Posts

It’s a guy thing

Image
வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சாப்பிடவும் நேரமில்லாமல் (சாப்பாடுமில்லாமல்) தனிமையில் அமர்ந்திருந்தேன்... வட்ஸ்அப்பில் கெமிஸ்ட்ரி... “அது என்ன ப்ரோபைல் பிக்சர்?” “பேட்மேன்” “வேலைப்பளு, பசி, தனிமை ஆனா நெனப்பு மட்டும் உங்களுக்கு சூப்பர் ஹீரோ... பேட்மேன்...” வேலைப்பளு, பசி, தனிமையில் இருந்தாலும் திமிராய் இருப்பதற்கு பெயர்தான்   “பேட்மேன்”  “It’s a guy thing” 

This has to be said!

A shout out to fellow Sri Lankans   Wrote this as a status in Facebook on 17th of June 2014 due to the attacks on the minority Muslims across Sri Lanka. I just thought of sharing it here hoping for a possibility of spreading to a vast crowd. If you come across this, please do share or don’t; up to you. Personally when I think of my past, me and my friends have born and raised inside a war zone. At the same time our older generation saw a war pushing out its leaf from a seed. Though our part wasn't too extreme like North did, we faced the similar problem. The police and army didn't know whether we were terrorist or not. When travelling to West, oddly we had to go through around 20 or more check points carrying our bags. The worst check point in our life was Mannampitiya . I remember the time when I had to remove the screws and show the inner compartments of my computer’s system unit just to let them know I am not carrying any bombs. There were worse times. I have seen bomb b...

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா?   நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது.  பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய  Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல்.  Tor போன்ற சமூக ஆர்வலர்களால் பராமரிக்கப்படும் சேவைகளிலதொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் நுழைந்து விடுவதும் உண்டு. .. பிறகு நமது அனானிமிட்டி அம்பேல். NSA எப்போதும் TOR சேவையில் ஒரு கண்வைத்திருக்கிறது.  எமது சாதாரண இணையப் பாவனையின்போது இணையத்தளங்களால் பாவனையாளரின் இலகுக்காக Cookie கள் உருவாக்கப்பட்டு நிரந்தரமாக எமது கணினிகளில் விட்டுவிடப்படுகின்றன. நாம் VPN களுக்கூடாக இணையத்தை பயன்படுத்தும்போது கூட இவ்வகையான Cookie கள் நமது உண்மையான அடையாளத்தை குறிப்பிட்ட தளங்களுக்கு வழங்கும் ஆ...

விடைபெறுகிறது Windows XP

Image
          சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்களுடன் ஒத்திசைவு (Hardware Compatibility) மற்றும் இன்னும் அன்றாட செயற்பாடுகளில் XP தனி இடத்தைப் பிடித்திருந்தது. ஆதரவினை நிறுத்திக் கொள்ளல் (End of Support) என்றால் என்ன? எமது அன்றாட கணினி பாவனையின் போது இயங்குதளத்தில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக இயங்குதள பாதுகாப்பு சிக்கல்கள், மென்பொருள் ஒத்திசைவு, வன்பொருள் ஒத்திசைவு என பல பிரச்சினைகள் எழலாம். இதற்காக குறைந்தபட்சம் வாரவாரம் Microsoft இற்றைப்படுத்திய தீர்வுகளை (Security Upda...

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் – III

Image
கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN Server களுக்கும் இடையில் Encryption முறையில் தகவல்களைப் பரிமாறுவதால் எமது சேவை வழங்குனரால் (ISP) எம்மை பின்தொடர்வதோ நமது இணையப் பாவனையை கட்டுப்படுத்துவதோ சாத்தியமற்றதாக மாறுகிறது. பொதுவாக VPNகள் எமது கணினியில் Virtual Network Adaptor ஒன்றை உருவாக்கி அதனூடாக தகவல்களைப்பரிமாறுவதால் எமது கணினி முழுமையான Anonymity நிலையில் இருக்கும். இதனால் எமது இணையத்தேடல்கள் மட்டுமன்றி SKYPE உரையாடல்கள், Chats, P2P பதிவிறக்கங்கள் எல்லாம் மறைமுகமானதாக பேணப்படும். VPN சேவைகள் இலவசமாகக் கிடைப்பதில்லை ...

Announcing Caller ID – Nokia Lumia

Image
One of legacy Nokia phones’ cool features is announcing caller name / number along with the ringtone. I thought Nokia has lost this feature on Windows Phone O/S, later I have found we can use this feature in all Lumias. To enable this feature, make sure your language/region is configured to English (United States) You can make sure via Settings –> System-> language + region –> Phone language: English (United States) Then back to Settings menu –> system-> ease of access: Enable Speech for phone accessibility That’s it. Additionally, By turning on Read aloud incoming text messages on the Speech settings you can assign announcing option for incoming messages.

இழப்புகள்

Image
       மாமி இறையடி சேர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி எனது நினைவலைகளை சிறிது பின்னோக்கி நகர்த்தியது. இன்னார் என்று குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மாமி ஒரு Icon கிடையாது. எனக்குத் தெரிந்த வகையில் தனது வாழ்நாளில் அதிக பொழுதுகளை தனிமையிலே கழித்த ஜீவன் அவர்கள். மாமா ஒரு பொறுப்பற்றவர். அவர்களுக்கு இரு ஆண்பிள்ளைகள். எனக்குத் தெரிந்து மூத்தவனை அவர்கள் வீட்டில் பார்த்ததில்லை. இளையவன் என்கூடவே இருப்பவன். மாமி எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள்.           பெரும்பாலும் நம் உறவினர்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். சிலர் நகரங்களில் குடியேறி இருப்பார்கள். அவர்களிடம் இருந்துதான் நாம் பல நவீனங்களை நாம் கற்றுக்கொள்வோம். என் தாய்வழி உறவுகளில் அநேகர் கிராமத்தில் இருப்பவர்கள். நான் இயல்பிலேயே ஒரு reserved type. யாரிடமும் ஒட்டுவதில்லை. குறிப்பாக உறவினர்களிடம் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை. இருப்பினும் அந்த நாட்களில் மாமி வீட்டுக்குச் செல்வதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. அந்த நேரம் அவர்கள் பாலமுனையில் இருந்தார்கள். வீடு அவர்களுக்கு சொந்தம...