பாதுகாப்பாக அழிப்போம் – Eraser மூலம்

er       

அண்மையில் Recovery மென்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. எமது அந்தரங்கமான கோப்புகளை(Files) நிரந்தரமாக நாமே கணினியில் இருந்தோ அல்லது தொலைபேசி நினைவகத்தில் இருந்தோ அழித்துவிட்டாலும் கூட அவை இவ்வகையான Recovery மென்பொருட்களால் மீட்டெடுக்க முடியும் என்பது குடும்பங்களுக்கிடையேயும் சமூக அளவிலும் தனிநபர் சங்கடங்களை தோற்றுவித்துவிடுகிறது.

அன்றாட கணினி பாவனையில் Recovery மென்பொருட்கள் தவிர்க்க முடியாதவை. எமது கோப்புகள் தவறுதலாகவோ அல்லது கணினி சேதங்களின் போதோ எமது கோப்புகளை மீட்டுக்கொள்ள இவை பெரிதும் உதவுகின்றன. தனிநபர் அந்தரங்கம் சம்பந்தமாக போதிய அறிவோ அல்லது பொறுப்போ இல்லாத நபர்கள் இவ்வாறான மென்பொருட்கள் மூலம் பிரச்சினைகளை உண்டுபண்ணிவிட முடியும்.

பதின்மவயதுகளில் மற்றவர்களின் மென்பொருட்களை அல்லது கணினி விளையாட்டுகளை  திருடுவதற்காக இவ்வகை மென்பொருட்களை உபயோகித்த அனுபவம் எனக்கும் இருக்கிறது.

 

Recovery மென்பொருட்கள் எவ்வாறு தொழிட்படுகின்றன?

er2

 

பொதுவாக நாம் சேமிக்கும் கோப்புகள்(Files) அல்லது படங்கள் மின் அல்லது காந்த ஒழுங்கிலேயே நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. நாம் இவற்றினை அழிக்கும்போது இவற்றின் சுட்டிகள் (index / reference) மாத்திரமே அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட கோப்பினை எம்மால் பார்க்க முடியாவிட்டாலும்கூட இவை நினைவகத்தில் நிலைத்திருக்கும். மீண்டுமொரு கோப்பினை அதே இடத்தில் பதியும்போது மின்/காந்த ஒழுங்குகள் மாற்றப்பட்டு பழைய கோப்பு மேலெழுதப் (Overwrite) படுகிறது. எமது இயங்குதளம் (operating system) கோப்புகளை எழுந்தமானமாக நினைவகத்தில் பதிவதால் பழைய கோப்புகள் பெரும்பாலும் வன்தட்டில் நிலைத்திருக்க பெரும்பாலும் வாய்ப்புள்ளது. இந்த பலவீனத்தை பயன்படுத்தி Recovery மென்பொருட்கள் அழிக்கப்பட்ட கோப்புகளுக்கு Reference களை உருவாக்கி கோப்புகளை  மீட்டுகின்றன.

 

கோப்புகளை(Files) மீட்டெடுக்க முடியாதவாறு அழிப்பது எப்படி?

  Recovery மென்பொருட்களால் மீட்டெடுக்க முடியாதவாறு பாதுகாப்பாக கோப்புகளை அழிப்பதற்கு இணையத்தில் பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்தமானதும் பாவனைக்கு எளிமையானதும் திறந்த மூலமான உரிமம் கொண்டதுமான ஒரு மென்பொருள் Eraser ஆகும்.

 

window

  

உங்கள் கணினியில் Eraser மென்பொருளை Install செய்தபின்னர்

அழிக்க வேண்டிய file அல்லது folder யில் right click செய்து தோன்றும் menu வில் ERASER –> Erase என்பதை click செய்யுங்கள்.

 

pop

 

Eraser உங்களது கோப்பை அழிக்கத் தொடங்கிவிட்டதை பின்வருமாறு உறுதிசெய்து கொள்ளலாம்.

task

 

மேற்சொன்ன முறைமூலம் Eraser பயன்படுத்தி கோப்புகளை நிரந்தரமாக அழிக்க முடியும். Eraser யில் மேலும் பல வசதிகளும் அழித்தல் முறைகளும் காணப்படுகின்றன. Eraser User Guide மூலம் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Download Eraser Here

பின்வரும் Eraser க்கு ஒப்பான மென்பொருட்களையும் அலசிப்பார்க்க மறவாதீர்கள்.

  • TweakNow SecureDelete
  • Freeraser
  • Prevent Restore
  • SDelete

எமது இரகசிய கோப்புகளை பாதுகாக்கும் இன்னுமொரு நம்பகமான  வசதி உள்ளது.

மற்றுமோர் பதிவில் தொடர்வோம்…

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME