ஒரு குட்டிக் கதை

ஒரு மன்னன் தன் நாட்டினை மிகக் கொடூரமான முறையில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். மக்கள் அவனது ஆட்சியில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர். வயதாகிப்போன அந்த மன்னனுக்கு ஒரு ஆசை உண்டானது.  மரணத்தருவாயில் இருக்கும் போது தன் மகனை அழைத்துச் சொன்னான்…

“மகனே எனக்கோ வயதாகிவிட்டது ஆனால் என் மக்களை நான் எனது கொடுங்கோல் ஆட்சி மூலம் சிரமப்படுத்தி  விட்டேன். இருப்பினும் இந்த மக்கள் வாயால் என்னை புகழும் படியாக நீ ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறி இறந்து போனான்.

 

தன் தந்தையின் சொல்தவறாத மகனோ மக்கள் தன் தந்தையின் பெயரை மக்கள் வாயார வாழ்த்தும்படி செய்தான். எப்படி???

தந்தையின் ஆட்சியில் இருந்ததை விட தனது ஆட்சியில் கெடுபிடிகளை கூட்டினான்.

வரியை தாறுமாறாக அதிகரிக்கச் செய்தான்.

தனக்கு பிடிக்காதவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.

அபிவிருத்தியின் பெயரில் மக்களின் சொத்துகளை சூறையாடினான்.

இறுதியில் மக்கள் சொன்னார்கள்…

“நம்ம பழைய  ராசா எவ்வளவு நல்லவர், நமக்கு எவ்வளவு நல்லது செய்தார் இவனோ அவரின் பெயரை பழுதாக்கிக் கொண்டிருக்கிறானே!!”

ஊர் அரசியல் நிலைமைகள் பேசிக்கொண்டிருந்தபோது சகோதரர் முஹம்மத் சொன்ன கதை இது.. இதில் ஊருக்கும் நாட்டுக்கும் தேவையான  நிறைய படிப்பினைகள் இருப்பதாக தோன்றியது.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Comments

  1. Ha ha ha aaaa
    boss u'r great
    anyway HAPPY INDEPENDENCE DAY
    we'll see 65th I D ..........

    ReplyDelete
  2. Thanks for the comment and wishes Hamed! Hopefully everything will be changed. The story from u is awesome.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME