இன்னொரு நட்சத்திரப் புன்னகை

full_moon

       சூரியன் தொலைந்தழிந்து போனதை நாளின் இறுதித் தொழுகையழைப்பு நினைவுபடுத்தியது. இறையின் முன்னால் பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றத் தவறுகிற குற்ற உணர்வும் சுமைகளுக்குள் தொலைந்துபோன சுயமும் பிரதிபலித்த கண்ணீர்த்துளிகளை குனிந்த தலை, நிலத்தில் விழுந்துவிடாதவாறு கச்சிதமாய் ஏந்திக் கொண்டிருந்தது.

      இறைவனே! உன்னொருவனின் உள்ளமையினாலேயே நாளையின் நம்பிக்கை இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. தொழுகை… உள்ளங்களை கழுவி ஆன்மாக்களை பரிசுத்தம் செய்கிறது. இங்கே… அதுவும் அங்க  ஒழுங்குச் சண்டையில் காணாமற்போயிருக்க வேண்டும்.

     தூதுவனின் வாகனம் “ஜலீலின் வளவில்" கொண்டுபோய்ச் சேர்க்கிறது. நீண்ட அவத்தைகளின் பின் தனிமை. ஊரில் அரிதாக கிடைக்கும் அலாதியான தனிமை. “ஜலீலின் வளவு" எங்கள் செல்லப் பெயர், ஊரின் கடற்கரையில்  அதிகமாக மக்கள் நாடாத Delta பகுதி அது. சுனாமிக்கும் தப்பித்த ஒற்றைத் தென்னை, ஊரின் open source அரசியல் தந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தை என்மீது அண்ட விடாமல் நிழல் தந்து கொண்டிருந்தது.  அன்று போரின் பெயரால் சாகடிக்கப்பட்ட மனிதர்கள் இன்று சமாதானத்தின் பெயரால் சித்திரவதை அனுபவிக்கிறார்கள். மக்கள் வயிற்றை தின்றவர்கள் வாகனங்களில் வயிறுகளையும் சேர்த்து மென்றுகொண்டிருக்கிறார்கள்.. துளைப்பதற்கு ஒரு துளி பெட்ரோல் போதும் போலிருக்கிறது. இங்கு தோண்டப்படும் பெற்றோலிய வளங்கள் “கிரீஸ்" செய்வதற்கே போதும் போன்றிருக்கிறது.

    யாருடனோ கோபம் கொண்டு முகம் சிவந்திருந்த பௌர்ணமி நிலவு என்னைக் கண்டதும் மேகங்களால் தன்னை இழுத்து மூடிக்கொண்டது. மூன்று வருடங்கள் கோலாலம்பூரின் ஒளியில் காணாமற் போயிருந்த நட்சத்திரங்கள் கடமை தவறாமல் என்னைப் பார்த்ததும் புன்னகைத்துக் கொள்கின்றன. “தொலைந்து போனவள்" புன்னகைக்கும் அர்த்தம் புரியாத காந்தர்வப் புன்னகைகள் அவை

ஏழைகளுக்கும் ஞானிகளுக்கும் தெரிந்து, வசதி படைத்தவனுக்கு தெரியாமலேயே போகும் அற்புதமான புன்னகைகள் அவை

ஆட்சியில் அமர்த்திவிட்ட தன் பிரதிநிதி, தன்னை பிரதிநிதித்துவப்படுத்தாமலேயே இருப்பதை நினைத்து பாமரத் தொண்டனின் அடிவயிற்றிலிருந்து வரும் ஏமாற்றப் புன்னகைகள் அவை

      மனதையும் சேர்த்து வருடிச் சென்ற மெல்லிய தென்றல் என் தவத்தைக் கலைத்து மூடியிருந்த கண்களை திறக்கச் செய்தது. நிலவு மீண்டும் உதித்திருந்தது.

