இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - II

          சென்ற பதிவில் TorBroswer தொடர்பாக ஆராய்ந்தோம். TorBrowser இரு பணிகளில் முதன்மையானது. ஒன்று Tor யினூடாக நாம் இணையத்தை அணுகும்போது எமது இருப்பை இரகசியப்படுத்தல் (Anonymity) மற்றையது தணிக்கை செய்யப்பட்ட தளங்களை பார்வையிட உதவுதலுமாகும். TorBrowser anonymity யை உறுதிப்படுத்துவதால் அதனைப் பயன்படுத்தும்போது தளங்களை அணுகும் வேகம் மந்தமானதாக இருக்கும். இங்கு எமது முக்கிய நோக்கம் தணிக்கை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவது மட்டுமே என்றிருந்தால் PirateBrowser எமக்கான சிறந்த தீர்வாகும். இத்தொடரில் PirateBrowser பற்றி அலசுவோம்.

PirateBay தனது 10 வருட சேவை நிறைவையொட்டி இணைய தணிக்கைகளுக்கு எதிராக வெளியிட்ட தீர்வே PirateBrowser ஆகும். தோற்றத்திலும் செயற்பாட்டிலும் TorBrowser இனை ஒத்திருந்தாலும் PirateBrowser இணையப் பாவனையாளரின் இருப்பை இரகசியப்படுத்துவதில்லை (Anonymity) மாறாக தணிக்கை செய்யப்பட்ட தளங்களை பார்வையிடுவதை நோக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதன் வேகம் ஒப்பீட்டளவில் அதிகமாகும். மற்றும் Plug-in களை ஆதரிப்பதால் முழுமையான இணைய அனுபவத்தை வழங்குகிறது.

PirateBrowser தரவிறக்கம் செய்வதிலும் இயக்குவதிலும் TorBrowser யின் வழிமுறையையே கொண்டிருக்கிறது.

முதலில் இங்கு சென்று PirateBrowser இனை Download செய்து கொள்ளுங்கள்

Download Self Extracting Archive

பின்னர் Download செய்யப்பட்ட கோப்பினை Double click செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் Extract செய்து கொள்ளுங்கள். உங்கள் PenDrive யிலும் Extract செய்து கொள்ளலாம். இதனால் அலுவலகங்களில் அல்லது வேறு கணினிகளில் Browsing செய்ய இலகுவாக இருக்கும்.

image

பின்னர் Extract செய்யப்பட்ட Folder யில் காணப்படும் Start PirateBrowser.exe எனும் executable file இனை double click செய்ததும் திரையில் Vidalia செயற்படத் தொடங்கும்.

irfansky_private_browsing

image

Vidalia வெற்றிகரமாக Tor வலையமைப்புடன் தொடர்புகொண்டதனை அடுத்து PirateBrowser திரையில் தோன்றும்.

irfansky_private_browsing_piratebrowser

PirateBrowser யின் Bookmark Bar யில் நிறைய சுவாரசியமான விடயங்கள் உள்ளன. அவற்றை உங்கள் தேடலுக்காக விட்டு விடுகிறேன். இனிவரும் பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம்.

Comments

  1. நன்றி.... ஒப்பீட்டளவில் இது வேகம் கூடியது. இவைகளை Ubuntu OS ல் பாவிக்கும் போது இன்னும் வேகம் அதிகரிக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம். இன்னும் இது பற்றி மேலதிக தகவல்களை எழுத வேண்டும் என்பது வாசகர்களின் விருப்பம். மேலும், virtual private network பற்றி எழுதினால் இன்னும் இதனோடு தொடர்பு பட்டதாக இருக்கும் என்பது எனது கருத்து .......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Flutter Handling Null Value in TextField

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

Does Fetching a Parent Collection in Firebase Firestore Return Its Entire Sub-Collection Tree?