Nasi Lemak – I am home. (Part 1)
ரமழான் பதிவுகள்
மூன்று வருடங்களின் பின்னர் ஊரில் முழுமையாக அனுபவிக்கக் கிடைத்ததே இவ்வருடத்து ரமழான் மாதம். வேலை, நோன்பு, இப்தார்கள், சிறுவர்களுக்கு பயிற்சிநெறி, கூடவே சுகயீனம் என ரமழான் வந்து போனதே தெரியவில்லை. மிக கவலையான விடயம் “ஸகாத்” , “ஸதகா" என்ற பெயரில் அலைக்கழிந்து திரியும் மனிதர்களும்… அலைக்கழிக்க வைக்கும் மனிதர்களும்…
“இன்று இரவு 11.00 மணிக்கு ஸகாத் வழங்கப்படும்" என்று அறிவித்தல் பலகையை ஓரிடத்தில் பார்க்கக் கிடைத்தது. அவ்வீட்டைச்சூழவும் மனிதர்களும் சைக்கிள்களும் என்று சுமார் கால் மணிநேரம் வீதி நெரிசலில் நிற்க வேண்டி ஏற்பட்டது..
“பாஸ் கொடுக்கணும் எண்டு முடிவெடுத்தா தேவையானவனை தேடிச்சென்று ரகசியமா கொடுங்க பாஸ். நல்ல நாளையில் ஏன் எல்லோரையும் சங்கடப்படுத்திறீங்க?”
******
பெருநாள் தொழுகை
முன்பெல்லாம் சிறிய அளவிலான மக்களையே கடற்கரை பெருநாள் தொழுகையில் காண முடியும். இப்போது Traffic Police வந்து வீதிநெரிசலை குறைக்குமளவிற்கு மக்கள் தொழுகைக்கு அணிதிரள்கின்றனர். பெருநாள் அன்று காலை தொழுகைக்காக தயாராவது சற்று சிரமமாக இருந்தாலும் எங்கள் சமூக ஒற்றுமைக்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஏற்பாட்டாளர்களுக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக.
******
Open Source அரசியல் FAQ
இன்னொரு நட்சத்திரப் புன்னகை யில் இடம்பெற்ற இந்த சொல்லாடல் ஏதோவோர் சலனத்தை நண்பர்களிடத்தில் தூண்டிவிட்டிருக்க வேண்டும்.. “அதென்னடா OS அரசியல்?? “
பெரிசா ஒண்டுமில்லை..
“அரசியலை ஒரு மட்டத்தார் மாத்திரம் வைத்துக் கொண்டு சீரழிக்காமல் பல்துறைசார் ஊர் ஆர்வலர்கள் பங்களித்து உருவாக்கியதே Open Source அரசியல்" - நான் வைத்த பெயர் தான்.. கோப்பி ரைட்ஸ் எல்லாம் இல்ல ப்ரீதான்…
நன்மைகள்
- source Free… யாரும் பயன்படுத்தலாம், யாரும் கொள்கையில் மாற்றம் செய்யலாம், யாரும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம், பங்களிப்பும் செய்யலாம். அப்ப Open Source தானுங்களே..??
- எல்லா விளைவுகளினதும் Source கள் வெளியிடப்படும். செலவுகள், வரவுகள், திட்ட வரைவுகள், எல்லாமே…( இது Closed Source அரசியலில் கிடயாது கண்ணா.. கிடையாது)
- குண்டர்கள், வால்களுக்கு முதலிடம் கொடுக்கத் தேவையில்லை.. திறமையான யாரும் பங்களிப்பு செய்யலாம், பயனும் அடையலாம்.
தீமைகள்
- அரசியலை வியாபாரமாக செய்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். சிறுதொழில், பெருந்தொழில், சிறு போகம், பெரும் போகம் எல்லாம் பெரிதும் பாதிக்கப்படும். அரசியல்சார் தனிநபர்கள், குடும்பங்கள், எதிர்காலத்தில் அரசியலில் இறங்க இருப்போருக்கு இது ஆப்பு…
- Open Source அரசியலுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்வரை அதன் விளைவுகளை காப்பாற்றுவது கடினம்.. விளைவுகள் கொளுத்தப்படலாம் அல்லது உடைக்கப்படலாம்.
முக்கியமான சிக்கல் என்னவெனில் Open Source அரசியல் பாமரர்களுக்கு மட்டுமல்ல..படித்த மட்டங்களுக்கு கூட இலகுவில் புரிவதில்லை. இதற்கு ஒருவித எதிர்ப்புணர்வும், அறியாமையும், புரையோடிப்போன பழக்கத்தை இலகுவில் மாற்றிக் கொள்ள முடியாமையுமே காரணம்.
ஒரு மேலதிக தகவலுக்காக நம்ம தூதுவரிடம் Open Source அரசியல் சம்பந்தமாக என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்..
“இப்ப யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம். தெரிவும் செய்யலாம். அது மக்கள் சுதந்திரம். ஆனால் நாங்கள் எலக்சன் கேட்டால் எங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் அது மக்களின் தலைவிதி. இதுதான் Open Source அரசியல்.”
இரத்தத்தை உறைய வைக்கும் பதிலிது.. வாழ்க ஊர் Open Source அரசியல்!!!
“Open Source அரசியலோ, Closed Source அரசியலோ இந்த மடுவத்த பாத்து கீத்து செஞ்சுபோடுங்கடா மெனேய்!!! Telecom ரோட்டால போக ஏலுதில்லடா வாப்பா!!!”
ஊருல உறப்பு கூட திங்குறதால இத்தோட Nasi Lemak தின்றத நிப்பாட்டுவம்.. புறகு பசிச்சா தொடருவம்…
Comments
Post a Comment