இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் – III

centeraction_en

கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN Server களுக்கும் இடையில் Encryption முறையில் தகவல்களைப் பரிமாறுவதால் எமது சேவை வழங்குனரால் (ISP) எம்மை பின்தொடர்வதோ நமது இணையப் பாவனையை கட்டுப்படுத்துவதோ சாத்தியமற்றதாக மாறுகிறது.

பொதுவாக VPNகள் எமது கணினியில் Virtual Network Adaptor ஒன்றை உருவாக்கி அதனூடாக தகவல்களைப்பரிமாறுவதால் எமது கணினி முழுமையான Anonymity நிலையில் இருக்கும். இதனால் எமது இணையத்தேடல்கள் மட்டுமன்றி SKYPE உரையாடல்கள், Chats, P2P பதிவிறக்கங்கள் எல்லாம் மறைமுகமானதாக பேணப்படும்.

VPN சேவைகள் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பது இதன் குறைபாடாகும். சில சேவைகள் குறித்தளவு Capacity data பரிமாற்றங்களை இலவசமாக வழங்குகின்றன இருப்பினும் இதன் வேகம் ஒப்பீட்டளவில் குறைவானதாகும்.

VPN சேவைகளில் என்னை மிகவும் கவர்ந்தது SumRando VPN சேவையாகும்.  மாதமொன்றுக்கு 1GB வரையான data பரிமாற்றத்தை அனுமதிப்பதாலும், ஒப்பீட்டளவில் மிதமான வேகத்தைக் கொண்டிருப்பதாலும் எமது இணையத்தேடல்களை Sumrando Server கள் சேமிப்பதில்லை என்பதாலும் இதனைப் பரிந்துரைக்கலாம்.

SumRando வினை உபயோகிப்பது மிகவும் இலகுவானது.

இங்கு சென்று SumRando Software யை தரவிறக்கிக் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.

https://www.sumrando.com/

உங்களுக்கென்று ஒரு Account உருவாக்கிக் கொள்வதன் மூலமோ அல்லது Anonymous User முறையிலோ SumRando Server களுடன் இணைந்து கொள்ள முடியும்.

Sumrando_Irfansky

 

2 

வெற்றிகரமாக இணைத்துக்கொண்டமையை பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம்.

3

அடுத்த பதிவில் இணையத் தணிக்கைகள் பற்றிய சில பொதுவான தகவல்களுடன் இத்தொடரை முடித்துக்கொள்வோம்.

Comments

  1. Good post. Thanks for sharing your knowledge. Keep continue......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்