மெல்லிய மஞ்சள் நிறத்தில்…

சற்று நீள்வட்டமாக…

என் மௌனம் கலைத்தது…

“ஏன் அமைதியாக இருக்கிறாய்…?  “அவள் நினைவோ…?” “

“இல்லை இல்லவே இல்லை இந்த உலகில் “அவள்"  என்று எவளும் இல்லை…”அவள்"  ஒரு கற்பனையில் சாத்தியம் ”  நிலவு…., புரியாமல் விழித்தது…

“பிறகென்ன பிரச்சினை..?”

“எங்கள் நாகரிகம்… வாழ்தலுக்கான போராட்டம்… இப்படியே போனால் டைனோசார்கள் போல் போய்விடுவோமோ என்ற பயம்.. எங்கள் எச்சங்களையும் மியூசியங்களில்தான் பார்க்க வேண்டுமோ என்ற பயம். சுயநலமற்ற அர்த்தமுள்ள பயம் அதுதான்..”

நிலவுக்கு இந்த உரையாடல் பிடிக்கவில்லை என்பதை அதன் செந்நிற மாறுதல் எனக்கு உணர்த்திற்று. அது காதல், தனிமை, அழகு, தவிப்புகளுடன் மட்டுமே பழக்கப்பட்டது.. அரசியல் மண் கட்டிகள் அதற்கு பிடிக்காதுதான். நமக்கு முன்னால் பூமியுடன் உறவாடியது அது… நம் அழிவையும் பார்க்கும் சந்தர்ப்பம் கொண்டது அது….

இருப்பினும் “சாதித்துக் காட்டிய நம் மூதாதைகளை பார்த்த சாட்சி” என்ற வகையிலேயே பகிர்ந்து கொண்டேன்…

மனிதனே! உன் இனத்தின் செயல்களே உன்னையும் என்னையும் அழிக்க போதுமானவை.

பொருளாதாரமும் அரசியலும் உங்களை பேய்பிடித்தாட்டுகின்றன.

பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் வளர்ப்புமுறை மற்றவைகளை அர்த்தமற்றதாக்குகின்றன.

தன் அன்றாட வாழ்கையின் தரத்தை அரசியல் ஆக்கிரமிப்பே தீர்மானிக்கிறது என்ற உண்மை அறியாமல் தேர்தலுக்கு மட்டுமே அரசியல் என்ற பாமரனின் நம்பிக்கையை மாற்றாதவரையில் எப்படி அரசியல் முதலைகளையும் அதன் வால்களையும் அகற்றல் கூடும்???

அறிவை தங்கள் பிரபல்யத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தும் அறிஞர்களையும், தன் சொந்த விருப்பு வெறுப்புகளை மக்கள் மீது திணிக்கும் தலைவர்களையும் “தலை" அற்ற “வர்" களையும் வைத்துக் கொண்டு அழிவையன்றி ஆக்கத்தை எதிபார்த்தல் தகும்???

நிலவுக்கும் உள்ள அங்கலாய்ப்பு என்னால் உணர முடிந்தது.. இருப்பினும் நான் மௌனம் கலைக்கவில்லை. மௌனம் கலைக்கப் போவதுமில்லை.

“நேர்மையான பொருத்தமான தலைவன்”  தான் அழிந்து தன் இனத்தை வாழ வைப்பவன்.. மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும் பொருத்தப்பாடு அல்ல..

“மனிதர்கள் ஒட்டகைகளை போன்றவர்கள் நூறில் ஒரு ஒட்டகம் கூட தலைமை தாங்கும் ஒட்டகமாக அமைவதில்லை"  உலக மனிதர்களின் அருட்கொடையின், ஒரு நேர்மையான தலைவனின் , எங்கள் முதல் பிரதிநிதியின் கருத்து அது.

சாதாரண ஒட்டகைக்கும் தலைமை ஒட்டகைக்கும் உள்ள நூறு வேறுபாடுகளில் சிலதை என் ஆசிரியர் சொல்ல விக்கித்து நின்றிருக்கிறேன் நான்.

மீண்டும் ஒரு தவம்…….

