windows experience index
மிக நீண்ட நாட்களின் பின்னர் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி… எங்கு தொலைந்தேன் என்பதை இன்னொரு Nasi Lemak யில் விலாவாரியாக ஆராய்வோம். பாவனையாளர்களுக்கு எப்பவுமே தொழிநுட்பம் பிடிப்பதில்லை. அவர்களுக்கு சிறப்பியல்புகள் மட்டுமே பிடிக்கின்றன. உதாரணமாக உங்களது கைத்தொலைபேசி Java Support உள்ளது என்று சொல்லிப்பாருங்களேன் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராது. பதிலாக உங்கள் கைத்தொலைபேசியில் Games விளையாடலாம் என்று சொன்னால் வாயைப்பிளப்பார்கள்.
கணினி வாங்கும்போது எல்லா பாவனையாளர்களும் தரமானதையே வாங்க விரும்புவார்கள். இருப்பினும் Processor, Intel, Pentium, Core, Duo , DDR, AMD, Celeron போன்ற வார்த்தைகள் பாவனையாளர்களை வறுத்தெடுக்கும். இதற்கென்றே தனியாக வகுப்புக்கு செல்ல நேரிடும். எனக்கு அடிக்கடி எனது நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்களால் அவர்கள் கணினி வாங்கும்போது சில அன்புத் தொல்லைகள் ஏற்படுவதுண்டு. ஒரு கணினி கொள்வனவு செய்கையில் அதனது Processor, RAM, VGA, Hard Disk போன்ற சில அடிப்படையான விடயங்களை ஆராய்வது நல்லது என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொன்றாக பார்ப்பதை விட இதையெல்லாம் கூட்டி கழித்து “இது நல்ல கணினி" என்று இலகுவாக சொன்னால் எப்படி இருக்கும்?. அதற்கான ஒரு கணித்தல் முறையே இந்த windows experience index.
இதனை அறிவதற்கு உங்களை கணினி Windows Vista அல்லது Windows 7 இனை இயங்கு தளமாக கொண்டிருத்தல் வேண்டும்.
முதலில் Start button இனை கிளிக் செய்து computer யில் வலது கிளிக் செய்து properties இனை select செய்யுங்கள். அல்லது
-> Control Panel –> System
அங்கு தோன்றும் system properties window வில் உங்கள் கணினிக்கான Windows experience index யினை அறியலாம்.
இங்கு தென்படும் 5.0 என்பதே உங்கள் கணினிக்கான Windows experience index ஆகும். இது உங்கள் கணினியின்
- Processor: Calculations per second
- Memory (RAM): Memory operations per second
- Graphics: Desktop performance for Aero
- Gaming graphics: 3D business and gaming graphics performance
- Primary hard drive: Disk data transfer rate
பொறுத்து வேறுபடும்.
இதன் வீச்சு 1 – 5.9 வரையானதாகும். அதாவது 1 குறைந்த வினைத்திறனையும் 5.9 உச்ச வினைத்திறனையும் கொண்டிருக்கும்.
பொதுவாக..
1 – 2 வகை சாதாரண செயற்பாடுகள் Microsoft Office, Internet
3 வகை Windows Aero வகையான Application களுக்கும் மற்றும் சாதாரண Multimedia வகை தேவைகளுக்கும்
4 < வகை உச்ச தேவைகளுக்கும் அதாவது Graphics , Animation, HD TV
ஏற்றது.
கொசுறு: கணினித் தெரிவினை பொறுத்தளவில் இம்முறை நம்பகத்தன்மையான முறையல்ல என்றாலும் பொதுவாக இதனையும் பயன்படுத்த முடியும். எனது கணினியின் Windows experience index இனை பார்த்தாலே உங்களுக்கு புரியும்..
மேலதிக தகவல்கள் இங்கே
பிந்திக் கிடைத்த தகவல் : இப்போது கணினிகள் 1.0 – 7.9 வரையான WEI களை கொண்டிருக்கின்றனவாம்.. எப்படியானாலும் எனது கணினி WEI ஒரு லோலோளா…உண்மையில் 3.0 க்கு மேல் தாண்டாது..
Comments
Post a Comment