அல்நாசர் புரோஸ்டேட் சிக்கன் ரெஸ்டாரன்ட்க்கு முன்னால் காரை பார்க் செய்துவிட்டு அல்-நாசரின் அழகிய நினைவுகளை அசைபோட்டவனாக கண்மூடி தியானித்திருந்தேன்... பீப் பீப்... விண்டோஸ் போன் தியானம் கலைத்து ஓய்ந்தது. “டியர் கஸ்டமர், அல்நாசர் இஸ்லாமிக் வங்கி தானியங்கி பணவழங்கியில் தாங்கள் பெற முயன்ற பணத்தொகை உங்கள் கணக்கில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. நன்றி” இப்பிடியொரு நோட்டிபிக்கேசன் தேவையா? மாதக்கடைசியின் வங்குரோத்து நிலை மனதில் தோன்றி மறைந்தது. அல்நாசர் முன்புபோல் இல்லை. முன்னைய கலகலப்பில்லை. அல்நாசர் மட்டுமல்ல முழுக் கட்டாரும் அப்படித்தான் இருக்கிறது. ஏலவே அனுமானித்துவிட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க தன்னை முடிந்த வரையில் மட்டுப்படுத்திக்கொண்டு மெல்லமே நகர்கிறது கட்டார். பெருநாள் நாட்களில் கூட ஷோப்பிங் மோல்கள் தூங்கி வழிந்தாலும் அல்நாசர் வீதி விழாக்கோலம் பூண்டிருக்கும். இப்போது ஒன்பது மணிக்கே வெறிச்சோடுகிறது. கட்டாரில் சாப்பாட்டுக் கடைகளுக்கு பெயர்போன இடம் அல்நா...
தமிழர் - முஸ்லிம் உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கசந்துவரத் தொடங்கிய காலம் அது. இருபது நாட்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். காத்தான்குடியைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான சகோதரர்கள் குருக்கள்மடப்பகுதியில் வியாபாரப்பொருட்களுடன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்கள். அன்றிலிருந்து ஒரு அச்சமான சூழல் எம்மூரைத் தொற்றிக் கொண்டிருந்தது. நான்கு நாளைக்கு முன்னமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்றைக்கெல்லாம் நாட்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவது ஒரு மோசமான அறிகுறி. புலிகளின் தாக்குதல்கள் எப்போதும் மின்சாரத் துண்டிப்பின் பின்னரே நிகழும். ஏதோவொரு அநியாயம் நிகழப்போவது பற்றி நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இரவில் தூங்காமல் விழித்திருப்போம். ஆனால் ஆட்கள் நடமாடும் இஷா தொழுகை நேரத்தில் இவ்வாறான கோரச் சம்பவம் ஒன்று நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சலாஹுத்தீன் ஹாபிசும் நானும் முதலாம் வகுப்புத் தோழர்கள். முதலாம் குறிச்சிப் பள்ளியில் 7:25 வரை இருந்துவிட்டு டீ குடிக்க வீட்டுக்குப் போகிறேன் என்று சலாஹுத்தீனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். சலாஹுத்தீன் இஷா வரைக்கும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந...
தமிழிலும் பல்வேறுபட்ட மொழிகளிலும் type செய்வதற்கு google IME பெரிதும் உதவுகிறது. உண்மையில் இது ஒரு பழைய சரக்கு. இருப்பினும் நம் நண்பர்கள் இன்னும் தமிழில் தட்டச்சு செய்வதற்கு சிரமப்படுவதாகவே தோன்றுகிறது. அதற்காக இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணமாகட்டும்.
என்னிடமும் இந்த புகைப்படங்கள் இருக்கின்றன. விரும்பியவர்கள் தொடர்புகொள்ளவும்.
ReplyDeleteஇல: 00, யாருமில்லாத வீதி, காத்தான்குடி-600001.
(வேறு கிளைகள் கிடையாது)
ஹி ஹி...
ReplyDelete