இம்முறை என் உயிர்த்தெழுந்த E250 சிணுங்கியது..

எங்கிருக்கிறாய்…?

கரக்கடையில்…

யாருடன்…?

தனிமையுடன்… பார்வைக்கெட்டியவரை யாருமில்லை..

பயமில்லை..?

என் ஊரில் இருக்கிறேன்…

உன் ஊரில் இருப்பதால்….?

ஒரு தைரியம்தான்… தவிரவும் எங்கள் ஊரில் கூட்டமாக இருப்பதில்தான் பிரச்சினையே இருக்கிறது.

சுனாமி அடித்தால்…?

முன்பெல்லாம் அந்த பயம் இருந்தது.. வாழ்வில் பிடிப்பு இருப்பவனுக்கே மரணத்தில் பயம் இருக்கும். ஒருநாள் நானும் இறந்துபோய் இருப்பேன்…

என்ன செய்கிறாய்…?

நிலவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்…

நிலவின் மொழி அறிந்தவனா நீ…?

மனிதர்களுக்கும் கணினிகளுக்கும்தான் மொழிகள் தேவை.. நிலவுக்கும், விண்மீன்களுக்கும், தென்றலுக்கும் தேவைப்படாதது அது…

வீட்டுக்குச் செல்…!

அரை மணியில்…

இல்லை பத்து நிமிடத்தில் முடிந்தால் இப்பவே..!

E250 மௌனித்தது…

 

நிலவு அமைதியாக காய்ந்து கொண்டிருந்தது…

வழமைபோன்று நட்சத்திரங்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன….

அது ஒரு மயானப் புன்னகை…

10 வருடங்களுக்கு முன்னால் இதே திகதியில் ஏதோவோர் தலைமையின் சுயநலத்தால் உயிர்நீத்த 3000 உயிர்களினதும் அந்த சம்பவத்தால் இந்த நிமிடம் வரையில் உடலாலும், உயிராலும், உள்ளங்களாலும்   அல்லல்படும் கோடான கோடி ஆன்மாக்களினதும் நினைவாக…

Comments

  1. நாகரீகம்கள் தோற்றுப்போயுள்ள ஒரு மனித நாகரீகத்தின் வழமைதான் இவை. இந்த ஊரும் ஊராரும் இரண்டு வகையான பூதங்களுக்குள் சிறைப்பட்டுள்ளர்கள். பணத்தை இறைவனை விட அதிகமாக நம்புவது இந்தப்பணம் உள்ளவர்கள் அடுத்தகட்ட தன் அரசியல் வாழ்விற்காக வேண்டி அரசியல் வாதிகளுடன் இணைந்து எம்மை அரசியல் அடிமைகளாக்கி அவர்களது தேவைகளை எம்மக்களது கருத்துகளாக வர்ணம் பூசிக்காட்டுவது.. இவைகள் மாறாத போது எம் தலை விதியும் மாறாது எம் மூதாதையர் தந்த நம்பிக்கை மாத்திரமே மிஞ்சும் எம்மரனத்திக்கு இடையில் இவைகளுக்கு எதிராக நம் போராடாத வரை.......... ஆனால் இந்த நிலாவோட பேசுறதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.,........

    ReplyDelete
  2. ரசூல்ஷா... நான் உளறியவைகளை ஓரிரு வரிகளுக்குள் அற்புதமாக தொகுத்து பின்னூட்டியதற்கு நன்றி...உயிரற்ற போன்ல மட்டும் பேசலாம் என்றால் நிலவுடன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?? சும்மா ஒரு அழகிய கற்பனைதான்..
    என் ஆக்கங்களில் சொல் வறட்சிகளையும் தாண்டி ஒரு செழுமையை பேணுவதற்கே இந்த நிலவுடன் பேசுவதெல்லாம்... மௌனங்களால் பேச முடியும் என்று நம்பினால் நிலவுடன் பேசுவதும் சாத்தியம்..

