இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும்-I

இணையப்பாவனை நல்லதா கெட்டதா என்ற கேள்விகளுக்கு அப்பால் சென்றால் இணையமானது தகவல்கள் எம்மை வந்தடையும் நேரத்தை கணிசமான அளவுக்கு குறித்த மிகப்பெரும் ஊடகம் எனலாம். இன்றைய உலகில் வளர்ந்த நாடுகளை குக்கிராமாங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திவிடுதல் என்பது இணையம் தவிர வேறொரு ஊடகத்தினால் சாத்தியப்படும் விடயமல்ல. இருப்பினும் இணையம் பிராந்திய ரீதியில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திப்பதென்பது தகவல் பெறும் தனிமனித உரிமைக்கு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. குறிப்பாக செய்தி வழங்கும் தளங்களை அரசாங்கங்கள் முடக்குவது சர்வசாதாரண விடயமாக மாறிவிட்ட இக்காலத்தில் இணையத்தை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதே இப்பத்தியின் நோக்கம்.

இதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டாலும் நான் அதிகம் பயன்படுத்தும் சில நம்பகத்தன்மை வாய்ந்த வழிமுறைகளை பார்ப்போம்.

TOR / TOR Browser

The Onion Router தடைசெய்யப்பட்ட இணையங்களைப் பார்ப்பது மாத்திரமன்றி நாம் என்ன பார்க்கிறோம், எங்கிருந்து பார்க்கிறோம் என்ற விடயங்களையும் மற்றவர்கள் அறியாவண்ணம் இரகசியப்படுத்தலில் TOR முன்னிலை வகிக்கிறது. TOR, பாவனையாளருக்கும் TOR சேவைக்கும் இடையில் பாதுகாப்பான குறுக்குப்பாதை ஒன்றை ஏற்படுத்துகிறது. பின்னர் நாம் பார்க்க விரும்பும் தளங்களை 3000க்கும் மேற்பட்ட குறுக்குச் சுற்றுகளினூடாக திசைவிக்கிறது. இப்பொறிமுறை இணையக்கண்காணிப்புகளில் இருந்து எம்மைப்பாதுகாக்கிறது. Wikileaks மற்றும் பிரதான பல ஊடக நிறுவனங்கள் TOR மூலமே இரகசியங்களைப் பரிமாறிக்கொள்கின்றன. முன்னாட்களில் TOR இனை நாமாகவே கணினியில் configure செய்ய வேண்டி இருந்தது. இப்போது Tor Browser Bundle வடிவில் கிடைப்பதால் மிக எளிதாக உபயோகிக்க முடிகிறது.

Tor Browser இனை எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம்.

https://www.torproject.org/projects/torbrowser.html.en

  • பின்னர் கீழே படத்தில் காட்டியவாறு Download செய்யப்பட்ட file இனை Double Click செய்து Extract செய்து கொள்ளுங்கள்

  • Extract செய்யப்பட்ட Tor Browser Folder உள்ளே காணப்படும் Start Tor Browser application இனை Double Click செய்ததும் படத்திலுள்ளவாறு Vidalia தோன்றும்

  • Tor முழுமையாக செயற்படத் தொடங்கியதும் Tor Browser Window காட்சியளிக்கும்.

  

TorBrowser, Tor உடன் நாம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை உறுதி செய்வதுடன் எமது IP முகவரி மாற்றப்பட்டிருப்பதை திரையில் காட்டும். இனி TorBrowser இனை பயன்படுத்தி நாம் வேண்டிய தளங்களில் உலவலாம்.

TorBrowser நன்மைகள்

  • நம்பகத்தன்மை 
  • இலவச சேவை
  • TorBrowser history, cookies போன்றவற்றை அனுமதிப்பதில்லை. TorBrowser யினை close செய்ததும் எமது Browsing history முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.
  • Portability - கணினியில் install செய்யத்தேவையில்லை. சாதாரண Pen Drive மூலமும் கொண்டு சென்று இயக்க முடிவதால் அலுவலக கணினிகளில் பயன்படுத்த ஏதுவாக அமையும்.

TorBrowser சிக்கல்கள்

  • Slow-வேகம் ஒப்பீட்டளவில் குறைவானது
  • Plug-in Disabled – TorBrowser plug-inகளை தம்முள்ளே தொழிற்பட அனுமதிப்பதில்லை. உதாரணமாக Flash Player Plug-in தொழிற்படாததால் Youtube வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல்கள் எழலாம்.
  • TorBrowser கணினி முழுவதற்குமான தீர்வு அல்ல. TorBrowser இயங்கும்போது எமது அடுத்த Browser களின் IP முகவரிகள் எமது உண்மையான முகவரிகளாகவே இருக்கும்.

Tor பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்.Tor அண்மையில் Hack செய்யப்பட்டது இங்கே குறிப்பிட வேண்டிய விடயம்.

இனிவரும் பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம்.

Comments

  1. Good post Irfan ! but, the current internet users prefer speed than safe/reliability. I like Tor, but it does not allow history, cookies. every time it requires user name and password to enter some website. if your post could be talked about speed browser, i will be enjoy.......

    ReplyDelete
    Replies
    1. Thanks for the feedback BG Team. TorBrowser is the prime solution for anonymity and internet censorship. Hopefully the next episode of this series will fulfill your anticipation. Stay tuned..

      Delete

Post a Comment

Popular posts from this blog

Flutter Handling Null Value in TextField

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

Does Fetching a Parent Collection in Firebase Firestore Return Its Entire Sub-Collection Tree?