பேய்களுடன் வாழுதல்
அரபு நியம நேரம் நள்ளிரவு 12.30 மணி. புரியாணி கோர்னரில் மீன் சாப்பிட்ட கையோடு நம்ம பாஷையில் சொன்னால் பிலால் கையோடு Bat Cave நோக்கி தன்னந்தனியாக நடக்கிறேன். நேற்றைய பௌர்ணமியை நிலவு இன்னும் நினைவுபடுத்திக்கொண்டிருந்தது. வெள்ளிக்கிழம நாத்து, ஒரு கறுப்புப்பூனையும் வெள்ளைப்பூனையும் என் முன்னே ஒன்றையொன்று துரத்துகின்றன. நான் வேறு தலைப்பிள்ளை. போதாதா? குளிர்கால ஆரம்பக்காற்று என்னைத் தழுவிச் சென்றபோது… ஜலஜலஜல ஜலா…ஆம் பேய்கள், பிசாசுகள், பூதங்கள் எல்லாவற்றினதும் இனிய நினைவுகள். சிறுவயதில் நமது உயிரை உறையவைத்த பேய்கள் எல்லாம் இப்போது எங்கே? பேய்களுக்குக்கூட பயந்து போகாத அளவுக்கு நம்மனம் ஏன் இப்படிக் கல்லாய்க் கிடக்கிறது?
“எங்கப்பா அதுக்கெல்லாம் இப்ப டைம்? கொஞ்சம் நாம அசர்ர நேரம் பார்த்து புதிதாய் ஏதாச்சும் ரிலீஸ் ஆகி துலச்சிடுது. அப்புறம் அதில் தலையைப் போட்டு உடைக்க வேண்டியது. நேத்தும் iOS7 பூதம் கிளம்பி இருக்கு போல…”
பின்னேரம் உம்மா சொன்ன சமாச்சாரம் ஞாபகம் வந்தது.
வீடு கட்டுவதற்கு புதிதாக அத்திவாரம் போட்டோம். அதுல பாருங்க.. ஆசையாய் நட்டு வளர்த்த இரண்டு தென்னைமரங்களை தறிக்க வேண்டிய்தாப்போச்சு. மனசுக்கு கூட நல்லா இல்ல. சிறுவயதில் நான் வளராமலே இருக்க அவைகள் மட்டும் வளர்வதைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இப்போது அவைகள் இல்லை.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஆள்நடமாட்டம் குறைந்திருந்த பழைய வீடு எங்களது. பிறகென்ன? நம் ஊரில் பேய்களுக்கா பஞ்சம்? ஒரு பேய் வாடகை கூடத்தராமல் குடிகொண்டுவிட்டார் போலும். அடிக்கடி நம் தென்னைகளில் இளநீர் குடிக்கும் வழக்கம் கூட இருந்திருக்கும்போல. பேசாமல் தென்னையிலேயே குடிகொண்டுவிட்டார்.
இப்போது தென்னைகளை தறித்துவிடவும் வேலிக்கு மேலால் ஒரு டைவ் அடிச்சி நம் அல்லசலின் குசினி பிரிச்சுக்குள் குடிகொண்டுவிட்டாராம். நம் மக்கள் பிரிச்சை திறந்தால் ஆட்டோமெடிக்கா லைட்டு பத்துதாம், மூடினால் ஆப் ஆகிடுதாம். உடையுதாம் சாயுதாம்.. பாவம் சனம் என்ன செய்யும்? யாரோ ஒரு பரிசாரியிடம் தீர்வு கேட்டிருக்கிறார்கள் போலும்.. மனுஷன் விசயத்தை சந்திரமுகி ஜோதிகா ரேஞ்சுக்கு ஏத்திவிட்டாராம்..
இப்போது வழக்கு ஸ்கைப்பினூடாக நம்மிடத்தில் வந்திருக்கிறது. “லா” ஆபிசில் வேறு வேலை செய்கிறோமா? உம்மா, ராத்தா எண்டு ஒரு பட்டாளம்…
நம் வீட்டாருக்கு இப்படிச் சொன்னேன் “ரெண்டு தென்னம்பிள்ளைகளை வாங்கி நட்டு விடுங்கள் பேய் மீண்டும் வந்து ஏறிக்கொள்ளட்டும்”.
அப்புறம் நம்ம அல்லசல் “பேய்கள் தென்னைகளில் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் தென்னையில் கிளைகள் இருப்பதில்லை. பேய்களுக்கு தலைகீழாக தொங்குவதற்கு வசதியான ஆலை, வேப்பை, புளியமரம் போன்ற கிளைகள் உள்ள மரங்கள் தேவை. சூட்டுக்காக 2 நாளைக்கு பிரிச்சுக்குள் ஏறி இருந்திருப்பார். அவரே போய்டுவார்” என்று சொன்னேன். வேறு எதைச் சொல்வது? எத்தனையோ பேர் வந்து சொல்லியும் திருந்தாத சமூகமா நாம் சொல்லித் திருந்துவது?
அறியாமைப்பேயும் அதனோடு வாழும் சமூகமும் என்றும் நிலைத்திருக்கத்தான் செய்கிறது.
உங்களையெல்லாம் iOS7 ஆல கூட திருத்த ஏலாடா!!!
wow nice.......
ReplyDeleteபேயாருக்கு பிரிச்சு புடிச்சிருச்சு போல. இப்ப ஊரு பேயெல்லாம் ஈச்ச மரத்திலதானே வாழுதுகலாம். இந்த பேயாருக்கு நம்ம ஊருக்கு ஈச்ச மரம் வந்தது தெரியாதோ என்னவோ ?
ReplyDeleteபேயாருக்கு பிரிச்சு புடிச்சிருச்சு போல. இப்ப ஊரு பேயெல்லாம் ஈச்ச மரத்திலதானே வாழுதுகலாம். இந்த பேயாருக்கு நம்ம ஊருக்கு ஈச்ச மரம் வந்தது தெரியாதோ என்னவோ ?
ReplyDelete