Popular posts from this blog
Hover Zoom
Google Chrome உலாவியை பலவிதமான பயனுள்ள extension களால் மெருகுபடுத்திக் கொள்ள முடியும் என்பது நாமறிந்ததே. அந்த வகையில் Google Chrome Browser இனை பயன்படுத்தும்போது இணையத்தளங்களில் உள்ள படங்களை click செய்து பார்ப்பதற்கு பதிலாக படத்தின் மேலே mouse arrow வினை hover செய்வதன் மூலம் அப்படத்தினை உருப்பெருக்கி பார்ப்பதற்கு Hover Zoom Extension உதவுகிறது. Hover Zoom இனை பயன்படுத்தி இணையத்தில் வலம்வரும்போது ஒரு சில Click களை எம்மால் சேமிக்க முடியும். Hover Zoom யினை எமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அதன் Setting களை மாற்றிக்கொள்ளவும் முடியும். Hover Zoom இனை இங்கு Download செய்யலாம்.
பாதுகாப்பாக அழிப்போம் – Eraser மூலம்
அண்மையில் Recovery மென்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. எமது அந்தரங்கமான கோப்புகளை(Files) நிரந்தரமாக நாமே கணினியில் இருந்தோ அல்லது தொலைபேசி நினைவகத்தில் இருந்தோ அழித்துவிட்டாலும் கூட அவை இவ்வகையான Recovery மென்பொருட்களால் மீட்டெடுக்க முடியும் என்பது குடும்பங்களுக்கிடையேயும் சமூக அளவிலும் தனிநபர் சங்கடங்களை தோற்றுவித்துவிடுகிறது. அன்றாட கணினி பாவனையில் Recovery மென்பொருட்கள் தவிர்க்க முடியாதவை. எமது கோப்புகள் தவறுதலாகவோ அல்லது கணினி சேதங்களின் போதோ எமது கோப்புகளை மீட்டுக்கொள்ள இவை பெரிதும் உதவுகின்றன. தனிநபர் அந்தரங்கம் சம்பந்தமாக போதிய அறிவோ அல்லது பொறுப்போ இல்லாத நபர்கள் இவ்வாறான மென்பொருட்கள் மூலம் பிரச்சினைகளை உண்டுபண்ணிவிட முடியும். பதின்மவயதுகளில் மற்றவர்களின் மென்பொருட்களை அல்லது கணினி விளையாட்டுகளை திருடுவதற்காக இவ்வகை மென்பொருட்களை உபயோகித்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. Recovery மென்பொருட்கள் எவ்வாறு தொழிட்படுகின்றன? பொதுவாக நாம் சேமிக்கும் கோப்புகள்(Files) அல்லது...
Comments
Post a Comment