    ReplyDelete
  3. Nila vantha idangalil "Mathi" enru vanthirunthal aakkam innum thookkalaaka irunthirukkum - sister

    ReplyDelete
  4. "மதி" சிலவேளை எனது கருவை சிதைத்திருப்பாள்.ஆக்கம் வேறு எங்கோ பயணித்திருக்கும் சகோதரி.. நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கும் மாற்றுச் சிந்தனைக்கும்.. சிலவேளை "மதி" யும் வருவாள் காத்திருங்கள்..

    ReplyDelete
  5. really somthins new.i thought u know only human languages and out of that the binary to covers with computer but u know the language of moon and stars.
    nilawum natchaththirangalum nadu nisiyilum thaniththiduwazilley.wanam oru aatchip pedam endral ungal wakku yarukku???????????

    ReplyDelete
  6. Well, my vote always goes to the Sun..

    He is the gigantic creation I ever seen..

    sometimes my inspiration for punctuality and responsibility..

    மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்துப் போவதில்லை..
    நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக் கொள்கிறதே..
    சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆளேனோ..?

    ReplyDelete
  7. well great but.my vote is for stars 4 ever

    ReplyDelete
  8. ஒரு வருடத்தின் பின் "அயோக்கிய தனமான அரசியம்" பற்றிய ஆக்கத்தில் என்ன நிலா மதி என்ற கதையாடல்கள் நீள்கின்றது. சோதரிக்கும் எழுதியவருக்கும் ஒன்றைத்தான் சொல்ல முடியும். எல்லா இலக்கியங்களும் காலத்தின் கண்ணாடிகள். படைப்பாளி ஒருவன் அதையே தன் கதையின் உரமாக கருதுவான். எமதூரின் மாற பணம் ,அதிகாரம், செல்வாக்கு என்ற பிராணிகளை தன் தேவைக்கு போல் பயன்படுத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை ஏக்கம் தான் இந்த ஆக்கம்

    ReplyDelete
  9. ஒரு வருடத்தின் பின் "அயோக்கிய தனமான அரசியம்" பற்றிய ஆக்கத்தில் என்ன நிலா மதி என்ற கதையாடல்கள் நீள்கின்றது. சோதரிக்கும் எழுதியவருக்கும் ஒன்றைத்தான் சொல்ல முடியும். எல்லா இலக்கியங்களும் காலத்தின் கண்ணாடிகள். படைப்பாளி ஒருவன் அதையே தன் கதையின் உரமாக கருதுவான். எமதூரின் மாற பணம் ,அதிகாரம், செல்வாக்கு என்ற பிராணிகளை தன் தேவைக்கு போல் பயன்படுத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை ஏக்கம் தான் இந்த ஆக்கம்

    ReplyDelete
  10. ஒரு வருடத்தின் பின் அயோக்கிய தனமான அரசியம் பற்றிய ஆக்கத்தில் என்ன நிலா மதி என்ற கதையாடல்கள் நீள்கின்றது. சோதரிக்கும் எழுதியவருக்கும் ஒன்றைத்தான் சொல்ல முடியும். எல்லா இலக்கியங்களும் காலத்தின் கண்ணாடிகள். படைப்பாளி ஒருவன் அதையே தன் கதையின் உரமாக கருதுவான். எமதூரின் மாற பணம் ,அதிகாரம், செல்வாக்கு என்ற பிராணிகளை தன் தேவைக்கு போல் பயன்படுத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை ஏக்கம் தான் இந்த ஆக்கம்

    ReplyDelete
    Replies
    1. எழுதியவனுக்கு ஒரு கோணம் இருக்கும். பார்ப்பவர்களுக்கு பல கோணங்கள் இருக்கும். ரசனைகளைப் பொறுத்து அவரவர் பின்னூட்டங்களும் மாறுபடும். எனினும் உங்கள் கருத்துதான் என் சிந்தனையுடன் மிகவும் ஒட்டிப் பயணிக்கிறது. இங்கு "மதி" தேவை இல்லாத கான்செப்டு.

      Delete

Post a Comment

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்