ஸஈத் இப்னு ஆமிர் சில அறிவுரைகள்...

mosque

ஸஈத் இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு ஸஹாபியாவார்கள். கலீபா உமர்(ரழி) அவர்களின் ஆட்சி ஆரம்பத்தில் அவர்கள் ஆற்றிய உபதேசம் மகத்தானது . இதோ அந்த உபதேசம் உங்கள் சிந்தனைக்கு...

  "மக்கள் விடயத்தில் நீ அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உமக்கு உபதேசிக்கிறேன். மேலும் அல்லாஹ்வின் விடயத்தில் மக்களுக்கு பயப்படாதே. உன்னுடைய சொல்லும் செயலும் முரணில்லாமல் இருக்கட்டும். சிறந்த வார்த்தை எதுவெனில் அதனை செயல் மூலம் உண்மைப்படுத்துவதாகும்."

   "உமரே! உமக்கு இறைவன் பொறுப்புச் சுமத்தியுள்ள அருகிலும் தூரத்திலுமுள்ள முஸ்லிம்களை நோக்கி உமது முகத்தை திருப்பு. நீ உனக்கும் உனது குடும்பத்துக்கும் விரும்பாதவற்றை அவர்களுக்கும் விரும்பாதே. சத்தியத்தை நோக்கியபோராட்டத்தில் ஈடுபடு. அல்லாஹ்வின் விடயத்தில் ஏசுபவனின் ஏச்சுக்கு பயப்படாதே."

               உமர் கேட்டார்: " ஸஈதே யாருக்குத்தான் அது முடியும்?"

    " உங்களைப்போன்று எவர் மீது அல்லாஹ் முஸ்லிம்களின் விவகாரங்களை பொறுப்புச்சாட்டுகிறானோ அவருக்கும் இறைவனுக்கும் இடையில் எந்தத்திரையுமில்லை." என்று பதில் கூறினார்.

       அப்போது உமர்(ரழி) அவர்கள், ஸஈத் (ரழி) அவர்களை தனக்கு உதவி செய்யும்படி அல்லது ஒரு அமைச்சர் பணியைச் செய்யும்படி வேண்டினார். " ஸஈதே, நாம் உம்மை ஹிம்ஸ் பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கிறோம்" எனக் கூறினார்.

     " உமரே! என்னை சோதிக்க வேண்டாம் என அல்லாஹ் மீது ஆணையிட்டு கேட்கிறேன்" என்று ஸஈத் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

      அப்போது உமர்(ரழி) அவர்கள் கோபமடைந்தார்கள். " ( உனக்கு கேடு உண்டாகட்டும்.) உனக்கு என்ன பீடித்தது. நீங்கள் கிலாபத்தை எனது கழுத்தில் சுமத்திவிட்டு ஓரமாகி விட்டீர்கள்... அல்லாஹ் மீது ஆணையாக நான் உன்னை விட மாட்டேன்..."

   பின்பு ஸஈத் ஹிம்ஸ் பிரதேசத்துக்கு கவர்னராக்கப்பட்டார்..

Source: http://alkavthar.blogspot.com/

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்