் இங்குதான் ஆரம்பிக்கும்.

அடுத்த பெரிய எதிர்பார்ப்பு web apps எனப்படும் இணைய மென்பொருட்கள். ஏற்கனவே Google இதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. Google Docs, Gmail இதற்கான அழகிய உதாரணங்களாகும். இவ்வகையான web apps களின் முக்கிய பயன்கள் நமது மென்பொருள் இணைய வலையில் இருப்பதால் எவ்விடத்திலும் எக்கணினிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான web apps எல்லாவகையான Browser களையும் ஆதரிப்பதால் Windows, Mac, Linux என்று அலட்டிக் கொள்ளவில்லை. Virus problem , Data lost என்ற பேச்சுக்கும் இடமில்லை இதனை விடவும் இவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதால் எதிர் காலத்தில் பாரிய புரட்சிகளை ஏற்படுத்தக்கூடும்.
Google தனது Chrome OS இனை உத்தியோகபூர்வமாக வெளியிடலாம். இதுவும் பெரியதோர் மைல்கல்லாக அமையக்கூடும்.
Cloud Computing சாத்தியங்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும் உதாரணமாக Dropbox போன்ற கோப்புகளை மேகத்தில் சேமித்தல் வசதிகள்.
Microsoft Kinect எனும் கட்டுப்படுத்தி (Control Pad) அற்ற பாவனையாளரின் குரல் மற்றும் உடல் அசைவுகளை அடியாளம் காணும் XBox உடன் செயற்படும் சாதனத்தை வெளியிட்டிருந்தது. நம்ம Open Source கில்லாடிகள் இதற்கு பிரத்யேகமாக Driver எல்லாம் தயாரித்து இப்போது ஜமாய்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் நேரடி தொடுதல் அற்ற முறையில் கணினிகளை இயக்க முடிவதுடன் இன்னும் பல சாகசங்களை வரும் காலங்களில் நிகழ்த்த முடியும்.
மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையிலான போட்டி, வன்பொருட்களின் அதீத வருகை போன்றவை இன்னும் பல வியத்தகு மாற்றங்களை இந்த நூற்றாண்டில் கொண்டுவரலாம்.
intel இனது புதிய SSD வகை வன்தட்டு 30mm by 5mm அளவிலானது பின்னால் தெரிவது தற்போதைய மடிக் கணினி வன்தட்டு.
படத்தில் உள்ள processor, University of Glasgow ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்று கேட்டீர்களாயின் பெரிதாக ஒன்றுமில்லை. 1000 Core களை கொண்டிருக்கிறதாம். சாதாரண processor களை விட 20 மடங்கு வேகத்தில் செயட்படக்கூடியதாக உள்ளதாம். உங்கள் கணினி எத்தனை core 10,000??
2010 இலிருந்து விடை பெறுவோம்.. நாளை முதல் வேலை Nasi Lemak வாங்க வேண்டும்..
Comments
Post a Comment