விடைபெறுகிறது Windows XP
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்களுடன் ஒத்திசைவு (Hardware Compatibility) மற்றும் இன்னும் அன்றாட செயற்பாடுகளில் XP தனி இடத்தைப் பிடித்திருந்தது.
ஆதரவினை நிறுத்திக் கொள்ளல் (End of Support) என்றால் என்ன?
எமது அன்றாட கணினி பாவனையின் போது இயங்குதளத்தில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக இயங்குதள பாதுகாப்பு சிக்கல்கள், மென்பொருள் ஒத்திசைவு, வன்பொருள் ஒத்திசைவு என பல பிரச்சினைகள் எழலாம். இதற்காக குறைந்தபட்சம் வாரவாரம் Microsoft இற்றைப்படுத்திய தீர்வுகளை (Security Updates/ Hot fixes) வெளியிடும். இந்த updates கணினியின் சீரான இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
ஏப்ரல் 08, 2014 க்கு பிறகு Microsoft இவ்வகையான மேம்பாடுகளையோ தீர்வுப் பொதிகளையோ Windows XP க்கு வெளியிடாது.
இந்த ஆதரவு நிறுத்தத்தால் என்ன நிகழும்?
ஒன்றும் நிகழாது. XP பாவனையாளர்கள் தொடர்ச்சியாக கணினிகளை பாவிக்க முடியும். ஆனால் எவ்வித Update களும் மைக்ரோசாப்ட் இனால் வழங்கப்பட மாட்டாது அதாவது XP பாவனை “At your own Risk” என்பதுதான் இதன் அர்த்தம். மென்பொருள் வடிவமைப்பாளர்களும் வன்பொருள் உற்பத்தியாளர்களும் XP கணினிகளுக்கான ஆதரவினை எப்போதே நிறுத்திவிட்டார்கள். இதனால் புதிதான வன்/மென்பொருட்களை எமது XP கணினியில் நிறுவமுடியாமல் போகலாம்.
இருப்பினும் மைக்ரோசாப்ட் XP க்கான Anti Malware Update களை 2015 வரை தொடர்ச்சியாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான சிறப்பியல்புகளைக் கொண்ட அதுவும் பாவனையாளர்களால் இன்றுவரை விரும்பப்படும் இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் ஆதரவினை நிறுத்திக் கொள்ளக் காரணம் என்ன?
இயங்குதள பாதுகாப்பு (Security) என்பதே பிரதான காரணம். சுமார் 12 வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்ப அறிவுடன் XP தயாரிக்கப்பட்டது. இன்று தொழிநுட்பம் பாரியளவில் வளர்ச்சியடைந்த சூழலில் XP இல் காணப்படும் பாதுகாப்பு ஓட்டைகள் அதன் நம்பகத்தன்மைக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. கணினி வைரஸ் மற்றும் Malwareகளினால் இலக்கு வைக்கப்படும் பிரதான இயங்குதளமாக Windows XP காணப்படுகிறது.
Infection rate (CCM) by operating system and service pack in the fourth quarter of 2012 as reported in the Microsoft Security Intelligence Report volume 14
இரண்டாவதாக புதிய வன்பொருட்கள் மற்றும் புதிய மென்பொருள் தொழிநுட்பங்களுக்கு Windows XP ஆதரவு அளிக்காது. இதனால் அதிவேக கணினி செயற்பாடுகள், வசதிகள் XP யினால் சாத்தியமற்றுப் போகின்றன.
The table below compares the mitigation features supported by Internet Explorer 8 on Windows XP Service Pack 3 with the features supported by Internet Explorer 10 on Windows 8. As this table shows, Internet Explorer 10 on Windows 8 benefits from an extensive number of platform security improvements that simply are not available to Internet Explorer 8 on Windows XP.
என்ன தீர்வு?
அன்றாட கணினி பாவனைகளில் இந்த நிறுத்தம் பாரியளவில் மாற்றம் எதனையும் நிகழ்த்தப் போவதில்லை. குறிப்பாக இயங்குதள உரிமம் அற்ற (Pirate Copy) பாவனையாளர்கள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
ஆனால் அலுவலகங்கள், வங்கிகள், ATM இயந்திரங்கள் உடனடியான இயங்குதள மேம்பாட்டினை வேண்டி நிற்கின்றன.
XP இன் பின்னர் வெளிவந்த Microsoft யிற்கு மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக அமைந்த விண்டோஸ் 7 இயங்குதளம் XP பாவனையாளர்களின் அடுத்த தெரிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Sources: Microsoft Security Blog, Wikipedia.
Comments
Post a Comment