Zorin OS வின்டோஸ் 7 இற்கு சிறந்த மாற்றீடு

 


 
Zorin OS அண்மைய தேடல்களில் அகப்பட்ட மிக நேர்த்தியான லினக்ஸ் டெஸ்ட்ரோக்களில் ஒன்று. Ubuntu OS இனை கஸ்டமைஸ் செய்து Zorin இனை உருவாக்கி இருக்கிறார்கள். Ultimate, Core, Lite, Education என நான்கு ப்ளேவர்களில் கிடைக்கிறது. இதில் Ultimate, Zorin support உடன் கிடைப்பதால் $39 இற்கு விற்கிறார்கள். மற்றையவை இலவசம்.
இதில் Lite பதிப்பினை சுமார் 15 வருடப் பழமையான கணினிகளிலும் இன்ஸ்டால் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அதாவது குறைந்த பட்சம் 700MHz 32bit, 512MB RAM, 8 GB ஹார்ட் டிஸ்க் ஸ்டோரேஜில் இதனை இன்ஸ்டால் செய்ய முடியும். இது XFCE desktop environment இல் இயங்குகிறது.
Core பதிப்பு நமது சாதாரண கணினிகளில் இயங்கும். மிக அழகான look & feel இனைக் கொண்டது. Gnome desktop environment இல் இயங்குகிறது.
Core இனையும் LIte இனையும் பரீட்சித்துப் பார்த்துவிட்டேன். Windows 7 இல் இருந்து லினக்ஸ் இற்கு மாற விரும்புபவர்களுக்கு Zorin ஒரு
அருமையான
அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இன்று காலையில் இக்ராமின் லெப்டொப்பில் Zorin Lite இனை இன்ஸ்டோல் செய்தோம். சிறப்பாக இயங்குகிறது. அவரது கணினியின் கான்பிகரேசன் ஸ்கிரீன் சொட்டை இணைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME